அக்டோபர் திங்கள் உதித்த சூரியன்
அணுவுலகில் எங்கள் கதா நாயகன்
இராமேஷ்வரத் தீவில் கிடைத்த முத்து
இந்தியாவின் அழியா சொத்து
நேற்று வயிற்றிற்காக விற்ற செய்தித்தாள்களும்
இன்றைய வரலாற்றில் செய்தியாகிவிட்டது
உன் சிந்தனையில் ஏவிய நுட்பங்களை
சிறந்த கலத்தில் விதைத்தாய்
அது வளர்ந்து நிலவைத் தொட்டுவிட்டது
எங்கள் கேள்விக்கும் பதில் கிட்டிவிட்டது
பதவிகளுக்கு பெருமை சேர்த்தாய்
பதக்கங்களுக்கு அழகு சேர்த்தாய்
அக்கினிச்சிறகில் பயணங்கள் செய்ததால்
அக்கினியிலும் உன் பெயர் ஒலிக்கிறது
பொக்ரானில் உன் கைரேகைகள் சிரிக்கிறது
உன் கனவுகள் உறக்கம் விழித்து
எங்கள் சோம்பலை கிழித்து
உழைப்பை விதைத்து அதற்கு
ஊதியம் பெறும் நாள் வெகுதூரமில்லை
- king68's blog
- Login or register to post comments
- 4171 reads



