saravanamuthu's படம்

தீபாவளி
---------

தீபாவளி அல்லது தீபஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசைமுன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்துபண்டிகையாகும்.

இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை.
இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.

தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை 3 மணிக்கு எழுவர்.
மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலானதென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர்.
அன்று அநேக பெண்கள் புடவையும்(குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர்.
அன்றுஇனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.
பரிசுகள் தந்து மகிழ்வர்.
பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம்(செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும்,சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள்,குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

======================விக்கி பீடியா==================

---------------------------------------------------

“நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்”
----------------------------------------------------

முடிந்தவரையிலும் தீபாவளித் திருநாளன்று காலை முதல் மாலை வரை தொலைக்காட்சியிலேயே மூழ்கிவிடாமல் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் வாழ்த்து சொல்லி குழந்தைகளுடன் மகிழ்ந்து கொண்டாடுவோம்!!!!!!!!!!
----------------------------------------------------

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

"முடிந்தவரையிலும் தீபாவளித்


10

"முடிந்தவரையிலும் தீபாவளித் திருநாளன்று காலை முதல் மாலை வரை தொலைக்காட்சியிலேயே மூழ்கிவிடாமல் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் வாழ்த்து சொல்லி குழந்தைகளுடன் மகிழ்ந்து கொண்டாடுவோம்!!!!!!!!!!" என்ற கருத்துக்குள்ளே என் விருப்பமும் அடங்கியிருக்கிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

தங்கள் கருத்துக்கு நன்றி


தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!

இப்பொழுது பண்டிகை நாட்களெல்லாம் வெறும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே எல்லோரும் மூழ்கிவிடுகிறார்களே!!!!

aaju's படம்

நண்பர்saravanamuthu,


3

நண்பர்saravanamuthu,
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
நன்றி!!!!!!!!!!!!


ஆஜு


saravanamuthu's படம்

நன்றி!!!


நன்றி!!!