vinoth's படம்

ஆர்குட் சமுதாய இணைதளத்தில் Bom Sabado வைரஸ் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆர்குட் பயன்படுத்தும் அனைவரது கணக்கையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

September 25, 2010

இவ்வைரஸ் பாதிக்கப்பட்டால் ஆர்குட்டில் நண்பர்கள் தங்கள் நண்பர்களிடமிருந்து “Bom Sabado!” என்ற ஸ்கிரேட் கிடைக்கப்பெறும். இதன் மூலம் அனைவருக்கும் பரவும்.

“Bom Sabado” என்பதற்கு “Good Saturday” என்று Portuguese மொழியில் அர்த்தம்.

இதைப்பற்றி ஆர்குட்டின் கூகிள் நிறுவன வல்லுநர்கள் கூறும் போது
"ஆர்குட்டை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவிட்டு கூகிள் கடவுச்சொல்லை www.google.com/accounts இங்கே சென்று மாற்றி விடவேண்டும். இந்த வைரஸை நீக்கிவிட்டு நாங்கள் மறு அறிவிப்பு தரும் வரை யாரும் ஆர்குட்டை பயன்படுத்த வேண்டாம். மேலும் உடனடியாக கணினி cache அழித்து விடவேண்டும்"

எனக்கூறியுள்ளார்கள்.

கூகிளின் ஆர்குட் வல்லுநர்கள் கூறும் சில உதவித்துளிகள்

உங்கள் ஆர்குட் கணக்கை பாதுகாக்க

கணினியில் cache அழிக்க

Bom Sabado வைரஸ் பற்றிய விவாதங்கள்

பொதுவாகவே இவ்வகை சமுதாய தளங்களை அலுவலகத்தில் தடை செய்திருப்பார்கள்.. எனவே பல நண்பர்கள் இத்தளத்தை வேறு தளங்களின் உதவியுடன் பார்ப்பார்கள். இவ்வாறு பார்ப்பதே வைரஸ் பரவுவதற்கு காரணம் எனக்கூறுகிறார்கள்.

இதே போல Facebook லும் பல பாதுகாப்பு ஓட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

4.5
Your rating: None Average: 4.5 (2 votes)

கருத்துகள்

jovialbala's படம்

நல்ல செய்தி... நண்பா...


4

நல்ல செய்தி... நண்பா... Clap