nirupan's படம்

ஒரு இலக்கியத்திற்குரிய
பாடு பொருட்கள்
பல இருந்தும்,
எழுது கோல் கொண்டு
எழுத முடியாதவாறு
கண்காணிப்புக்கள்
அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு
வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன!

வரலாறுகளாக பதிவேட்டில்

செதுக்கப்பட வேண்டிய
குறிப்புக்கள் யாவும்
இன்று பூட்ஸ் கால்களின் கீழ்
அமிழ்ந்தும், நசியுண்டும்,
பச்சை சீருடையின் சாயத்தினால்
நிறம் மாறியும்
கைகளினை சேராது
காணமற் போய் விட்டன!
எப்போதும் தேவைகள் பற்றிய
சிந்தனைகள் மனதில் வர
மனிதர்கள் பற்றிய விருப்பங்கள்
உள் மனம் அறியாத 
புது உணர்வு போல
பட்டெனத் தொற்றிக் கொள்கின்றது!
’’ஐங்கரன் வீட்டிற்கு
பல மாதங்களின் பின்னர்
அவசர அலுவலுக்காய்
உதவியொன்றைப் பெறும் நோக்கில்
மெதுவாக அடியெடுத்து வைத்தேன்’’
வழமையான உரையாடலாய்
அன்று வார்த்தைகள்
வர மறுத்தன - காரணம்
அவன் வீட்டு சுவரில்
தங்கையாகிய என் பள்ளித் தோழி
நினைவஞ்சலிப் படமாக
தொங்கிக் கொண்டிருந்தாள்!
ஒட்டியும் ஒட்டாதும் சொற்கள்
விலகிச் செல்ல,
ஒவ்வொன்றாகப் பிடித்து
சேர்த்து வைத்துக் கொள்ள
முயற்சி செய்தும்
என் நாவிடம் நான்
தோற்றுப் போனேன்!
ஈழம் நனைந்து
நிறம் மாறிய
கொடிய செங்குருதி
மழையின் பின்னர்
சிதைக்கப்பட்ட வெளித்தெரியாத
சீழ்ப் பருக்கைகளாக
இருக்கும் வரலாற்று வடிவத்தினை
ஐங்கரனின் வீட்டிலும் நான் கண்டேன்!
இச்சையினைத்
தீர்த்து கொள்ள
இடமேதுமின்றி
செத்த பிணங்களினைப்
புணர்ந்து பிரித் ஓதும்
வம்சத்தின் கோரப் பிணிக்கு
பு(ன)ணர்வாழ்வு முகாமிலிருந்த
அவன் தங்கை

ஆளாகியிருந்தாள்,

இறுதியில் எல்லாம்
நிகழ்ந்தேறியதும்
வெற்றுடலை மட்டும்
தம் புணர்ச்சியின் எச்சங்களோடு
சேர்த்து வீதியிலே
போட்டு விட்டுப் போய் விட்டார்கள்!
எதிர்த்து(க்) கேள்வி கேட்டல்
இருப்பை குலைப்பதால்
வாய்கள் யாவும் இங்கே
துப்பாக்கி முனைகள் கொண்டு
அடைக்கப்பட்டிருக்கிறது!
வெள்ளரசுகளுக்கு உரமாக- எம்
சகோதரிகளின் தீட்டுத் தண்ணீரும்,
வேட்கையினைத் தீர்த் கொள்ள
இறந்து போன பெண்மையின்
வெறுங் கூடுகளும்
தேவை என்பது
மஞ்சள் துணியால் போர்த்தப்பட்டு
சிகப்புச் சால்வை சுற்றப்பட்ட நாட்டில்
எழுதப்படாத விதியாகி விட்டது!
புனர்வாழ்வு முகாம் என்பது,
இன்று
எம் காதுகளில்
புணர்- பின் வாழ்வழி 
எனும் தொனியில்
எம் செவிப்பறைகளில்
ஒலித்து(க்) கொண்டிருக்கிறது!

5.33333
Your rating: None Average: 5.3 (6 votes)
http://www.thamilnattu.com/2011/07/blog-post_8106.html

கருத்துகள்

rajudranjit's படம்

மனம் ந‌டுங்கும் கொடூரம்!


4

மனம் ந‌டுங்கும் கொடூரம்! ஈழத்தின் சோகம்! துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டும் உயிர் காக்க வேண்டிய கடமை மறந்து காமத்தின் மூலம் இனப்பகை தீர்க்கும் கொடூர ஆட்சிக்கு எதிராய் துப்பாக்கி தான் தீர்வு காணும்!

உலகத்தின் பார்வை உண்மையில் உதவுவதில்லை, ஐ.நா என்பது சில வல்லரசுவின் எடுபிடி!

nirupan's படம்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி


உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ, ஆனால் இன்றைய கால கட்டத்தில், போரில் அவலப்பட்ட மக்கள், மீண்டும் ஓர் போரைச் சந்திக்கத் தயாராக இல்லை. ஆகவே மாற்று வழியில் தீர்வேதாவது கிடைத்தால் சந்தோசமே.

rajudranjit's படம்

மனம் ந‌டுங்கும் கொடூரம்!


4

மனம் ந‌டுங்கும் கொடூரம்! ஈழத்தின் சோகம்! துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டும் உயிர் காக்க வேண்டிய கடமை மறந்து காமத்தின் மூலம் இனப்பகை தீர்க்கும் கொடூர ஆட்சிக்கு எதிராய் துப்பாக்கி தான் தீர்வு காணும்!

உலகத்தின் பார்வை உண்மையில் உதவுவதில்லை, ஐ.நா என்பது சில வல்லரசுவின் எடுபிடி!

yarlpavanan's படம்

ஈழவர் உண்மை நிலை பொருத்தமான


10

ஈழவர் உண்மை நிலை
பொருத்தமான படங்கள்
சிறந்த வரிகள்
எல்லாம்
நன்றாகச் சுட்டிக் காட்டுகிறது!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


nirupan's படம்

நன்றி சகோ.


நன்றி சகோ.

joshi2010's படம்

வணக்கம்.... உள்ளத்தின்


5

வணக்கம்....

உள்ளத்தின் வலிகளை வெளிக்காட்டும் வரிகள் அருமை..... ஈழத்தில்.... மறு வாழ்வு மையங்கள் சிங்களவர்கள் தமிழ்ப் பெண்களை புணர்வதற்காகவே அமைக்கப்பட்டதாகவே தெரிகின்றது....... அஹிம்சையை விரும்பிய புத்தனும் இன்று..... ஹிம்சையாக மாறி விட்டான்.....


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


nirupan's படம்

நன்றி சகோ.


நன்றி சகோ.

ivar's படம்

நிருபன் உங்களது பதிவு மிக


3

நிருபன் உங்களது பதிவு மிக வேதனைக்கு உள்ளானதுதான் ,இது யாவும் முடிந்தவை .முடிந்தவை பற்றி வேதனை படலாம் ஒழிய நம்மால் என்ன செய்ய இயலும் ,ஆனால் இதோ இங்கையே சென்னையில் முகாம்களில் இன்னும் நம் சகோதர, சகோதிரிகள் கஷ்ட படுகிறார்கள் ,இதற்கு ஏன் வெளிநாட்டில் வசதியாக வாழும் இலங்கை தமிழர்கள் ஒன்றினய்த்து ஒரு அமைப்பே உருவாக்கி அவர்களுக்கு உதவ முன்வரவில்லை,யுத்தத்துக்கு அவர்கள் உதவிய பணத்தில் ஒரு சதவிதம் உதவினால் கூட இங்குளோர் வாழ்கை யுத்தத்தில் இருந்து மீளுவார்கள் ,ஆகையால் என் தனிப்பட்ட கருத்து, நடந்து முடித்த கசப்பான நினைவுகளை முன்திரை இட்டு காட்டாமல்,நடக்கின்ற கொடுமைகளையும் கொஞ்சம் சொல்லுங்கோ ,தவறு இருந்தால் மண்ணிகவம்.இங்கு நடக்கும் கொடுமைகளையும் நாம் அடுத்த பதிவில் விவாதிப்போம் ,வேலியே பயிரே மேய்கின்ற கதைகளும் நெறைய இருக்கிறது.அகதி முகாம்களில் நான் பெரியவன் என்று அவனே கொள்ளை அடிக்கும் கதைகளும் இருக்கிறது . நன்றி


ivar


nirupan's படம்

அன்பிற்குரிய சகோ, எல்லாம்


அன்பிற்குரிய சகோ, எல்லாம் முடிந்தவைகள் அல்ல, இது போன்ற ஒரு சில விடயங்கள் இன்றும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதலால் தான் இதனைப் பதிவாக்கினேன். தங்களின் ஆலோசனைக்கு அமைவாக, வெகு விரைவில் முழுமையான தகவல் விபரங்களோடு, தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து, அவற்றின் இன்றைய நிலையினையும் விளக்கி ஓர் பதிவினை வெகு விரைவில் எழுதுகின்றேன்.
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி சகோ.

saravanamuthu's படம்

வேட்கையினைத் தீர்த்


4

வேட்கையினைத் தீர்த் கொள்ள
இறந்து போன பெண்மையின்
வெறுங் கூடுகளும்
தேவை என்பது
மஞ்சள் துணியால் போர்த்தப்பட்டு
சிகப்புச் சால்வை சுற்றப்பட்ட நாட்டில்
எழுதப்படாத விதியாகி விட்டது!
புனர்வாழ்வு முகாம் என்பது,

---------------------- வருத்தமான விசயந்தான்!!!

உலகத்தின் பார்வை உண்மையில் உதவுவதில்லை, ஐ.நா என்பது சில வல்லரசுவின் எடுபிடி!--- உண்மைதான் நண்ப்ரே!

nirupan's படம்

தங்களின் கருத்துக்களுக்கு


தங்களின் கருத்துக்களுக்கு நன்றி சகோ.