oruvaarthai's படம்

* கணக்கு புள்ள...

ஒன்னும் ஒன்னும் ரெண்டு...

சொல்லு

ஒன்னும் ஒன்னும் ரெண்டு.

ரெண்டும் ரெண்டும் நாலு...

சொல்லு,

ரெண்டும் ரெண்டும் நாலு.

என்னதான்

அப்பா கணக்கு வாத்தியாரா

இருந்தாலும்

அவரோட புள்ள எல்.கே.ஜியில

இருந்து தான்

படிக்க ஆரம்பிக்கணும்.

* ரோட்டோர தர்மர்

ரோட்டோர சிக்னலில் நிற்கும்

போது தான் எண்ணெய் தேய்க்காத

தலை மயிரை சொரிந்து கொண்டு

பிச்சை கேட்டால் அந்த சிறுமி

போட மனசே வரல..,

வராத போனை காதில் வைத்து

பாசாங்கு செய்து அவளை நிராகரித்தேன்.

பின்பு மீண்டும் போனை கையில் எடுத்து

பேசினேன்..?

"ஆமா... நாளைக்கு தான்

திருப்பதிக்கு போறேன்

உண்டியல்ல காசு போட

வேண்டியிருந்தேன்" அதுக்காக...!

 

* அண்ணன் - தங்கச்சி காதல்

'பீச்சு,பார்க்கு,தியேட்டர்,ஷாப்பிங் மால்'னு

ஒரு ஏரியா பாக்கி விடாம

எல்லா ஏரியாவும் சேர்ந்து

சுத்தியாச்சி.

அப்பெல்லாம்  வராத பாசம்

நான் 'ஐ.லவ்.யூ'  ன்னு 

சொன்னப்ப அவளுக்கு வந்துச்சி

நான் உன்னை என்னோட

"அண்ணன் மாதிரி"  நெனெச்சேன்.

10
Your rating: None Average: 10 (2 votes)
http://oruvaarthai.blogspot.com/2010/02/blog-post_15.html