Aathiraa's படம்

         இன்று என் பெருமதிப்பிற்குரிய என் மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்ட பேராசிரியர் முனைவர். இராம. வேனுகோபால் இறைவனடி சேர்ந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் என்ற அறிவிப்புடன் எனக்குச் செய்தி கிட்டிய போது நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில். அப்போது மணி மூன்றரை. .நான் துவண்டு
சோர்ந்த போதெல்லாம் அன்பு நீர் தெளித்து என்னை துளிர்க்கச் செய்த அந்த அன்பு .தெய்வமான பேராசிரியரின் முகமலரைக் கூடக் காணும் பேறு பெறாத துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்துகிறேன். அவர் இறுதியாக கையொப்பமிட்டது என் முனைவர் பட்ட அறிக்கையில்.என்பதும் அவர் இறுதியாக்ச் சொற்பொழிவு ஆற்றிய மாநாடு எங்கள் அமைப்பான பைந்தமிழ்ச்சோலையில்தான் என்பதும் எண்ணும்போதெல்லாம் கண்ணீர் வரியிடுகிறது கன்னங்களில்.

        அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த போது “அடப் போம்மா’ என்னத்தக் கட்டிக்கிட்டுப் போகப்போறோம்; நீ உத்தரவு போடும்மா; நான் செய்து முடிக்கிறேன். இங்கு நீதான் தலைவி. நான் உன் அடிமை” என்றெல்லாம் விளையாட்டாகச் சொலவதுடன் வேண்டிய அனைத்தையும் எனக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்களுக்கும் செய்து அவர்களை மகிழ்வித்த அன்பின் இருப்பிடம் அவர்.
 

         “நம்மை மறந்தாரை நாம் மறந்தறியோம்; ஏம்மா மாசத்துக்கு ஒரு முறையாவது ஒரு போன் பண்ண மாட்டியா என்று அன்புடன் கடிந்து இன்று ஒரு வைவா வா; இன்று ஒரு செமினார் வா” என்று அன்பு அழைப்பு விடுக்கும் அன்பை எண்ணி மனம் கசிந்து உருகுகிறது. நானும் அதிகமாக உரிமை எடுத்துக்கொண்ட பேராசிரியர் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்.
“எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வாம்மா... நான் சொல்லச் சொல்ல நீ எழுதி முனைவர் பட்ட ஆய்வேட்டை ஒப்படைத்து விடும்மா” என்று ஆயிரம் முறை கூறிய அந்த அன்பை எப்படி மறப்பது?
               
        சிறு சிறு விதி மீறல்களால் ஒரு மாணவர் பயனடைவார் என்றால் அதனால் பரவாயில்லை என்று கூறி எவ்வாறாயினும் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்று அவர்களின் நலனில் அக்கறை காட்டும் கனிவை எண்ணி பல முறை வியந்துள்ளேன். எதையும் வெளிப்படையாகப் பேசும் வெள்ளை மனத்தால் மாணவர்களின்
             மனங்களையெல்லாம் கொள்ளை கொண்ட அவர் ஆன்மா சாந்தி அடையவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் அடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மனம் கொள்ளாச் சுமையுடன்....

4.75
Your rating: None Average: 4.8 (4 votes)
http://tamilnimidangal.blogspot.com/2011/11/blog-post_28.html

கருத்துகள்

yarlpavanan's படம்

தங்கள் துயர் பகிர்வில்


6

தங்கள் துயர் பகிர்வில் இணைகிறேன்.
உங்கள் ஆசிரியரின் வழிகாட்டல்
என்றும் அவரை நினைவூட்டும்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

துயரில் பங்கெடுக்கிறோம்.


4

துயரில் பங்கெடுக்கிறோம். அன்னார் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sugiri's படம்

ஆசிரிய பணி உன்னத பணியாக


4

ஆசிரிய பணி உன்னத பணியாக கருதப்பட்டாலும் ஆசிரியர்களை மதிப்பவர்கள் பொதுவாக மிக குறைவு. உங்கள் ஆசிரியர் மிகவும் கொடுத்து வைத்தவராக இருந்திருக்க வேண்டும். இத்தனை அன்பான மாணாக்களை அவர் எங்கிருந்தாலும் வாழ்த்திக்கொண்டு தான் இருப்பார்.

அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்! அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


rajudranjit's படம்

ஆற்றொனா துயரமே! அன்னாரின்


5

ஆற்றொனா துயரமே! அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்! நல்லவர்கள் எப்போதும் நன்றி மறவாதவர்களின் மனங்களில் வாழ்கின்றார்கள்!