saravanamuthu's படம்

இது எப்படி இருக்கு!!!
வாய்தா!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு செப். 14க்கு ஒத்திவைப்பு!!

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல்
செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு தர இயலாது என்று கருத்து
தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று பெங்களூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் கந்தசாமி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான இறுதி உத்தரவு செப்டம்பர் 12ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

அந்த உத்தரவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

எனவே அதுவரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில் இன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சசிகலாவின் வக்கீல் இதுகுறித்துக் கூறுகையில், சசிகலாவுக்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் நேரில் வர இயலாத இருப்பதாக கூறினார்.

சுதாகரன் வக்கீல் கூறுகையில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இளவரசியின் வக்கீல் கூறுகையில், தனது மனுதாரருக்கு சர்க்கரை வியாதி முற்றியுள்ளதாக கூறினார்.

இந்த மனுக்கள் மீதும் செப்டம்பர் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

http://thatstamil.oneindia.in/news/2011/09/06/jaya-case-adjourned-september-14-aid0091.html

====================================================
எல்லோருக்கும் உடம்பு சரியில்லையாம்! அதனால் நேரில் ஆஜராக முடியாதாம்! Oups Oups

எப்படி???? Smile Smile Smile Smile

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)

கருத்துகள்

sugiri's படம்

ஆஜர் ஆகவேண்டிய எந்த


3

Smile Smile

ஆஜர் ஆகவேண்டிய எந்த விஐபிக்கும் உடம்பு பேஜார் பண்ணுமே!


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/