“வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில இருக்கு”ன்னு எல்லாரும் பீத்திக்கலாம்.ஆனா அப்படி சொல்லிக்கிறதுக்கு இங்க இருக்குற எந்த இளைஞனுக்கும் யோக்கியதை கிடையாது.ஆமா, நாங்க எல்லாரும் துடிப்புள்ள இளைஞர்கள்னு சொல்லிக்கிறதுக்கும்,என் தேசமே என்ன நம்பித்தான் இருக்குன்னு தம்பட்டம் அடிச்சிக்கிறதுக்கும் இங்க உள்ள இளைஞர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு?
இந்த நாட்ல இளைஞர்களால நல்லதா என்ன மாற்றம் வந்துருக்குன்னு நீங்க நெனைக்கிறீங்க? அதுக்காக அவங்க என்ன செஞ்சிருக்கீங்க? நான், என்னோட குடும்பம்,என்னோட வட்டம், என்னோட சந்தோஷம்,படிச்ச பின்னாடி கை நிறைய சம்பளம்,அந்த சம்பளத்தை தண்ணியா செலவு பண்ணுறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட்,நண்பர்கள் வட்டத்தோட குடி,கூத்து கும்மாளம்னு நெறைய பொழுதுபோக்குகள் இப்படி சுயநலம் தாண்டி அவங்க இந்த நாட்டுக்கு செஞ்சி கிழிச்ச நல்லவைகள் தான் என்ன?
எல்லா வட்டத்திலேயும் ஊழலும்,லஞ்சமும் பேய் மாதிரி தலைமுடியை விரிச்சி போட்டுக்கிட்டு ஆடிக்கிட்டிருக்கு. இந்தியாவோட வல்லரசுக் கனவை கொஞ்சம் கொஞ்சமா குழி தோண்டி புதைச்சுக்கிட்டிருக்குற இந்த மெகாஊழல்களும்,லஞ்சமும் கைநிறைய சம்பளம் வாங்குற இளைஞர்களால தான் பெருகிப்போச்சின்னு சொன்னா அதை யாராலேயும் மறுத்து பேச முடியுமா..?
அரசாங்கத்துல எந்த வேலையும் வேகமா முடியனும்னா இவிங்க என்னைக்காவது முறையா அந்த வேலையை முடிச்சிருக்கீங்களா..? கண்டிப்பா அப்படி பண்ணிருக்க மாட்டாங்க..?டூ-வீலர் லைசென்ஸ் மொதக்கொண்டு ஃபாரீன் போறதுக்கு பாஸ்போர்ட் வாங்குற வரைக்கும் எல்லாத்திலேயும் லஞ்சம் குடுத்திருப்பாங்க? முறையா போயி சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவங்க வாங்கியிருப்பீங்களா..? கண்டிப்பா வாங்கிருக்க மாட்டாங்க..?
அவங்களுக்கு என்ன? எப்படியாவது ஒரு டிகிரியை வாங்கிட்டு ஒரு பெரிய நிறுவனத்துல ஆயிரக்கணக்குல சம்பளத்தை வாங்கி சொகுசான வாழ்க்கை வாழுவாங்க... ரெண்டாயிரம் கூட பெறாத வீட்டுக்கு ஐயாயிரம் வாடகையை கொடுத்து கை நிறைய சம்பாதிக்கிற திமிர்ல தெனாவெட்டா இருப்பாங்க..? இதனால பாதிக்கப்படுறது யாரு..? அவங்களை விட கம்மியா படிச்சிட்டு அவங்களுக்கு முன்னாலேயே பொழப்ப தேடி நகரத்துக்கு வந்து வேலைக்கேத்த ஊதியம் இல்லாம மாசக்கடைசிய தள்ளுறதுக்கே கஷ்டப்படுற நடுத்தர வர்க்கம் தான்.
நீங்க டிகிரி படிச்சிட்டீங்க..? அதனால உங்களுக்கு கை நெறைய சம்பளம் கெடைக்குது. ஆனா முதல் தலைமுறை படிப்பை படிச்சிட்டு,தொடர்ந்து படிக்க முடியாம,குடும்ப வறுமை காரணமா வேலை தேடி வந்த மத்தவங்களோட நிலைமையை பத்தி என்னைக்காவது யோசிச்சி பாத்திருக்கீங்களா..? சொல்லுங்க வருங்கால தூண்களே..?
சரி இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க..,நம்ம இந்தியாவை உலக அரங்குல இப்போ தலை குனிய வெச்சிகிட்டிருக்குற ஒருவார்த்தை “ஊழல்”. இந்த ஊழலை எதிர்த்து உங்கள்ல யாராவது ஒருத்தர் என்னைக்காவது முதல் ஆளா முன்னாடி வந்து போராட்டத்துல குதிச்சிருக்கீங்களா..? அதுசரி, கிரிக்கெட் பாக்க டிக்கெட் வாங்கணும்னா நாயை விட கேவலமா போலீஸ்கிட்ட அடி வாங்கிட்டு எவ்ளோ வேலையானாலும் அதையெல்லாம் விட்டுட்டு போயி மணிக்கணக்குல கியூல நிப்பீங்க..? இந்த மாதிரி நல்ல விஷயத்துக்கு வருவீங்களா..? வரணும்..!வந்திருக்கணும்..!!
22 வயசு இளைஞனுக்கு வரவேண்டிய கோபமும்,துடிப்பும் 72 வயது காந்தியவாதியான அன்னாஹசாரேவுக்கு வந்திருக்கே?. இதப்பாக்குறப்போ “வருங்கால இந்தியா எங்களை மாதிரி இளைஞர்கள் கையிலதான் இருக்கு”ன்னு சொல்லிக்கிற உங்களுக்கு வெட்கமாயில்லையா..?
இந்த மாதிரி போராட்டத்தை உங்களை மாதிரி இளைஞர்கள் கையில எடுத்து ஆரம்பிச்சி வைக்க, அதுக்குப் பின்னாடி அன்னாஹசாரே மாதிரியான காந்தியவாதிகளும்,பெரியவங்களும் நின்னுருந்தா இந்த இளைஞர் சமுதாயத்துக்கு எவ்ளோ பெருமையா இருந்திருக்கும் அத விட்டுட்டு இந்த தள்ளாத வயசுல உங்களோட வளமான வருங்காலத்துக்காக தன்னோட உயிரை பணயம் வெச்ச ஹசாரே பின்னாடி போயி கொடிய பிடிச்சிக்கிட்டு ஆடிக்கிட்டிருக்கீங்களே..? உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாயில்லையா..? யோசிங்க இளைஞர்களே..?