அன்பு நண்பர்களே... வெகு நாட்களாக தமிழ் வலைப்பதிவில் எனது கருத்துக்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேற களம் கிடைத்திருக்கிறது....
என்றும் இளமையாய், இனிமையாய், வளமையாய், வரலாராய், வள்ளுவனையும் பாரதியையும் வளர்த்தெடுத்த, உலக மொழி அத்தனைக்கும் முன்தோன்றிய மூத்தவளாம் நம்மை இணைக்கும் முதுமொழியாம் தமிழால் ஒன்றுபடுவோம்....... என்றும் சிந்தனையில் தமிழை இருத்தி, செயலில் தமிழராய், தமிழின் தொண்மை மாராமல், தமிழர் எனும் அடையாளத்தை இழக்காமல் இருப்போம்..
அன்னிய மொழி தவிர்ப்போம், தமிழ் மொழி காப்போம், தமிழை தரணியெங்கும் தழைக்க செய்வோம்..
மொழிக்கலப்படம் தவிர்ப்போம், என்றும் இன உணர்வுடன் இருப்போம், இனத்தையும், இனமானத்தையும் காப்போம்....
உலகத்துக்கே ஒளியாய் இருப்போம்.......
- barathiganesh's blog
- Login or register to post comments
- 393 reads
கருத்துகள்
அன்னிய மொழி தவிர்ப்போம்,
அன்னிய மொழி தவிர்ப்போம், தமிழ் மொழி காப்போம், தமிழை தரணியெங்கும் தழைக்க செய்வோம்.. 
இந்தியனாக பிறந்ததினால்
இந்தியனாக பிறந்ததினால் இருமாப்புண்டு! தமிழனாக பிறந்ததினால் தன்னடக்கம் வந்துவிட்டது இது எல்லோருக்கும் பொருந்தும்! தமிழ் எனும் மொழியில் இல்லாதது எது? விஞ்ஞானம்,அணு கணிதம், இதிகாசம்,புராணம், காவியம், மருத்துவம் இப்படி பல பல.
தமிழில் மனிதனுக்கு வாழ்க்கையில் அவசியமானது எதுவோ அது பண்டைய காலம் தொட்டே குறிப்புகள் உண்டு. ஆனால் நாம் அவற்றை சரியான முறையில் பின்பற்றாத ஒன்றே நமது தவறு!
உலகத்தார் போற்றும் மொழி என்றால் அதற்க்கு முதலிடம் தமிழாக தான் இருக்கும்!(விவரம் அறிந்தவர்கள்)
தமிழ் வாழ்க! ஆனாலும் "ழகரம்" லகரமாக உச்சரிக்கப்படுவதால் தமிழன் லட்சாதிபதியாகவில்லையே என்ற கவலையும் உண்டு எனக்கு! வியாக்கியானம் பேசுவதை குறைத்து தமிழன் விவரமாக இருந்தால் மிக்க நன்று!









