rajudranjit's படம்

இந்தியச் சகோதர உறவுகளே! எமது இந்தியாவின் இராஜதந்திர முறைகள் தற்போது கேள்விக்குறியதாக இருக்கின்றதோ என்ற சந்தேகத்தின் பெயரிலே இதை எழுத என் மனம் விழைக்கின்றது!
இந்தியாவின் போக்கு அதை நடாத்தும் அரசின் செயல்பாட்டைப் பொறுத்தே அமைந்துள்ளது என்பது யாம் எல்லோரும் அறிந்த ஒன்றே!

சில காலங்களாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகட்டும், உள்நாட்டு விஷயங்காளாகட்டும் குழப்பத்துடனும் எதிர்கால வாழ்க்கை என்பது கேள்விக்குறியான விஷயமாகவும் அமைந்து கொண்டிருக்கின்றது, அதற்குக் காரணம் என்ன?

ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியின் கொள்கையை பொருத்ததா? இல்லை, அதில் பொருப்பு வகிக்கும் ஆட்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் செயல்பாடா? எதிர்க்கட்சியின் பொருப்பில்லா செயல்பாடுகளால் தடம் மாறும் அரசியல் காய் நகர்த்தலா? இன்னும் என்னனவோ கேட்கத் தோன்றுகின்றது என் மனதிற்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இது போன்ற பலக் கேள்விகள் மனதில் எழுகின்றது.

இந்தியா என்பது ஐந்து நாட்டு நிலங்களையும் நீர் நிலைகளையும் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளடக்கிய நாடு

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் தற்கால சூழல் வரை பலப்பல தடைகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கின்றது, இந்தியன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கக் கூடிய விஷயங்கள் உலகப்பார்வைக்கு வியப்பை அளிக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியா உலகத்திலுள்ள அனைத்து நாடுகளையும் சகோதரப் பாசத்துடனும் நட்பெனும் நேசத்துடனும் நெருங்கிப் பழகும் ஒரு உன்னத தேசம் இந்தியா மட்டுமென்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமையடையும் விஷயமே, அப்படியிருக்க‌

பக்கத்து நாடுகளான பாக்கிஸ்தானும் சீனாவும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க காத்திருக்கின்ற வேளையிலும் நட்பை வெளிப்படுத்தியே தன்னை முதன்மையிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றது எமது பாரதம்.

ஆட்சியாளர்கள் யாராயினும் இதுவரை இந்திய தேசத்திற்கு துரோகமிழைக்க முயன்றதில்லை, இருப்பினும் சில சமயங்களில் அப்படியொரு கேள்வி மக்களால் தற்பொழுது கேட்கப்படுகின்றது ஏன்?

மக்கள் தொகையில் இரண்டாவது நாடான இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள நிலையிலுள்ளது இதற்குக் காரணம் யார்? ஆட்சியாளர்களா? மக்களா?

சில வெளியுறவுக் கொள்கைகள், உள்நாட்டுப் பாதுகாப்பு மக்களின் மனதில் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது இதற்கு பொருப்புவகிக்கக்கூடியது நடைமுறையிலிருக்கும் ஆளும் அரசைச் சார்ந்தவர்களே ஆவார்கள் இல்லையா?

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு கேள்வியெழுப்பும் சில சம்பவங்களை அரசு திறம்பட சரி செய்திருந்தாலும் பல சம்பவங்கள் மக்களுக்கு இன்னும் புரியாமலும் வெறுப்பாகவும் உள்ளது,

அதில் எமது நாட்டின் பாதுகாப்பிற்கு சவால் விட்ட மும்பை தாக்குதல் என்பது குறிப்பிடதக்கது, அதில் குற்றம் செய்த குற்றவாளியின் செயலுக்கு இதுவரை சரியான தண்டனை வழங்காமை மற்றும் அவனுக்கு செய்யும் பாதுகாப்பு செலவு ஒட்டு மொத்த இந்தியர்களை வெறுப்படையும் செயலாகவே அமைந்துள்ளது,

அக்குற்றவாளிக்கு செய்திருக்கும் செலவிற்கு இந்தியாவில் சில நூறு தொழிலதிபர்களை உண்டாக்கியிருக்கலாம் இல்லையா,

தவற விட்டது எமது தேசம் வருத்தப் படக்கூடிய விஷயமே! இன்னும் பல விஷயங்களிருப்பினும் மற்றவை தொடரத் தருகின்றேன் பிறகு

4.66667
Your rating: None Average: 4.7 (3 votes)

கருத்துகள்

saravanamuthu's படம்

நல்ல பதிவு


5

நல்ல பதிவு நண்பரே!!!!

”குற்றவாளிக்கு செய்திருக்கும் செலவிற்கு இந்தியாவில் சில நூறு தொழிலதிபர்களை உண்டாக்கியிருக்கலாம்”

----------- யோசிக்கவேண்டிய விசயம்-----------------

rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!