kannan.s's படம்

எதுவரை வாழ்க்கை அழைகிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம் விடை பெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
என்றும் வாழணும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
வாழ்ந்து விடை பெறுவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ....... ம்..ம்ம்..
எதுவரை வாழ்க்கை அழைகிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடை பெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம்
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ...

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

LYRICS : PAZHANI BHARATHI

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

மிக நல்ல பாடல்


மிக நல்ல பாடல்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


anandamari's படம்

வாழ்க்கையின் த‌த்துவத்தை


3

வாழ்க்கையின் த‌த்துவத்தை விளக்கும் நல்லதோர் பாடல்.....


" முடிவிலலாத பயணம் நோக்கி செல்கிறேன்.
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்"......

ஆனந்தன்


Ragavan's படம்

நல்ல பாடல் தான் நண்பரே...


நல்ல பாடல் தான் நண்பரே...
ஆனால் நீங்கள் ஏன் சினிமா பாடலையே தேர்ந்தெடுக்கிறீர்கள். முன்பு "விண்ணைத்தாண்டி வருவாயா‍ படத்திலிருந்து மன்னிப்பாயா" பாடல், இப்போது "மாயாவி யில் இருந்து கடவுள் தந்த"
நண்பரே கோபித்துக்கொள்ள வேண்டாம்.. இந்த பாடல்கள் அனைவருக்கும் தெரிந்ததே. உங்களிடம் நல்ல படைப்புத் திறன் இருந்தும் ஏன் ஏற்கெனவே மிகவும் பிரபலமானதை மீண்டும் பதிய வேண்டும்...
உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய எதிர்ப்பார்க்கிறோம். தவறு என்றால் மன்னித்துக்கொள்ளவும்..
நன்றி..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..