Skip to main content

உங்கள் வலைப்பதிவை தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைப்பது எவ்வாறு?

URI: http://tamilnanbargal.com/node/291
கருத்துகள்: 16Likes: 134826 viewsசிறப்பு பதிவு

உங்கள் வலைப்பதிவை தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைப்பது எவ்வாறு?

admin's படம்

தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்

தற்போதைய இணைய உலகில் நண்பர்கள் அனைவருமே வலைதளத்தில் தங்கள் பதிவுகளை பதிவது வாடிக்கையாக உள்ளது. நண்பர்கள் தங்கள் வலைப்பதிவுகளை தமிழ் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை எளிமைப்படுத்த வலைப்பதிவுகளை திரட்டும் பதிவுத்திரட்டி தமிழ்நண்பர்கள் தளத்திலும் செயல்படுகிறது.

தங்களின் வலைப்பதிவுகளை profile wall post ஆக போட்டு தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை தமிழ் நண்பர்கள் தளம் எளிமையாக்கியுள்ளது. இப்போது உங்கள் வலைப்பதிவுகளை தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைக்கலாம். இணைத்துவிட்டால் உங்கள் வலைதளத்தில் நீங்கள் பதியும் பதிவுகள் தானாகவே தமிழ் நண்பர்கள் தளத்திலும் பதியுப்படும்.

உங்கள் வலைப்பதிவுகளை தமிழ் நண்பர்களில் இணைக்க நீங்கள் செய்யவேண்டியது

"தமிழ் நண்பர்களில் வலைதளத்தை இணைக்க" எனும் தலைப்பில் ஒரு மின்னஞ்சலில்

௧. உங்கள் வலை தள முகவரி e.g. : example.blogspot.com
௨. தமிழ் நண்பர்களில் உங்கள் பயனர் பெயர் (Login name)
௩. அந்த வலைதளம் உங்களுக்கு சொந்தமானது தான் என்ற உறுதிமொழி

போன்றவற்றை குறிப்பிட்டு info@tamilnanbargal.com எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதும்.

இனி நீங்கள் புதிய பதிவை உங்கள் வலைத்தளத்தில் சேமிக்கும் போது தானாகவே உங்கள் பதிவுகள் தமிழ் நண்பர்கள் தளத்திற்கும் பதியப்படும். அது நீங்கள் பதிவுசெய்தது போலவே சேமிக்கப்படும். இதன்படி, வலைத்தின் புதிய பதிவுகள் அனைத்தும் சுவர் பதிவாக (Wall post status) ஆக பதியப்படும்.

இந்த பதிவில் வலைப்பதிவின் தலைப்பும் ஒரு சில வரிகளும் பதிவின் முகவரியும் மட்டுமே பதியப்படும். தலைப்பை எவரேனும் நண்பர்கள் தொட்டால் தங்கள் வலைப்பூவிற்கே சென்று முழுபதிவையும் படிக்கும் படி இருக்கும். தங்களின் அனைத்து சுவர் பதிவுகளும் (Wall post status) tamil nanbargal தளத்தில் தங்கள் சுயவிபர பக்கத்தில் பட்டியல் இடப்பட்டிருக்கும்.

இதனால் என்ன லாபம்?

௧. நண்பர்களை அந்தந்த வலை தளத்திற்கே எடுத்து செல்வதால் தங்கள் வலைதளத்திற்கு வரும் நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
௨. கருத்துகளையும் தங்கள் வலைதளத்திலேயே பதியும் படி இருக்கும்.

மிக விரைவில் இவ்வாறான பதிவிலும் வாக்கு (Voting) அளிக்கும் வசதியை செயல்படுத்த இருக்கிறோம்.

தமிழ் நண்பர்களிலேயே தனிப்பட்ட முழு பதிவாக பதிய வேண்டும் எனில் நீங்கள் தற்போது நாமாக பதிவதை போலவே பதியும் வசதியும் இருக்கும். 

கவனிக்க

  • ஒன்றிற்கு மேற்பட்ட வலைப்பக்கங்களையும் அனுப்பி வைக்கலாம்
  • நீங்கள் உங்களது சொந்த வலைப்பக்கத்தை மட்டுமே இம்முறையில் பதியவேண்டும். மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை பதிவது அனுமதிக்கப்படமாட்டாது.
  • நாங்கள் ATOM, RSS போன்ற செய்திஓடை (Feeds) வழியாக பதிவுகளை எடுப்பதால் சில சமயங்களில் உங்கள் ப்ளாக் தளம் இவ்வகை அமைப்புகளை ஒத்துக்கொள்ளாமல் போகலாம்.
  • இவ்வகை செயல்பாடுகளினால் உங்களது வலைப்பதிவுகளில் எந்த மாறுதலும் ஏற்படாது.
  • தமிழ் நண்பர்கள் தளத்திலேயே பதியப்படும் பதிவுகள் தானாகவே உங்கள் வலைப்பதிவுகளுக்கு அனுப்பப்படாது.
  • உங்கள் வலைப்பதிவுகளின் மறுமொழிகள் பதியப்பட்டால் அது இங்கே பதியும வசதி இன்னும் செய்யப்படவில்லை.
  • இத்தளத்தின் அனைத்து விதிமுறைகளும் இவ்வாறு பதியப்படும் பதிவுகளுக்கும் பொருந்தும்.
  • நீங்கள் விரும்பும் எந்நேரத்திலும் இவ்வாறு இணைத்ததை வேண்டாம் என்றால் தயவு செய்து மடல் அனுப்பினால் போதுமானது.

 

நன்றி
தமிழ் நண்பர்கள் tamil friends
tamilnanbargal.com

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

Jyothi Bai's படம்

Very nice. Know to read and write in tamil, but difficult to use system in tamil. Will learn soon and put my facts in tamil. Jyo.presently from Australia.I come from Bangalore, India. Working in Govt. Service.
           :davie: