ரஹீம்கஸாலி's படம்

 1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும்வரை ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சாதகமாக அமைத்திருந்த சட்டங்களே இந்தியாவின் சட்டங்களாக இருந்தது. அதன்பின் இந்தியாவைக் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்வதற்காக இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் இந்திய அரசு ஈடுபட்டது. அதற்காக அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
புதிய அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு டாக்டர் அம்பேத்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை 1949 நவம்பரில் அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. அதன்படி 1950 ஜனவரி 26 முதல்  இந்தியா குடியரசு நாடாகியது. இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக கவர்னர் ஜெனரல் ராஜாஜி பொறுப்பேற்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதை எதிர்த்தனர். 1942 இல்  நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ராஜாஜி எதிர்த்தார். எனவே அவரை ஜனாதிபதி ஆக்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.
1942 இல்  பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையையையும்  ராஜாஜி ஆதரித்தார். இதைக் காங்கிரஸ் எதிர்த்ததால் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ராஜாஜி விலகி இருந்தார். இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். கவர்னர் ஜெனரல் என்ற பதவி அன்றுடன் முடிவடைந்தது.

இந்தியா சந்தித்த குடியரசுத்தலைவர்கள்

1)டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962
 
 
2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967
 
 
3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969
 
 
4)வி.வி.கிரி - 1969( மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)

 
5)ஹிதாயத்துல்லாஹ் 1969( ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை 
தற்காலிகமாக)
 
 
6)வி.வி.கிரி - 1969-1974
 
7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977
 
 
8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)

9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982
 
10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987
 
11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992
 
12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997
 
13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002
 
14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்- 2002-2007
 
15)பிரதீபா பாட்டில் - 2007 -(ஜூலையிலிருந்து)
5
Your rating: None Average: 5 (3 votes)
http://www.rahimgazzali.com/2012/01/republic-day.html

கருத்துகள்

saravanamuthu's படம்

தகவலுக்கு நன்றி!!!


4

தகவலுக்கு நன்றி!!!

VISWAM's படம்

நல்ல தகவல்.


4

நல்ல தகவல்.

yarlpavanan's படம்

பயனுள்ள தகவல்


7

பயனுள்ள தகவல்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil