கன்னி IME Transliteration JavaScript Library
கன்னி (Kanni) என்ற பெயரில் இணைய தளங்களுக்கான தட்டச்சியை (IME Transliteration JavaScript Library) வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கன்னி தட்டச்சி இலவசமானது. இணையதளங்களுக்கானது. நீங்கள் கன்னியை உங்கள் இணையதளங்களிலோ வலைதளங்களிலோ இணைத்து தங்கள் பயனாளர்களுக்கு தமிழ் தட்டச்சி வசதியை வழங்கலாம்.
முன்பு தமிழ் நண்பர்கள் சார்பில் indic_script என்ற தட்டச்சி ட்ரூபால் இணையதளங்களில் செயல்படுமாறு கோபி அவர்களின் தகடூர் தட்டச்சியை பயன்படுத்தி வெளியிடப்பட்டு இருந்து. தற்போது முற்றிலுமாக மாற்றி எழுதப்பட்ட தட்டச்சியை ட்ரூபால் தளங்களில் மட்டுமல்லாது அனைத்து தளங்களிலும் பயன்படுத்துமாறும் செவ்வுரை பெட்டிகளிலும் (HTML Editors) செயல்படுமாறும் மற்றும் பல புதிய வசதிகளையும் இணைத்து வெளியிடுகிறோம்.
எவ்வாறு செயல்படும்?
நீங்கள் "ammaa" என ஆங்கிலத்தில் தட்டச்சும் போது கன்னி தட்டச்சி அதை தமிழில் அம்மா என மாற்றி அமைக்கும்.
DEMO
தட்டச்சி முறைகள்
கன்னி தட்டச்சியானது தற்போது பேச்சுமுறை தட்டச்சியையும், டைப்ரைட்டர் முறை தட்டச்சியையும் கீழே காணப்படும் மொழிகளுக்கு வழங்குகிறது.
- தமிழ்: பேச்சுமுறை, டைப்ரைட்டர், Tamil 99
- ஹிந்தி: பேச்சுமுறை, டைப்ரைட்டர், ஹிந்தி ரெமிங்டன்
- மலயாளம்: பேச்சுமுறை, டைப்ரைட்டர்
- பெங்காலி: பேச்சுமுறை, டைப்ரைட்டர், பெங்காலி யூனிஜாய்
- குஜராத்தி: பேச்சுமுறை, டைப்ரைட்டர்
- கன்னடா: பேச்சுமுறை, டைப்ரைட்டர்
- ஒரிசா: பேச்சுமுறை, டைப்ரைட்டர்
- பஞ்சாபி: பேச்சுமுறை, டைப்ரைட்டர்
- தெலுங்கு: பேச்சுமுறை, டைப்ரைட்டர்
மேலும் பல மொழிகளுக்கான தட்டச்சி முறைகளை இணைத்து வருகிறோம்...
கன்னி என்ற பெயர்
கன்னி என்ற பெயர் ஏன் தெரிவுசெய்யப்பட்டதற்கான காரணம் மிக எளிது. நபரின் பெயர்களோ அல்லது இடத்தின் பெயர்களோ அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது. இப்பயன்பாட்டை படிக்கும் வேற்று மொழி நபர்களுக்கு தமிழில் கன்னி என்ற ஒரு சொல்லின் பொருளையாவது தெரியப்படுத்தவே கன்னி என்ற பெயர் தெரிவு செய்யப்பட்டது.
தரவிறக்கம்
நன்றிகள்
- Core library Author: வினோத் கன்னியாகுமரி
- Language mapping Author: கோபாலகிருஷ்ணன் (கோபி)
மாற்றங்கள்
0.5: CkEditor ல் கன்னி வேலை செய்யும்!
தங்களது ஆலோசனைகளை தயவு செய்து தெரிவிக்கவும். கன்னியை பயன்படுத்தும் போது பிரச்சனைகள் வந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கலாம்.
- admin's blog
- Login or register to post comments
- 575 reads

















