admin's படம்

அன்பார்ந்த தமிழ் நண்பர்களே

நமது தமிழ்நண்பர்கள் தளத்தில் பதிவுப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு பதிவுகள் அனுப்புவதற்காக கடந்த மார்ச் 25 தேதி வரை கால அவசாசம் தரப்பட்டிருந்தது.
ஆனால் மொத்தமே 11 நபர்களே தங்கள் பதிவுகளை அனுப்பிவைத்திருந்தார்கள் என்பது வருத்தமான விஷயமாக உள்ளது.

பதிவு அனுப்பியவர்கள் விபரம்
=============================

1 பிரசாத் வேணுகோபால்
2 Sugiri
3 jeyalakshmi
4 Muhammad
5 Maraimalai Radha Maraimalai Radha
6 Malathi Arulmani
7 sentamildasan s
8 Jeevalingam Kasirajalingam
9 kumar
10 malathi Arulmani
11 உதயன்

நிறைய பதிவுகளில் இருந்து போட்டியிட்டு சிறந்த பதிவைத் தெரிவு செய்வதே சிறந்த போட்டியாக இருக்க முடியும். ஆனால், சில பதிவுகளே வந்திருப்பதால் இதை ஒரு போட்டி என கணக்கில் எடுத்துக்கொள்ள இயலவில்லை. தயவு செய்து மன்னித்துக்கொள்ளவும்.

ஆனால், பதிவுகள் அனுப்பி போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்களையும் போட்டியில் வெற்றியாளர்களாக அறிவிக்கிறோம்.
எனவே, போட்டியில் அறிவித்தபடி அனைவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. அனைவருக்கும் ரூ 500 மதிப்பிலான நூல்கள் வழங்கப்படும்.

இந்நூல்களை அவர்களே தமக்குத்தேவையான நூல்களைத் தெரிவு செய்து வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. நூல்களை எங்கே எப்படி வாங்க வேண்டும் என்ற விபரம் அவர்களுக்கு இன்னும் இரு தினங்களில் தனி மடலாக அனுப்பி வைக்கப்படும்.

தங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.
இனி வரும் போட்டிகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

நன்றிகள்

--
தமிழ் நண்பர்கள்

5.25
Your rating: None Average: 5.3 (8 votes)

கருத்துகள்

VISWAM's படம்

நல்ல காரியம் செய்தீர்கள்.


5

நல்ல காரியம் செய்தீர்கள். யாரும் வருத்தப்படாமல் எல்லோரையும் மனமகிழ்ச்சி அடையவைத்துவிட்டீர்கள். வாழ்த்தூக்கள். போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனவருக்கும் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். Clap Clap Clap Clap Clap

sentamildasan's படம்

போட்டியாளர்களின் பதிவுகளை


4

போட்டியாளர்களின் பதிவுகளை வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். எவ்வாறு தமது படைப்புகளை படைத்துள்ளார்கள் என்று அறிந்தால் மற்றவருக்கும் நலம்பயக்கும் என நினைக்கிறேன். நன்றி!

malathi's படம்

11 போட்டியாளர்கள் தான் என்பது


4

11 போட்டியாளர்கள் தான் என்பது வருத்தமாக உள்ளது.


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


saravanamuthu's படம்

போட்டியாளர்களின் பதிவினை


5

போட்டியாளர்களின் பதிவினை வெளியிட்டால் நன்றாக இருக்கும்

சரவணமுத்து

yarlpavanan's படம்

சோதனை மேல் சோதனை "11


10

சோதனை மேல் சோதனை
"11 போட்டியாளர்கள் தான் என்பது வருத்தமாக உள்ளது. ஆனால், பதிவுகள் அனுப்பி போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்களையும் போட்டியில் வெற்றியாளர்களாக அறிவிக்கிறோம்.
எனவே, போட்டியில் அறிவித்தபடி அனைவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. அனைவருக்கும் ரூ 500 மதிப்பிலான நூல்கள் வழங்கப்படும்." என்னும் கருத்துக்கள் உள்ளத்தைச் சுட்டன.
எப்படியாயினும் தொடர்ந்தும் போட்டிகள் நடாத்த வேண்டும். "இனி வரும் போட்டிகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்." என்ற தமிழ் நண்பர்கள் தள அறிவிப்பை எல்லோரும் பினபற்றுவோமாக.
போட்டிகள் என்பது படைப்பாளி முன்னேற உதவும் ஊக்க மாத்திரையே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajamanibalaji's படம்

Respected Sir and your entire


Respected Sir and your entire TEAM,

This is Balaji from Tiruvarur. As a beginner, i have only one request you that kindly release more competitions further. Then only i can participate myself as well as communicate and also comeout myself in the ''tamilnanbargal.com

With Thanks, RajamaniBalaji Sad Cry

admin's படம்

நண்பர்களே தமிழ் நண்பர்கள்


5

நண்பர்களே

தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டி 2011 ல் பங்கு கொண்ட அனைவருக்கும் இன்று பரிசு விபரமும் நூல்களை எப்படி தெரிவு செய்ய வேண்டும், எங்கே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது போன்ற விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள். இனிவரும் போட்டிகளில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

மிக்க நன்றி.


தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com