Ragavan's படம்

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு :

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களே,

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாசமில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

உங்கள் நண்பன் . . . . .

மின்னஞ்சலில் நண்பர் அனுப்பியது...

6
Your rating: None Average: 6 (5 votes)

கருத்துகள்

VISWAM's படம்

"என்னை பார் ஒரு ரூபாய்க்கு


4

"என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!' ஆஹா, தமிழ்க் 'குடி' மகனின் வைர வரிகள்.

Ragavan's படம்

மிக்க நன்றி ஐயா...


மிக்க நன்றி ஐயா...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


yarlpavanan's படம்

இலவசத்தை


7

இலவசத்தை ஒழித்திடு...
விழித்திடு தமிழா!
"இலவசம் என்பதற்கு
இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை."
இதில் நீ எந்த வகை?
இவ்விரு கருத்தும்
நம்மவருக்கு உறைக்குமா?
Dingue


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Ragavan's படம்

உறைக்கணும்... அதுக்குதானே


உறைக்கணும்... அதுக்குதானே நன்பரே இதெல்லாம்..
இருந்தும் நாமெல்லாம் அப்படியே பழகிட்டோம்..
இதெல்லாம் கலாச்சாரம்னு கூட சொல்வாங்க....

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்,
திருட்டை ஒழிக்க முடியாது...."


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

விஜயகாந்த் சமீபத்தில் ஒரு


5

விஜயகாந்த் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ''இலவசங்களை ஒழிக்கவேண்டும்'' என வீராவேசமாக பேசிவிட்டு சென்றதும் அங்கிருந்த கூட்டத்திற்கு வந்திருந்த மக்களுக்கு இலவசமாக அரிசியும் ஆட்டுக்கறியும் அனைவருக்கும் வழங்கப்பட்டதாக பத்திரிக்கை செய்தியில் படித்து Big smile Big smile Big smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

யார், எதை சொல்லனும்னு விவஸ்தை


யார், எதை சொல்லனும்னு விவஸ்தை எல்லாம் நம்ம ஊரிலே இல்லை...
அதனால தான் யார் என்ன சொன்னாலும் மக்களும் கேட்டுக்கறாங்க...
என்னங்க பண்றது, நம்ம ஊரிலே கடவுள் முதல் கட்சி தலைவன் வரை யாருமே முதலில் தங்களை பார்ப்பது இல்லை. ஆனால் அடுத்தவனுக்கு வழிமுறை வகுக்க தயங்குவதில்லை.. எல்லாருமே மோசமான முன்னுதாரணம்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


rajudranjit's படம்

இலவசம் என்று அரசியல்வாதிகள்


6

இலவசம் என்று அரசியல்வாதிகள் சொல்வது தவறென்பேன், காரணம் அரசியல்வாதிகள் சுருட்டுவதற்கு முன்பு மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் இலஞ்சம் என்ற சமிக்ஞை என்று தான் சொல்ல வேண்டும்,
தாலி வாங்கி கட்ட வக்கில்லாதவன் எப்படி தன் மனைவியைக் குடும்பத்தை காப்பாத்துவான்? மக்கள் செய்யும் தவறு ஒருநாள் அவர்களைப் பதம்பார்க்கும் என்பதை மக்கள் எப்போது உணர்வார்கள்.

எரியற வீட்டில் பிடுங்கியது இலாபம் என மக்கள் நினைப்பதால் நாட்டிற்கு ஆபத்து தான்!

PARITHI's படம்

நண்பரே ஒரு அருமையான பதிவு


8

நண்பரே ஒரு அருமையான பதிவு ..............பரிதி Clap