இணையத்தள மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி HTML தான். HTML இன்றி ASP, PHP, JSP என எந்த மொழியும் இயங்காது. அதாவது, HTML ஐ உடலாக அமைத்தே இணையத்தள மொழிகள் இயங்குகின்றன. இலவச இணையத் தளம் நடாத்துவோருக்கும் HTML மிகவும் வேண்டிய ஒன்றாகும்.
HTML இன் முந்தைய பதிப்புகளை மேம்படுத்தித் தான் HTML5 வந்திருந்தாலும் பல புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பல பழைய கட்டளைகள் நீக்கப்பட்டும் இருக்கிறது. Video, Audio, Database ஆகிய பயன்பாட்டுக்குச் சிறப்புக் கட்டளைகளும் அமைத்துள்ளனர். HTML பயனாளர்களுக்கு HTML5 ஐ பயன்படுத்த இலகுவாயிருக்கும்.
HTML5 இல் Frame, Frameset, NoFrame ஆகிய கட்டளைகளை நீக்கியதால் தளத்திற்குள்ளே பல விருப்புப் பக்கங்களை திறந்து மூட வசதி இல்லாமல் போயிற்று. CSS3 மற்றும் Javascript பாவித்துப் Frame அமைக்கலாம் என அறிகிறேன். அதற்கான மாதிரி நிகழ்நிரல் எதுவும் எனக்குக் கிட்டவில்லை.
Frame, Frameset, NoFrame ஆகிய கட்டளைகளுக்கு மாற்றீடாக HTML5 இல் புதிய கட்டளைகள் ஏதும் உண்டா? இதே போல நீக்கப்பட்ட பழைய கட்டளைகளுக்கு மாற்றீடாக HTML5 இல் சேர்க்கப்பட்ட புதிய கட்டளைகள் ஏதும் இருப்பின் தெரிந்தவர்கள் சொல்லித் தாருங்களேன். யாராவது இது பற்றிய பதிவுகளைச் செய்தால் வாசகர்களுக்கு நன்மை தரும்.
கருத்துகள்
html5 ல் ஒரு
html5 ல் ஒரு பக்கத்திற்குள்ளேயே வேறு பக்கத்தை இணைக்க iframe பயன்படுத்தலாம்.
http://www.w3schools.com/html5/tag_iframe.asp
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






