அன்பு தமிழ் நண்பர்களே
தங்கள் உற்சாகம் மிகுந்த பங்கேற்புகளுக்கும் படைப்புகளுக்கும் தமிழ் நண்பர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது தளத்தில் இதுவரை படைப்புகளை சொந்த படைப்பாக போடவும் அதன் கீழ் உங்கள் வலைதள முகவரியை போடவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பதிவின் கொஞ்சத்தை மட்டும் போட்டு வலைதள முகவரிக்கு இட்டுச்செல்வது தடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் பலர் இதே தளத்தில் பதிவுகளை போடாமல் அவரவர் வலை தளங்களில் பதிவுகளை போட்டு அதன் முகவரியை மட்டும் மற்ற தங்களில் பதியவிரும்புவர். இதே வசதியை இப்போது நாம் நம் தளத்தில் சுவர் மூலம் செய்ய அனுமதி உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதாவது உங்கள் வலைதளங்களின் பதிவுகளின் முகவரியை தமிழ் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் விபர பக்கத்தில் சுவர் பகுதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
இதில் 500 எழுத்துகள் வரை நீங்கள் தட்டச்சலாம்.
தளத்திலேயே முழுப்பதிவாக பதியும் போது இவ்வாறு கொஞ்சம் பதிவைப்போட்டு முகவரியை போடுவது முன்பு போலவே தடுக்கப்பட்டுள்ளது
தளத்தின் எல்லா நண்பர்களின் சுவர் பதிவுகளைப் பார்க்க தமிழ் நண்பர்கள் Wall Posts பக்கத்திற்குச் செல்லவும்
அவரவர் விபர பக்கத்தில் அவரவரது சுவர் பதிவுகள் மட்டும் வழக்கம் போல காண்பிக்கப்படும்.
கூடுதல் வசதியாத இந்த சுவர் பதிவிற்கு மற்றவர் கருத்து சொல்லும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
அனைவரின் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி
தமிழ் நண்பர்கள்
- admin's blog
- Login or register to post comments
- 489 reads
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...














