அமெரிக்காவின் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் எல்லாம் சிறப்பாக இருந்தன.
ஆனால் பல மாடி கொண்ட கட்டடத்தில் மேலே போய் வரும் லிப்ட் வெகு மெதுவாக இயங்கியது
பலருக்குப் பிடிக்கவில்லை.
வெளியே லிஃப்டுக்குக் காத்திருப்பவர்கள் கோபம் அடைந்தார்கள். உள்ளே, மெதுவாக மேலே போகும் போது உள்ளிருப்பவர்கள் எரிச்சல் அடைந்தார்கள்
புகார் புத்தகத்தில் அதே குறை திரும்பத் திரும்ப எழுதப்பட்டது.
லிஃப்டை மாற்றினால் ஹோட்டலுக்குப் பல லட்சம் செலவாகும்.
விரைவுப் படுத்த வாய்ப்பே இல்லை.
பல முறை ஆலோசனைக்கூட்டம் நடத்தியும் பலனே இல்லை.
முடிவில் ஒரு சாதாரண ஊழியர் லிஃப்டின் உள்ளேயும் வெளியேயும் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடிகளைப் பொருத்தச் சொன்னார்.
உள்ளிருக்கும் நபர்கள் தங்கள் முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்க்கும் ஜோரில் லிஃப்டின் தாமதத்தை மறந்தனர். வெளியே இருப்பவர்கள் காத்திருக்கும் நேரத்தில் தங்கள் தோற்றத்தைச் சரி செய்து கொள்வதில் செலவழித்தினர்.
புகார் புத்தகம் தப்பித்தது!
-----------------------------
சுகிசிவம் புத்தகத்தில் ரசித்தது!!!!
- saravanamuthu's blog
- Login or register to post comments
- 370 reads








