oruvaarthai's படம்

“தொர இங்கிலீஷ்லாம் பேசுது”ங்கிற மாதிரி கடந்த ஒருவார காலமா லிபியா மேட்டர்ல உலகநாட்டு தலைவர்களோட மனிதாபினம் நம்மளை ரொம்பவே புல்லரிக்க வெச்சிருச்சிங்க.., மெடிக்கல் ஷாப்புக்கு போயி இந்த அரிப்புக்கு ஏதாவது மருந்து இருக்கான்னு கேட்டா “இல்ல சார்,இந்த அரிப்புக்கு அமெரிக்கால மட்டும்தான் மருந்து கெடைக்கும்.அதுவும் ஒபாமாவோட வெள்ளை மாளிகையில ஒரு மெடிக்கல்ஷாப் இருக்கு அங்க மட்டும்தான் இந்த மருந்து கெடைக்கும்ன்னு சொன்னாய்ங்க..,அந்தளவுக்கு வந்தா போவாத ஒரு புல்லரிப்பு போங்க.

லிபியாவுல நடந்துட்டு வர்ற மக்கள் புரட்சியால அதிபர் கடாபி மக்கள் மேல ராணுவத்தையும்,தன்னோட அல்லக்கைகளையும் ஏவிவிட்டு அவங்கள துவம்சம் பண்ணிகிட்டிருக்காரு..,இதுக்கு உலக நாடுங்கள் பலதும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பிச்சாச்சு. சுவிட்சர்லாந்து நாடு ஒருபடி முன்னாடி போயி முதல்ஆளா அந்த நாட்டு மேல பொருளாதாரத்தடை விதிச்சது.பின்னாடியே பிரான்ஸ்,பிரிட்டன்ன்னு அந்த வகையறா நாடுகள் எல்லாமும் லிபியா மேல பொருளாதாரத்தடை விதிக்க வரிஞ்சி கெட்டிக்கிட்டு க்யூவ்ல நிக்கிறாங்க..,அடடா...என்னமா நம்ம தலைவருங்க மனிதாபிமானத்தோட இருக்காங்கன்னு நமக்கெல்லாம் ஒரே பூரிப்பு போங்க...
"அட வெக்கங்கெட்ட வெண்ணெய்ங்களா இதுக்கு எதுக்குடா வெள்ளையும்,சொள்ளையுமா திரியணும்"னு வடிவேலு பாணியில திட்டிப்புட்டு நம்ம மேட்டருக்குள்ள போறதுக்கு முன்னாடி மனிதாபிமானத்தோட சங்கத்தலைவர் ஒபாமா குடுத்த பேட்டிய லைட்டா படிச்சிடுங்க...
சர்வதேச விதிகள் மற்றும் பொதுமதிப்பை மீறி மக்கள் மீது தாக்குதல் நடத்தியற்கு கடாபி அரசு பொறுப்பு ஏற்றே தீர வேண்டும். சொத்து முடக்கம், கடாபியின் அரசைக் குறிவைத்து அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சொத்துக்கள் அனைத்தும் லிபியா மக்களுக்குச் சொந்தம். அவை காக்கப்படாவிட்டால், கடாபி உள்ளிட்டவர்களால் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படும். அது அமெரிக்காவின் தேசியபாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஆபத்தாக முடியும். அமெரிக்கா தொடர்ந்து லிபியா மக்களுக்கு ஆதரவாக செயல்படும். அவர்களின் விருப்பங்களுக்கேற்ப அந்நாட்டு அரசு நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
என்னாமா ஒரு பேட்டி பாருங்க..,அப்படியே இவிங்க எல்லாரையும் உச்சி மோந்து பாராட்டி,தலையில தூக்கி வெச்சில்ல கொண்டாடனும்...அட...கடைஞ்செடுத்த வெண்ணெங்களா..? லிபியாவுல சொந்த நாட்டு ராணுவம் பறந்து பறந்து சாதாரண குண்டு போட்டதுக்கே முண்டியடிச்சிக்கிட்டு வக்காலத்து வாங்க முன்னாடி வர்றீகளே..? இலங்கையில ஒரு மனுஷகறி சாப்புடுற ஒரு பண்ணாட,“பூசணிக்காத் தலையன், தவளவாயன் ராஜபக்ஷே”ன்னு ஒரு கொடுங்கோலன் சொந்த நாட்டு மக்கள் மேல “தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை” கொத்து கொத்தா போட்டு திரும்பின பக்கமெல்லாம் பிணக்குவியல்களை உங்க வீட்டு டிவிஸ்க்ரீன்லேயே உங்க எல்லாரையும் பாக்க வெச்சானே..? அப்பெல்லாம் எங்கடா போச்சி உங்க மனிதாபிமானம்?
அய்யா ஐ.நா சபையோட கண்ணியவான்களே..? ரெண்டு லிபியத்தூதர்கள் கெட்டி,புடிச்சி உங்க முன்னாடி கண்ணீர் வடிச்சாங்கன்னு லிபியா மேல பொருளாதாரத்தடை, ராணுவ நடவடிக்கை, கடாபி உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல தடை, அவங்களோட சொத்து முடக்கம், லிபியா மீது விமானம் பறக்க தடை, சர்வதேச கோர்ட்டில் கடாபியை கொண்டு வந்து நிறுத்துறதுன்னு அட்ட டைம்ல பல தீர்மானங்களை ஒரே தீர்மானமா போடுறீங்களே...? அன்னைக்கு இலங்கையில கொஞ்சம்கூட ஈவு.இரக்கமில்லாம தமிழனா பொறந்த ஒரே குத்தத்துக்காக பிஞ்சி குழந்தைங்க,வயசான பெரியவங்க,கை,கால் விளங்காதவகன்னு ஒருஆள் பாக்கிவிடாம இருக்குற எல்லாரையும் குழிதோண்டி சாமாதி ஆக்கினானே ‘தவளவாயன்’ ராஜபக்ஷே அவன குற்றவாளிக் கூட்டுல கூட நிறுத்த வேணாம்,அட்லிஸ்ட் ஒரு கிளிக்கூண்டுல லயாவது நிருத்தினிங்களா..?அப்ப எங்கடா போச்சி உங்க மனிதாபிமானம்?
உலகத்துல பல நாடுகள்ல இருக்குற தமிழர்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து இலங்கை தூதரகங்கள் முன்னாடி ஆரப்பாட்டம்,உண்ணாவிரதம்னு அவ்ளோ ஏன் ஐ.நா சபை வாசலுக்கே போயி போராட்டம் நடத்தினாங்களே..? அப்போ அவங்கள உள்ள கூப்புட வேணாம், அட்லிஸ்ட் அவங்க சொல்ற பிரச்சனையை காத்து குடுத்தாவது கேட்டீங்களா..?இல்லையே..? மாறா அவங்கள போலீஸ வெச்சி வெறட்டிதானே அடிச்சீங்க...? அப்போ எங்கடா போச்சி உங்க மனிதாபிமானம்?
ஆளாளுக்கு பொசுக்கு பொசுக்குன்னு லிபாயாவுல இருக்குற உங்க நாட்டு தூதரகத்தை மூடிக்கிட்டு கெளம்புறீங்களே..? அன்னைக்கு இலங்கையில கடாபிக்கு ஒருபடி மேல போயி அன்பும், அமைதியையும் போதிச்ச புத்தபூமியில ராஜபக்ஷே பிணங்கள் மேல ருத்ரதாண்டவம் ஆடினானே.. அப்ப தூதரகத்தை மூடாம இலங்கைக்கு உங்க நாட்டு மக்களை இன்பச் சுற்றுலா போகச் சொன்னீங்களே..? அப்போ எங்கையா போச்சி உங்க மனிதாபிமானம்..?
உலகத்துக்கெல்லாம் நாயம்,தர்மம் பேசுற அமெரிக்க சனாதிபதி ஒபாமா சாமி...,உண்மையிலேயே உங்களோட மனிதாபிமானத்தோட வண்டவாளம் இப்போதான் வெட்ட வெளிச்சமாயிருக்கு. அன்னைக்கு நீங்க அமெரிக்காவுக்கே அதிபரா பதவி ஏத்தப்போ “ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துல பொறந்த ஒருத்தர்,ஒரு கருப்பினத்துல பொறந்த ஒருத்தர் வெள்ளக்காரைங்க நாட்டுக்கே அதிபரா வர்றாருன்னு கேள்விப்பட்டப்போ நாங்கெல்லாம் ரொம்ப சந்தோஷப்பட்டோம். சாதி,மதம், இனம், மொழி பாக்காத ஒருத்தர் அமெரிக்காவுக்கு அதிபரா வர்றாருன்னு நாங்கெல்லாம் உங்க பதவியேற்பு விழாவ கண் கொட்டாமா வீட்டு டிவி முன்னாடி உக்காந்து உங்க பதவியேற்பு விழாவ பார்த்து ரசிச்சோம். ஆனா அதெல்லாம் தப்புதான்னு இப்போதானே தெரியுது.
என்னதான் பன்னிக்குட்டியை குளிப்பாட்டி நடுவீட்ல உட்டாலும் அது திரும்பவும் சாக்கடையில தான் போயி உருளும்கிற மாதிரி நான் பொறப்பால ஆப்ரிக்காக்காரனா இருந்தாலும் குணத்தால அமெரிக்ககாரன்தான்னு கன்பார்ம் பண்ணிட்ட சாமி...போதும்டா சாமி என்னடா நீங்களும் உங்க பொடலங்கா மனிதாபிமானமும்..?

7
Your rating: None Average: 7 (1 vote)
http://oruvaarthai.blogspot.com/2011/02/blog-post_28.html

கருத்துகள்

Selvakumarnew's படம்

நண்பா உங்க கோபம் ஞாயமானது,


7

நண்பா உங்க கோபம் ஞாயமானது, ஆனா ஒபாமா சொல்லி குத்த‌மில்ல அமெரிக்கன் ஒருவனுக்கு அடி பட்டாலும் அது அமெரிக்க அதிபருக்கு வலிக்கும் அந்த அளவுக்கு நாட்டுபற்று கொன்டவர்கள் அமெரிக்கர்கள். நம்ம தலைவர்கள் அப்படியா அதான் உங்களுக்கே தெரியுமே....


>>>Selvakumar<<<