ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி.
அவர் தலைமையில் போர் நடந்து கொண்டிருந்த சமயம்.
பத்துப் பதினைந்து போர் வீரர்கள் ஓர் உத்திரத்தைப் படாதபாடு பட்டு நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் குழுவின் தலைவன் குதிரையில் அமர்ந்தபடி அவர்களை அதட்டி உருட்டி வேலைவாங்கிக் கொண்டிருந்தான்.
அவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அந்த உத்திரத்தை நகர்த்த முடியாதபடி அதிகச் சிரமப்பட்டார்கள். வேகமாக அதட்டினான் அந்தக் குழுவின் தலைவன்.
அப்போது அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் தலைவனைப் பார்த்து, “அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே.. நீயும் அவர்களோடு சேர்ந்து அதை நகர்த்தக் கூடாதா? என்று கேட்டான்.
குழுத்தலைவன், “நான் யார் தெரியுமா? அவர்களின் தலைவன்... அவர்களோடு சமமாக நான் வேலை செய்ய முடியுமா?” என்று உறுமினான்.
குதிரையில் வந்தவன் இறங்கி, வீரர்களுக்கு உதவி, உத்திரத்தை நகர்த்தி அதன் இடத்தில் வைத்துவிட்டுப் பிறகு தனது குதிரையில் ஏறி அமர்ந்தான்.
அந்தக் குழுவின் தலைவனைப் பார்த்து, “இனி இப்படிக் கடினமான வேலை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். அவசியம் நான் வந்து உதவுகிறேன்” என்று உரக்கச் சொன்னான்.
“நீ யார்? உனக்கு எப்படிச் சொல்லி அனுப்புவது? உன் இருப்பிடம் எது? என்று அலட்சியமாகக் குழுத்தலைவன் கேட்டான்.
“நானா.... ஜார்ஜ் வாஷிங்டன். உங்கள் தலைமைத்தளபதி” என்று அழுத்தமாகக் கூறிவிட்டுக் குதிரையைத் தூண்டிச் சிட்டாகப் பறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்.
அந்த நாட்டு வெற்றியின் ரகசியம்!!
அடிமையாக ஆசைப்படும் மக்கள் நிலைமை ஆபத்தானது!
அடிமையாக்க ஆசைப்படும் சுயநலத்தலைமை ஆபத்தானது!!`
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
- saravanamuthu's blog
- Login or register to post comments
- 280 reads
கருத்துகள்
மிக அருமை
மிக அருமை 
உங்களில் ஒருவன்...
சத்யன் அ.
நண்பா....... ஈசனே மண் சுமந்த
நண்பா....... ஈசனே மண் சுமந்த கதைகள் நம் புராணத்தில் இருக்கிறது.அமெரிக்கர்களை உதாரண புருஷர்களாக சித்தரிப்பதை தயவுசெய்து தொடராதீர்கள்,நாம் உலகிற்கு நாகரீகம் கற்றுகொடுக்கும்போது அவர்கள் வெறும் ஆதிவாசிகள்.
Kaipulla
உதாரணத்திற்கு அமெரிக்கர்களை
உதாரணத்திற்கு அமெரிக்கர்களை எடுத்துக்கொள்ள தேவைஇல்லை என்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.. ஆனால் நண்பர் கூறியது அரசனைப்பற்றி, நீங்கள் கூறுவது ஈசன்(கடவுள்) என்ற பிம்பத்தைப்பற்றி..
கற்பனை வேறு, உண்மை வேறு நண்பரே...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..















