minmalar's படம்

சென்சார் படங்கள்

பொதுவாக Censor என்ற வார்த்தை Examine செய்வது, தேவையில்லாத விஷயங்களை மறைப்பது போன்ற அர்த்தங்கள் இருந்தாலும் எனக்கு (நமக்கு!) சென்சார் என்றாலே பலான காட்சிகளை தான் நினைவு - படுத்துகிறது. சென்சார் போர்டு என்ற அமைப்பே தேவையில்லை என்று சிலரும், சென்சார் போர்டு ஒழுங்காக தங்கள் கடமையை செய்வது இல்லை என்று பலரும் காலங்காலமாக குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை. ஒரு படத்தில் அனுமதிக்கப்பட்ட காட்சி/ வசனம் மற்றொரு படத்தில் மறுக்கப்பட்டுள்ளது. கிளாமரின் அளவுகோலும் படத்துக்கு படம் மாறுகிறது. காரணம் பல இருந்தாலும் யார் படம், யார் ஆட்சி என்பதும் பல விஷயங்களை முடிவு செய்வதால் சென்சார் போர்டை ஒரு நல்ல அமைப்பாக கருத முடியாது என்று தான் தோன்றுகிறது

6
Your rating: None Average: 6 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

எது


6

எது எப்படியிருப்பினும்
சென்சார் போர்ட்
இளசுகளைக் கெட்டுப் போக வைக்கும்
காட்சிகளை வெட்டுவதில்லையே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


selvakumaar's படம்

பட தனிக்கை குழு என்பது இன்று


6

பட தனிக்கை குழு என்பது இன்று மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எப்படி எனில் தமிழகத்தில் ஒரு சில காட்சிகள் வெட்டிவிடுவார்கள் என்று தெரிந்து வேறு மாநிலத்தில் சான்றிதழ் வாங்கிவிடுவின்றனர். இன்றைய தமிழ் திரைப்படங்கள் கதையை அல்லாமல் நடிகைகளின் கவர்ச்சியியை நம்பியே இருக்கின்றது. கண்டிப்பாக குத்தாட்டம் வைக்கின்றனர் ஏன்னென்றால் நமக்கு தெரிந்ததுதான் பட வருமானத்திற்குத்தான். அரிதாக சில யதார்த படங்களும் நன்றாக வெளிவந்து வெற்றிப்பெறுகின்றன. எனக்கு தெரிந்தவரையில் தமிழ் திரைப்படம் இளைஞர்களைக் குறிவைத்தே எடுக்கப்படுகின்றன.


அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்