கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் கேட்கப்பட்ட சில வினாக்கள்-விடை தெரிந்தவர்கள் கூறலாம்.
1.செல் கொள்கையை உருவாக்கியவர்-டார்வின்/மெண்டல்/ஸ்க்வான்/ஒப்ரான்
2.வட்ட வடிவ ஜீனோம் அல்லாத டி.என்.ஏ எவ்வாறு அழைக்கப்படுகிறது?-ஏற்கும் செல்/பிளாஸ்மிட்/கசையிழை/பைலஸ்
3.ஒரு கி.கி நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1மீ.வி2 அளவை அடையத்த தேவையான விசையை கணக்கிடுக.-1N/2N/3N/4N
4.எக்ஸ் கதிரை கண்டறிந்தவர்?-J.J.தாம்ஸன்/ஃபாரடே/ராண்ட்ஜன்/ஹென்றி பெக்கொரல்
5.எலக்ட்ரான் ஏற்கும் வினை......எனப்படுகிறது.-எரிதல்/சிதைவுறுதல்/ஆக்சிஜனேற்றம்/ஒடுக்கம்
6.வட்டத்தின் சுற்றளவு-2பைஆர்/பைஆர் ஸ்கொயர்/பைஆர்ஸ்கொயர் பார்4/பைஆர்
7.42வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றபட்ட ஆண்டு-1947/1950/1963/1976
8.சேலம்,நாமக்கல்,தர்ம்புரி,தஞ்சாவூர்,நாகப்பட்டிணத்தில்பாய்கிற ஆறு-வைகை/காவிரி/தாமிரபரணி/செய்யாறு.
9.முதல் த்ரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு-கிபி1194/கிபி1191/கிபி1193/கிபி1195
10.ஆசாத் ஹிந்த் பாஜ் என்றழைக்கப்படுவது-இந்திய தேசிய ராணுவம்/பிரிட்டிஷ் தேசிய ராணுவம்/பாகிஸ்தான் தேசிய ராணுவம்/பிரெஞ்சு தேசிய ராணுவம்
11.இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு-1950/1949/1951/1952
12.மாநில ஆளுநர்.....வயதை நிரம்பியவராக இருக்க வேண்டும்-30/35/40/45
13.x2+10x+21=0 என்ற சமன்பாட்டின் தீர்வுக் கணம்-(7,3)/(7,-3)/(-7,3)/(-7,-3)
14.இந்திய தேர்தல் ஆணையம்......உறுப்பினர்களை கொண்ட ஓர் அமைப்பு ஆகும்-1/2/3/4
15.களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்-கடுங்கோன்/சிம்மவிஷ்ணு/மாறவர்மன்/அச்சுதன்
16.'நரை முடித்து சொல்லால் முறை செய்த சோழன்'-குலோத்துங்கன்/முதலாம் இராஜேந்திரன்/கரிகாலன்/விஜயாலயன்
17.இந்தியா விடுதலை பெற்ற 50வது ஆண்டு தொடங்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம்-மூன்றாம்/எட்டாம்/பத்தாம்/ஒன்பதாம்
18.இமயமலையின் வடகிழக்குப்பகுதி 300செ.மீ அதிகமாக மழை பெற காரணமாக இருக்கும் கிளை-வங்காளவிரிகுடா/அரபிக்கடல்/காம்பேவளைகுடா/கொங்கன்கிளை
19.கெண்டை மீனின் உடலில் உள்ள செதில்கள்-பிளக்காய்டு/சைக்ளாய்டு/டீனாய்டு/கானாய்டு
20.கொல்லப்பட்ட தடுப்பூசிகளுக்கு உதாரணம்-காலரா/பிசிஜி/டிபிடி/டிடி
21.வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு-0.01மி.மீ/0.01செ.மீ/0.1மீ/0.001செ.மீ
22.வெண்கலத்தின் இயைபு யாது?-காப்பர்,வெள்ளீயம்/காப்பர்,துத்தநாகம்/காப்பர்,இரும்பு/துத்தநாகம்,இரும்பு
23.1+tan2@ ன் மதிப்பு-cos2@/sec2@/cosec2@/cot2@
24.இந்தியா பின்பற்றும் ஆட்சிமுறை-பாராளுமன்ற மக்களாட்சி/குடியரசுத்தலைவர்/அரசர்/சர்வாதிகாரம்
25.முதல் இருப்பு பாதை 1853ம் ஆண்டு....க்கு இடையில் நிறுவப்பட்டது-டில்லி மற்றும் கல்கத்தா/பம்பாய் மற்றும் கல்கத்தா/பம்பாய் மற்றும் தானே/பம்பாய் மற்றும் சென்னை
26.டேனியர்கள் வணிகத்தலம் அமைத்த இடம்-பாண்டிச்சேரி/காரைக்கால்/தரங்கம்பாடி/சென்னை
27.யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது?-ஆங்கிலஅரசு/இந்துக்கள்/முஸ்லீம்கள்/கிறித்துவர்கள்
28.'குயில்' இதழின் ஆசிரியர்-கண்ணதாசன்/பாரதியார்/சுரதா/பாரதிதாசன்
29.இந்தியாவின் மான்செஸ்டர்-சென்னை/மும்பை/டெல்லி/சேலம்
30.'மின்னார் வணங்குந்தெய்வம்' என குறிப்பிட்ட நபர்-குசேலர்மனைவி/அணங்கனார்/கண்ணன் மனைவி/அனுசூயா
31.குதுப்மினாரை கட்டத் தொடங்கியவர்-இல்டுமிஷ்/குத்புதீன்ஐபக்/ரஸியா/பால்பன்
32.தமிழ்நாட்டில் பின்வரும் வகையிலான ......கட்ட கிராம உள்ளாட்சி அரசு செயல்படுகின்றது-1/2/3/4
33.இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பரப்பளவின் அடிப்படையில் தமிழ்நாடு-------இடத்தை வகிக்கிறது-11/2/3/7
34.2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை-1.027billion/1.037/1.047/1.057
35.சமுதாய முன்னேற்றத்தின் விளை நிலம்-பள்ளி/கல்லூரி/பல்கலைக் கழகம்/அலுவலகம்
36.ரூ.5,000க்கு 5%ஆண்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி-ரூ.250/ரூ.500/ரூ.750/ரூ.800
37.சூரிய ஒளியின் புறூதாக்கதிர்களால் ஏற்படும் புற்று நோய்-தோல்/இரத்தம்/நுரையீரல்/எலும்பு
38.எது தனிக்கனி அல்ல.?-நெட்டிலிங்கம்/பெர்ரி/பெப்போ/ட்ரூப்
39.ஒரு a.m.u என்பது எதற்கு சமம்-139Mev/391Mev/931Mev/936Mev
40.3 மற்றும் 6ன் மீ.பொ.வ-1/2/3/6
- kumaran's blog
- Login or register to post comments
- 490 reads






