admin's படம்

தமிழ் நண்பர்களே

தமிழ் நண்பர்கள் குழுமம் மற்றும் இணையதளம் சார்பில் பதிவுப்போட்டிகள் அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

கீழ்காணும் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளோம்

  1. கவிதைப்போட்டி
  2. கட்டுரைப்போட்டி
  3. கதைப்போட்டி
  4. புகைப்படப்போட்டி

அனைத்து போட்டிகளுக்குமான பொதுவான விதிமுறைகள்

  1. கண்டிப்பாக உங்களது சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
  2. பதிவுகள் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் இருக்க வேண்டும். தமிழிலேயே கலந்துவிட்ட மற்ற சொற்களை தேவைக்கு ஏற்ப மட்டும் பயன்படுத்தலாம்.
  3. படைப்புகள் இதுவரை வேறெங்கும் வெளிவராததாக இருக்க வேண்டும்.
  4. அதிகமாக காதல் சம்பந்தமான பதிவுகள் வருவதால் இப்போட்டியில் காதல் சம்பந்தமான படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  5. ஒருவரே அனைத்துப்போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
  6. ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
  7. புகைப்படத்தைத்தவிர மற்ற பதிவுகள் கண்டிப்பாக தமிழில் (Unicode) தட்டச்சி அனுப்பப்பட வேண்டும்.
  8. போட்டிக்கு
    அனுப்பப்பட்ட பதிவுகளை பரிசு அறிவிக்கும் முன் வேறு எங்கும்
    வெளியிடப்படக்கூடாது. யாவருக்கும் அதை நீங்கள் எழுதியது என
    தெரிவிக்கக்கூடாது. அவ்வாறு தெரியப்படுத்தினால் அப்பதிவு போட்டியில்
    இருந்து நீக்கப்படும். 
  9. அடுத்தவரை கிண்டல் செய்யும்படியான பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  10. போட்டிக்கு பங்கேற்போர்கள் குழுமம் அல்லது தமிழ் நண்பர்கள் தளத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

கவிதைப்போட்டி

விதிமுறைகள்

  1. தலைப்பு: சமூகம் என் பார்வையில்
  2. குறைந்தது 25 வரிகள் இருக்க வேண்டும். அதிகமாக எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்
  3. ஒருவரியில் குறைந்த பட்ஷம் 3 சொற்கள் இருக்க வேண்டும். அதிகமாக எத்தனை சொற்களும் இருக்கலாம்
  4. ஒரு சொற்களைக் கொண்ட வரிகள் 5 வரிகள் வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
  5. ஆங்கில சொற்கள் வரக்கூடாது,
  6. பேச்சுவழக்கு அல்லது நாட்டுப்புற கவிதையும் அனுப்பலாம்
  7. கவிதை ஒரே கவிதையாக இருக்காவிட்டாலும் பல சிறு கவிதைகளைக்கொண்ட ஒரே தொகுப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

கட்டுரைப்போட்டி

விதிமுறைகள்

  1. தலைப்புகள்:
    1. மெல்லத் தமிழ் இனி சாகும்?
    2. அறிவியலும் அவசர உலகமும்
    3. அரசியலும் நாமும் 
    இந்த மூன்று தலைப்புகளில் எதில் வேண்டுமானாலும் உங்கள் கட்டுரை அமையலாம்.
  2. தமிழ் பேச்சு வழக்கு சொற்களை முடிந்தவரையில் தவிர்த்து சுத்தத் தமிழைப் பயன்படுத்தவும்
  3. ஆங்கிலச்சொற்களை மிகத்தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்தலாம்
  4. குறைந்தது 250 வரிகளாவது இருக்க வேண்டும்

கதைப்போட்டி

விதிமுறைகள்

  1. தலைப்பு: கதைப்போட்டிக்கு தனியாக தலைப்பு இல்லை. அவரவர் விருப்பப்பட்ட தலைப்பில் படைப்பை அனுப்பலாம்.

  • தேவையான இடத்தில் மட்டும் ஆங்கிலம் வரலாம். 
  • பேச்சு வழக்குச்சொற்கள் வரலாம்
  • சமூகப்பிரச்சனையையும் அதைத்தீர்க்கும் வழியையும் முன் வைக்கும் கதைக்கு முன்னுரிமை தரப்படும்
  • கதை, உரைநடை போலவோ, நாடகமாகவோ, திரைக்கதையாகவோ இருக்கலாம்
  • குறைந்தது 100 வரிகள் இருக்க வேண்டும்
  • புகைப்படப்போட்டி

    விதிமுறைகள்

    1. தலைப்பு: புகைப்படப்போட்டிக்கு தனியாக தலைப்பு இல்லை. அவரவர் விருப்பப்பட்ட தலைப்பில் படைப்பை அனுப்பலாம்.
    2. எடுக்கப்பட்ட படத்தை மென்பொருட்களினால் மாற்றப்பட்டிருக்கக்கூடாது
    3. படத்தின்
      குறைந்த பட்ச அளவு  640 Pixels Width x 480 Pixels Height இருக்க
      வேண்டும். அதிக பட்ச அளவு எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.
    4. படத்தின் உள்ளிணைந்த தகவல்கள் மாற்றப்பட்டிருக்கக்கூடாது
    5. படத்தில் உங்கள் பெயரோ வேறு அடையாளமோ சேர்க்கப்பட்டிருக்கக்கூடாது
    6. படம் கேமராவில் அல்லது மொபைலில் எடுக்கப்பட்டிருக்கலாம்
    7. படம் தெரிவு செய்யப்படுவது படத்தின் தெளிவை வைத்து இல்லாமல் எடுக்கப்பட்ட முறையை வைத்தே தீர்மானிக்கப்படும்



    படைப்புகள் அனுப்பும் முறை

    1. போட்டிக்கான படைப்புகளை தனியாக மின்னஞ்சலில் "tncontest@tamilnanbargal.com" முகவரிக்கு "தமிழ் நண்பர்கள் கவிதைப்போட்டி 2011", "தமிழ் நண்பர்கள் கதைப்போட்டி போட்டிகள் 2011", "தமிழ் நண்பர்கள் கட்டுரைப்போட்டி 2011" என்று அந்தந்த போட்டிவகையின் தலைப்பைக்குறிப்பிட்டு அனுப்பவும்.
    2. உங்களின் படைப்பிற்கு என தனித்தனி தலைப்பை நீங்கள் மடலில் குறிப்பிட வேண்டும்
    3. படைப்புகள் மார்ச் 25 தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். அதற்குப்பிறகு வரும் படைப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது

    படைப்புகள் தெரிவு செய்யும் முறை

    1. பதிவுகளை
      எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாமல் குழும மற்றும் இணைய தள உறுப்பினர்கள்
      பார்வைக்கு வைக்கப்பட்டு அதற்குக்கிடைக்கும் கருத்துகள், தரம்
      ஆகியவற்றையும் கணக்கிட்டு நடுவர்கள் பரிசிற்கான பதிவை தெரிவு செய்வார்கள்.
    2. நடுவர்களது தீர்ப்பே இறுதியானது
    3. போட்டிகளிலோ விதிமுறைகளிலோ மாற்றம் இருப்பின் பின்னர் தெரிவிக்கப்படும்

    பரிசுகள்

    1. அனைத்துப்போட்டிகளுக்கும் முதற்பரிசு பெறுவோர்க்கு ரூ. 1000 மதிப்புள்ள தமிழ் நூல்கள் வழங்கப்படும்.
    2. இரண்டாம் பரிசாக ரூ 500 மதிப்பிற்கான தமிழ் நூல்கள் வழங்கப்படும்.
    3. மூன்றாவது பரிசு ரூ 250 மதிப்புள்ள தமிழ் நூல்கள் வழங்கப்படும்.

    இப்போட்டிகளுக்களைப்பற்றிய கருத்தையோ வேறு உத்திகளையோ கூற விரும்பினால் tamil2friendsgroup@gmail.com

    முகவரிக்கு மடல் அனுப்பி, தெரிவிக்கலாம் அல்லது இதிலேயே கருத்தைப்பதியலாம்.

    நண்பர்களின் கருத்தையும், ஒத்துழைப்பையும், போட்டிக்கான பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம்

    மிக்க நன்றி

    6.92308
    Your rating: None Average: 6.9 (13 votes)

    கருத்துகள்

    kumaran's படம்

    (No subject)


    6

    Clap


    இ.குமரன்
    தலைவர்
    அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


    Selvakumarnew's படம்

    படைப்பாளர்களுக்கான அருமையான


    6

    படைப்பாளர்களுக்கான அருமையான வாய்ப்பு.......ந Clap ன்றி


    >>>Selvakumar<<<


    vinoth's படம்

    சொக்கா எங்கே இருக்கே.


    5

    சொக்கா எங்கே இருக்கே. இந்நேரம் பார்த்து ஆளைக் காணலியே..
    -- தருமி Smile


    வினோத் கன்னியாகுமரி
    வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
    உங்களுடன் நான்...


    rajudranjit's படம்

    என்ன தருமி! நாம் இங்கே தான்


    4

    என்ன தருமி! நாம் இங்கே தான் இருக்கின்றோம், கிடைத்ததா?

    vinoth's படம்

    ஹாஹா


    ஹாஹா


    வினோத் கன்னியாகுமரி
    வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
    உங்களுடன் நான்...


    VISWAM's படம்

    போட்டியென்று வந்தால்தான்


    5

    போட்டியென்று வந்தால்தான் அவரவர்களின் தனித் திறமைகள் வெளிப்படும். நல்ல ஆரம்பம். ஜூரிகளின் சிறப்புப் பரிசாக ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்குண்டான பரிசை நான் தருகிறேன். பண‌ம் அனுப்பிவைக்கிறேன். பண‌மாகவோ இல்லை அதற்கு ஈடாக தமிழ் நூல்களைப் பரிசாக வழங்குகள். பணம் அனுப்ப வேண்டிய விவரம் தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

    sugiri's படம்

    (No subject)


    6

    Clap


    வாழ்க வளமுடன்

    அன்புடன்
    ஸுகிரி
    http://sugiridh.wordpress.com/


    yarlpavanan's படம்

    படைப்பாளர்களுக்கான அருமையான


    10

    படைப்பாளர்களுக்கான அருமையான வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றி. இம்முயற்சி தொடர வாழ்த்துகிறேன். Clap


    யாழ்பாவாணன்.
    http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
    தூய தமிழ் அறிவோம்:
    https://www.facebook.com/nattamil


    admin's படம்

    பலரின் வேண்டுகோளிற்கு இணங்க


    5

    பலரின் வேண்டுகோளிற்கு இணங்க கவிதைப்போட்டிக்கு குறைந்தது 25 வரிகள் என குறைக்கப்பட்டுள்ளது.

    நன்றி


    தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com


    paramaswari's படம்

    (No subject)


    5

    Clap

    sathish8411's படம்

    :clஅப்: தமிழை வளர்க்கும்


    10

    Clap :clஅப்:

    தமிழை வளர்க்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது

    Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap

    sathish8411's படம்

    தமிழை வளர்க்கும் உங்கள்


    10

    Clap

    தமிழை வளர்க்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது

    Clap Clap Clap Clap Clap Clap Clap Clap Clap

    rajudranjit's படம்

    கவிதைப்போட்டியில் கலந்துக்க,


    4

    கவிதைப்போட்டியில் கலந்துக்க, கவிதையை பதிவு செய்து அனுப்பினால் அதில் சர்வர் பிரச்சனையா இருக்கு, எனவே வேறுமுறையில் அனுப்ப உதவி வேண்டும், செய்யுமா தமிழ்நண்பர்கள் தளம்?

    admin's படம்

    நண்பரே படைப்புகளை


    5

    நண்பரே

    படைப்புகளை tncontest@tamilnanbargal.com முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும். என்ன பிரச்சனை வருகிறது எனத்தெரிவித்தால் அதை சரிபடுத்த இயலும்.

    நன்றி


    தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com


    Tamizh's படம்

    தமிழனே தமிழின் சிறப்பினை


    10

    Innocent Smile
    தமிழனே தமிழின் சிறப்பினை மறந்து வரும் இக்காலத்தில் தமிழனை தமிழால் இணைக்கும் தங்களின் முயற்சி மேன்மைக்குரியது.
    தமிழ் ஆர்வலர்களின் திறனை வளர்க்கும் படியான போட்டிகள் வரவேற்கதக்கவை. தமிழச்சியின் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    தளத்திற்கு புதியவள் என்பதால் படைப்பினை பதிவு செய்யும் முறை தெரியவில்லை. என் படைப்புகளைப் போட்டிகாக அல்லாமல், தங்களது தளத்தில் வெளியிட விரும்புகிறேன். இயலும் முறையை தெரிவிக்க விரும்புகின்றேன். Quest
    teddy Clap Clap Clap Clap Clap

    udhaygeee's படம்

    arumaiyana vaaipu....


    8

    arumaiyana vaaipu.... payanpaduthungalll tholargaley....


    G.Udhay..
    Nanbargalukaaga..


    admin's படம்

    தமிழ் நண்பர்கள்


    5

    தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள் 2011 க்கு படைப்புகள் அனுப்பிய அனைவருக்கும் மிக்க நன்றிகளைக் கூறிக்கொள்கிறோம்.

    போட்டி முடிவுகள் பற்றிய விபரம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.

    நன்றி


    தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com