vinoth's படம்

ஜிமெயிலில் படங்களுடன் பல நிறங்களில் கையெழு்த்து

உலகின் முன்னணி மின்னஞ்சலே சேவை நாம் அனுப்பும் மடல்களின் கீழே நமது பெயரை தாமாகவே கையெழுத்தாக வைத்துக்கொள்ளும் வசதியை கொண்டிருப்பது நாம் அறிந்ததே.

ஆனால் முன்பு இதில் மடலில் வருவது போல படங்கள், நிறங்களுடன் பெயர்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தது. ஆனால் தற்போது அந்த வசதியை கூகுள் நீக்கி கையெழுத்திலும் படங்கள், பல வடிவங்களில் எழுத்துகளை வைக்கும் வசதியை உருவாக்கி உள்ளது.

உங்கள் கூகிள் settings பக்கம் போய் உங்கள் விருப்பப்படி கையெழுத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.

இதில் படங்களை இணைக்க கணினியில் இருக்கும் படங்களை மேலேற்றி இணைக்கும் வசதி இல்லை.

அதற்குப்பதிலாக இணையத்தில் கிடைக்கும் படங்களின் முகவரியை மட்டும் கொடுக்குமாறு செய்யப்பட்டுள்ளது.

எனவே உங்கள் படங்களை கூகிள் பிக்காசோ ஆல்பத்தில் பப்ளிக் ஆல்பம் உருவாக்கி அதில் மேலேற்றிவிட்டு அந்த படத்தின் மேல் right click செய்து "copy image location" எடுத்து அதை இங்கே Paste செய்தால் போதும். இதேபோல நீங்கள் வலைப்பூவில் மேலேற்றிய படங்களின் முகவரியையும கொடுக்கலாம்.

0
Your rating: None

கருத்துகள்

Ragavan's படம்

நன்றி....


நன்றி....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..