கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தும்
நம்மால் ஏன் அவரை காண முடியவில்லை?
அதற்க்கு காரணம் நம் மனம்தான்
நம் மனதில் கடவுளை பற்றிய பலவிதமான
கற்பனைகள் நிறைந்துள்ளன
பொதுவாக நாம் கடவுளை பல வடிவங்களில் இருப்பதாக
கற்பனை செய்து வைத்துகொண்டு
அதை கடவுள் என்று வழிபடுகின்றோம்
இந்த எண்ணம் எல்லோரின் மனதிலும்
ஆழமாக பதிந்துவிட்டது
பிறந்ததிலிருந்தே நாம் அப்படிதான் வழிபாடு
செய்ய கற்பிக்கபட்டிருக்கிறோம்
அந்த எண்ணத்தை தாண்டி நம் சிந்தனை செல்வதில்லை
அப்படி செல்லவும் நம்மை சுற்றியுள்ளவர்களும்
நம்மை விடுவதில்லை
கோடிகணக்கான மனிதர்களில் பகவான் ரமணர்
போன்றவர்கள்தான் இந்த எண்ணத்திலிருந்து
வெளியே வந்து சில உண்மைகளை
வெளிப்படுத்தி அதன்படி வாழ்ந்தும் காட்டினர்
ஆனால் அவர் வெளிபடுத்திய உண்மைகளை இந்த உலகம்
இன்னும் புரிந்துகொள்ளவில்லை
மாறாக அவரையே கடவுளாக்கி சிலை வைத்து
கோயில் கட்டி வழிபாடு செய்ய ஆரம்பித்துவிட்டனர்
எத்தனையோ மகான்கள் புற வழி பாடுகளை
மேற்கொண்டாலும் அவர்கள் எழுதிய நூல்களில்
தெளிவாக இறைவன் நமக்குள்ளேதான் இருக்கின்றான்
என்று எழுதி வைத்துள்ளதை யாரும் கவனிப்பது கிடையாது
அக வழிபாட்டிற்கு முக்கியத்வம் அளிக்காமல் புற வழிபாட்டிலேயே
தங்கள் வாழ்நாள் முழுவதையும் வீணடித்து இறைவனை
அறியாமலேயே மீண்டும் பிறப்பு இறப்பு சுழலில்
சிக்கிக்கொண்டு அவதி பட்டுகொண்டிருக்கின்றனர்.
நன்றி : enpaarvail /http://tamilbloggersunit.blogspot.com
- VISWAM's blog
- Login or register to post comments
- 307 reads
கருத்துகள்
நல்ல கருத்துக்கள்
நல்ல கருத்துக்கள்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil







