AANMEKAN's படம்

 ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி

Innocent சூரியன் பிரகாசிக்கும் வெட்டா வெளியில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுக்கிடக்கிறது.சூரியஒளி அதன்மேல் பட்டுப் பிரதிபலித்து,அருகிலிருக்கும் ஒர் இருட்டறைக்குட் சென்று சுவற்றில் படுகிறது,கண்ணாடியிலிருந்து இருட்டறையின் உட்சுவற்றிற் படும்வரையில் உள்ளது சூரியனது ஒளிக்கதிர்.இந்த ஒளிக்கதிர் உதவியால் அந்த இருட்டறையில் உள்ள பொருளை ஒருவன் காணமுடிகிறது.இந்த ஒளிகதீர்வீச்சு அறையின் சுவற்றில் படும்போது கண்ணாடித்துண்டின்உருவம் எதுவே அவ்வுருவ முடைய தாகவேதான் காணப்படுகிறது,ஆனால் வெட்டா வெளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனது நேர் ஒளியோ மூல ஒளியோ அகண்டமாய்,எங்குமாய்,ஏகமாய்,உருவ எல்லை ஏதும்மற்றுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது,,, இதில் கொஞ்சம் கவனம் தேவை,,,
வெட்டா வெளி சூரிய ஒளி போன்றதே நம் இருப்புணர்வான ஆன்மா வுணர்வு,கண்ணாடியிலிருந்து அறையின் உட்சுவர் வரையிலும் நீண்டுள்ள ஒளி க்கிரணம் போன்றதே மன அறிவு அல்லது தேகாத்மபுத்தியாகிய அகந்தையுணர்வு.சூரியனது பரந்த நேர் ஒளிபோல் எல்லை குறிப்பிட முடியாத்தால் ஆன்மா உணர்வுக்கு உருவ உபாதி யில்லை,,, கண்ணாடியின் அளவையும்,வடிவத்தையும் போல தேக அளவாகவும்,வடிவாகவும் நான் என்று உணரப்படுவதால் அகந்தைக்கு ஒர் எல்லையும்,வடிவமும் உண்டாகிவிடுகிறது,இப் பிரதிபலன ஒளியே உபயோகித்து அறையினுள் உள்ள பொருள்களை அறிவது போல இம் மன அறிவை உபயேகித்தே உடல் உலகம் அறியபடுகிறது,

இது தொடரும் doctor

0
Your rating: None

கருத்துகள்

AANMEKAN's படம்

அந்த இருட்டறையில் இருக்கும்


அந்த இருட்டறையில் இருக்கும் ஒருவன் அறையில் உள்ள ஒளியால் அங்குள்ள இதர பொருள்களை பார்ப்பதைச் சற்று நிருத்திவிட்டு “இவ் ஒளி எங்கிருந்து வருகிறது”?,,என்று அவ்ஒளிமூலத்தை காண விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதைகாண விரும்பினால் அவ்ஒளி சுவற்றில் எப்பாகத்தில் படுகிறதோ அதில் தன் கண்களை வைத்துபார்க்கவேண்டும். அப்போது அவன் காண்பதென்ன?,,சூரியன்!,,,,ஆனால் இப்போது அவனால் காணப்படுவது உன்மையான சூரியன் அல்ல!,,,அது சூரியனது பிரதிபின்பமே! அதுமட்டுமன்றி அச் சூரியன் அறைக்கு வெளியில் எங்கோ தரையில் ஒரிடத்தில் கிடப்பதாகவே அவனுக்கு தோன்றும்!ஆனால் உன்மையில் சூரியன் அப்படியா தரையில் கிடக்கிறது? இல்லை ஆனால் உன்மையான சூரியனை காண்டுணர அவன் விரும்பினால் என்ன செய்யவேண்டும்?,,ஒளிவரும் நேர்க்கோட்டிலேயே புறம் போகாமல் தன் கண்களை வைத்து பார்த்துக்கொண்டே,தனக்கு உணர்வாகிற பிரதிபிம்ப சூரியனை நோக்கி நகரவோண்டும்,

அறைக்குள் வந்தபிறதிஒளிக்கிணத்தால் அறையில் உள்ள இதரப் பொருள்களை கண்டு ஆராய்ந்துகொண்டிருப்பதில் உள்ள ஆசையே விட்டு,இவ் வெளிமூலத்தைப் பார்க்க கிளம்புபவனைப் போலவே,, மனஅறிவால் விளங்கும் பற்பல உலகங்களையும் ஐம்புலன்களால் கண்டு,மோகித்து அவைகளை பெற விரும்பியோ அல்லது (நம் விஞ்ஞானிகளைபோல )அவைகளை ஆராய்ந்து கொண்டே இருப்பவன் உன்மை ஒளியே (ஆத்மாவை) உணரமுடியாது ஆகையால் அதைவிட்டுவிடவோண்டும்.அறைக்குள் விளங்கும் ஒளி கிரணம் எங்கிருந்து வருகிறது என்று காணவிரும்புவது போலவே,,,இம் மன அறிவாகிய நான் என்ற அகந்தை எங்கிருந்து வருகிறது என காணவிரும்புவதாகும்!,இவ் விருப்பமே ஸ்வாத்மபக்தி.ஒளிகிரணத்தின் நேர்கோட்டில் தன் கண்களை விலகாமல் வைப்பது போன்றதே நான் என்ற உணர்வினின்றும் தன்கவனத்தை நிருத்தும் ஏகாக்கிரதை.அப் பிரதிபின்ப ஒளிகிரகணக் நேர்கோட்டிலேயே நகர்ந்து அம் மனிதன் வெளிற்கிடக்கும் கண்ணாடி தூண்டை நோக்கிச் செல்கிறான் என்றால் இதுவே இதையத்தை நோக்கி உள் ஆழ்தல்,,
எழும்பும் அகந்தை எழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள்காண வேண்டி- முழுகுதல்போல்
கூர்ந்தமதி யால்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே
ஆழ்ந்தறிய வேண்டும் அறி,,,

dharshi's படம்

உண்மையாகவா?


உண்மையாகவா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

ஆமா இதுதான் தந்திரசாதனை இதை


ஆமா இதுதான் தந்திரசாதனை இதை புரிந்து செயல்பட்டால் அனுபரீதியில் உணரலாம்,,,,ஆமா இதன் விழக்கம் உனக்கு புரிந்ததா,,

dharshi's படம்

ம்ம் புரிந்தது


ம்ம் புரிந்தது


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

இன்னும் இதன் தொடர்ச்சி


இன்னும் இதன் தொடர்ச்சி உண்டு,,

dharshi's படம்

அதையும் சொல்லுங்க


அதையும் சொல்லுங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

சந்தேகம் வந்தால் தான்


சந்தேகம் வந்தால் தான் விழக்கம் வரும்,,,

paramaswari's படம்

ஒரு சந்தேகம்: விழக்கமா?


ஒரு சந்தேகம்: விழக்கமா? விளக்கமா? [விளக்கம்தான்]

AANMEKAN's படம்

எழுத்து தவறுதல்லாகிவிட்டது


எழுத்து தவறுதல்லாகிவிட்டது மன்னிக்கவும் விளக்கம்தான்,,,நன்றி..

selva_red's படம்

நன்றி


நன்றி