oruvaarthai's படம்


“தமிழ் வாழ்க வாழ்க”னு கோஷம் போட்டு வீட்டுக்கு விருந்தாளியா வந்த ஹிந்தியை “ஹிந்தி எதிர்ப்பு”ங்கிற பேர்ல துரத்தி விட்டுட்டோம். வழிய வந்த அந்த ஸ்ரீதேவியை சில சுயநலவாதிகள் சொன்னாகன்னு துரத்தி அடிச்சிட்டு இப்போ யாராவது ஹிந்திக்காரன் நம்ம ஊர்க்கு வந்து இது எந்த இடம்?னு ஹிந்தியில கேட்டா சொல்லத் தெரியாம “தேமே”ன்னு முழிச்சிக்கிட்டு நம்ம ஊர்லயே நாம வெட்கி தலகுனிஞ்சி நிக்குறோம்.
ஆனா தமிழ் வாழ்க ஹிந்தி வேணாம்”னு சொன்னவுக புள்ளைங்க பூராவும் இப்போ தமிழை விட ஹிந்திய சரளமா பேசுறாங்க...அவங்கள நம்பி பின்னாடி போய் கோஷம் போட்டவங்க புள்ளைங்க எல்லாம் இப்போ தமிழ்நாட்ட தவுத்து வேற எங்கயும் பொழப்பு நடத்த முடியாத சூழ்நிலை தான் நிலவுது.
வெறும் தமிழ்மொழியை மட்டும் பேச கத்துக்கிட்டு பக்கத்துலே இருக்குற மங்களூருக்கு போகக்கூட நமக்கு ஒரு சின்ன தயக்கம் வரும்.அங்க போயி இறங்குன உடனே “அடடா...பாஷை தெரியாத ஊர்ல எப்படிடா சமாளிக்கப்போறோம்”னு உள்ளுக்குள்ள உதறல் எடுக்க ஆரம்பிச்சிடும்...
இந்த உலகத்துல இருக்குற மொழிகள்லேயே எனக்கு ரொம்ப,ரொம்ப புடிச்ச மொழி தமிழ்தான்.“அன்பு”ங்கிற வார்த்தையை தமிழ்ல உச்சரிக்கும் போது மனசுக்குள்ள ஏற்படுற சுகமே அலாதிதாங்க. ”காதல்,இனிமை,தோழன்,குளிர்”ன்னு தமிழ் மொழியில் வர்ற வார்த்தைகளை நீங்க உச்சரிச்சி பாருங்க..,உங்க மனசுக்குள்ள ஒரு புது புத்துணர்ச்சியே வந்து போகும்.
இப்படி தமிழ்மொழியோட பெருமைகளை சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா,தமிழ் மட்டும் வளர்ந்து என்ன பிரயோஜனம்.அது வளர்றதுக்கு காரணமா இருக்குற தமிழனோட எதிர்காலம் நல்லா இருக்கனும்ல... அவனோட எதிர்காலம் நல்லா இருந்தாதானே “என்னை வாழ வெச்ச தமிழை என்னோட சந்ததிகளுக்கு நான் கத்துகுடுக்கப்போறேன்”னு கெளம்புவான்.

ஆனா இதெல்லாம் எங்க நடக்குது..,வெறும் பேச்சளவுலேயும்,விளம்பரப் பலகை அளவுலேயும் தான் இருக்கு. தமிழை படிச்சவங்களுக்கு மரியாதை இல்லைங்கிறது சமீபகாலமா நாம கண்கூடா பாக்குற விஷயம் தான். இன்னொரு பக்கம் தமிழை படிச்சிட்டு வந்தா வேலையும் கிடைக்காதுங்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்.இப்போ ஒருபடி மேல போயி தமிழ்ல படிக்க நீங்க ஆசைப்பட்டா உங்களுக்கு பேங்க் கடன் தராதுங்குற துர்பாக்கிய நிலை எல்லாம் நடக்க ஆரம்பிச்சிடுச்சி...

அந்த வேதனையான சம்பவம் தமிழ்நாட்டுலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமா,வறட்சி பூமிக்கு அடையாளமா சொல்லப்படுற ராமநாதபுரம் மாவத்துல தான் இந்தக் தமிழுக்கு எதிரான இந்தக் கொடுமை நடந்திருக்கு.அங்க கடலாடிக்கு பக்கத்துல இருக்குற பி.கிரந்தை ஊரைச் சேர்ந்த “பாலமுருகன்”ங்கிற மாணவனுக்குதான் இப்படி ஒரு நிலைமை.அப்பாவ  இழந்த அந்த வீட்டுல தன்னோட அம்மா, தம்பியோட குடியிருக்குற பாலமுருகன் பிளஸ்2 பரிட்சையில 819 மார்க் எடுத்து கௌன்சிலிங் மூலமா பட்டுக்கோட்டையில இருக்குற ராஜாமடம் அரசு பொறியியல் கல்லூரியில படிக்க போனவர் படிப்பு செலவுக்காக முதுகுளத்தூர்ல இருக்குற ஒரு பிரைவேட் பேங்க்ல கடன் கேட்டவருக்கு சரியான பதிலே இல்ல.
கடுப்பான பாலமுருகன் கலெக்டர் ஆபீஸ்ல நடந்த கூட்டத்துல தன்னோட தனக்கு கடன் தராதத பத்தி சொல்லியிருக்காரு அதுக்கு பேங்க் அதிகாரிங்க, “நீ தமிழ் மொழியில படிச்சாலும் எப்படியும் வேளை மட்டும் கிடைக்கப்போறதில்ல அப்புறம் எப்படி நாங்க கடன் குடுக்க முடியும்”னு சொல்லியிருக்காங்க இப்படி தமிழனோட எதிர்கால வாழ்க்கை தமிழனாலேயே பாதிக்கப்படுறது தமிழ்நாட்டுல மட்டும் தன் நடக்கும் போல இருக்கு.
இந்த பிரச்சனை சம்பந்தமா பாலமுருகன் என்ன சொன்னாரு தெரியுமா..? “தமிழுக்கு செம்மொழி மாநாடு நடந்த தமிழகத்தில தான் நான் தமிழ்மொழியில படிக்கிறதுக்கு கடன் தர மாட்டேங்கிறாங்க;  வேலை கிடைக்காதுன்னு பயமுறுத்துறாங்க;அதிகாரிகளே இப்படி நாங்க யார்கிட்ட போய் சொல்றதுன்னு எனக்கு தெரியல.ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் என்னோட படிப்பு செலவுக்கு பணம் மட்டும் குடுக்கலேன்னா படிப்பை நிப்பாட்டுறதை தவிர எனக்கு வேற வழியே இல்லை.”
சரிதான்...நிலமை இப்படியே போச்சின்னா தமிழ்கூட வாழும் ஆனா தமிழன்..?

6
Your rating: None Average: 6 (3 votes)
http://oruvaarthai.blogspot.com/2011/02/blog-post_9988.html

கருத்துகள்

VISWAM's படம்

(No subject)


3

Clap

yarlpavanan's படம்

உங்கள் எண்ணங்கள்


10

உங்கள் எண்ணங்கள் வலிமையானது
ஆனால், படிப்பைத் தொடருங்கள்....


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil