மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,ஒட்டு மொத்த இந்திய அணியின் ஆட்டம் ஆகியவற்றால் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தொடரை பறிகொடுத்திருக்கிறது இந்தியா
எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடும் லட்சுமனும் சோடை போனார்.திராவிடும் பெரிய அளவில் சோபிக்கவில்லை
விராட் கொக்லியின் சதம் இளம் வீரர்களை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்பதை காட்டுகிறது
சச்சினின் 100 வது சதம் எப்போது என காத்திருந்து மோசம் போனது இந்த தொடரிலும்!.அவர் சதத்தை விட இந்தியாவின் வெற்றி தேவைப்படுகிறது இப்போது !
பல மாதங்களாய் பார்மில் இல்லாத ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கை சிறப்பான பார்முக்கு (ஆட்டத்திறன்) கொண்டு வந்ததே நமது பந்து வீச்சாளர்களின் சாதனை இந்த தொடரில் !
ஒரு டெஸ்டையாவது சமன் (drawn) செய்ய கூட முடியாத வகையில் சுருட்டி வீசி விட்டது ஆஸ்திரேலியா இந்தியாவை !
உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா என்பது உண்மையாகி விட்டது
மேலும் பல செய்திகள் மற்றும் கவிதைகளுக்கு எனது தளம்
கவிதைகள்
- premtamil's blog
- Login or register to post comments
- 166 reads









