saravanamuthu's படம்

நீயா?நானா?

“மக்களால் துரத்தப்பட்டு நான் ஓடித் தப்பியதாக அவர் கூறுகிறார். ஏன், முன்பு அவரை மக்கள் துரத்தவில்லையா? அவர் ஓடித் தப்பவில்லையா” என்று கேட்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

இவர், ‘அவர்’ என்று குறிப்பிட்டிருப்பது, இன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை!

இவர்கள் இருவருமே, இப்படி அரசியல் செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. காரணம் இதுதான் ‘திராவிடர் ஸ்டைல்’ அரசியலாக, அண்ணா காலத்திலிருந்தே தொடரும் மரபு.

சட்டப்போரவையில், கடந்த ஆட்சி பற்றிக் குறிப்பிடும்போது, ஏதாவது புராண காலத்து உதாரணங்களைக் கூறுவது திராவிடக் கட்சிகளுக்கு கைவந்த கலை.

அந்த வரிசையில் கருணாநிதியை துரியோதனன் என்று ஒருவர் கூறிவிட்டார். அதற்கு ஒரு கரெக்ஷன் கொடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

“துரியோதனனாக கருணாநிதியை விமர்சிக்கக் கூடாது ஏனென்றால், துரியோதனன் சாகும் வரை முடிசூடா மன்னனாக இருந்தான் கருணாநிதி, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டவர்” என்பதே அவர் கூறிய திருத்தம்.

விடுவாரா கருணாநிதி? சுடச்சுட அதற்கு பதில் அறிக்கை கொடுத்திருக்கிறார். துரியோதனனாக என்னை விமர்சிக்கக் கூடாது என கூறியுள்ள ஜெயலலிதா, துரியோதனன் சாகும் வரை முடிசூடா மன்னனாக இருந்தான்.

கருணாநிதி, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டவர் என கூறியுள்ளார். ஏன்? 1996 மற்றும் 2006ல், தமிழக மக்களால் ஜெயலலிதா விரட்டப்படவில்லையா?” என்று கேட்டிருக்கிறார் அவர்

இரு தரப்பினரும், கடந்த காலத் தேர்தல்களில் தோல்வியுற்றுள்ளார்கள். அது ஒன்றும் ரகசியம் கிடையாது. அதைச் சொல்வதற்கு தமிழக சட்டப்பேரவைக்கு துரியோதனன் வரவேண்டிய அவசியமெல்லாம் கிடையாது. இந்த விவகாரத்தில், இருவரில் ஒருவராவது, தமக்கு நேர்ந்ததை நேரடியாக ஒப்புக் கொண்டிருந்தால், அதுதான் நேர்மையான அரசியல்.

”ஆம். எனது ஆட்சியையும் மக்கள் தூக்கியெறிந்தது நடந்திருக்கிறது. அந்த ஆட்சியில் எமது நடவடிக்கைகள் மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதைத் திருத்தி, புதிய ஆட்சி ஒன்றைக் கொடுப்பதற்காகவே இன்னமும் அரசியலில் இருக்கிறேன்” என்று இருவரில் ஒருவராவது கூறியிருந்தால்?

ரொம்பத்தான் பேராசைங்களா நமக்கு?

http://viruvirupu.com/2011/08/31/8215/
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===============================================

படித்ததில் பிடித்தது!!

5.25
Your rating: None Average: 5.3 (4 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய


5

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே! Cook

yarlpavanan's படம்

தன்னிடம் சரக்கில்லாட்டி மாற்ற


7

தன்னிடம்
சரக்கில்லாட்டி
மாற்றானை
சுட்டிக்காட்டுவதே
அரசியல்...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

இந்த நிலை என்று மாறுமோ?


5

இந்த நிலை என்று மாறுமோ?

Thilaga's படம்

ரெண்டு பேரும் சேர்ந்து நம்மை


4

ரெண்டு பேரும் சேர்ந்து நம்மை விரட்டாமல் இருந்தால் சரிதான்!!!! Oups Oups