இந்த மாதிரியான மிரட்டல் தகவல்கள் ஒன்றும் புதியதல்ல. 1980-ம் வருடம் என்று நினைக்கிறேன். சில கிறிஸ்த்துவ பிரச்சாரர்கள் இதே போன்ற சிறு துண்டு சீட்டை கொடுத்து தொன்னுறாம் வருடத்தில் உலகம் அழிந்துவிடும் என்றும், அதற்குள் இயேசுவை ஏற்றக்கொண்டால் தப்பித்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். அப்படி சொல்லி துண்டு பிரசுரம் கொடுத்த பிரசங்கியை 1992-ம் வருடம் நேரில் பார்க்க நேரிட்டது. அவரிடம் நீங்கள் சொன்னப்படி உலகம் அழிந்து விட்டதா? அல்லது இயேசுவை நம்பியவர்கள் மட்டும் காப்பாற்ற பட்டு விட்டார்களா? அப்படியென்றால் நான் இயேசுவை ஏற்ற கொள்வில்லையே? நான் மட்டும் எப்படி பிழைத்து கொண்டு விட்டேன் என்று கிண்டலாக கேட்டேன். இப்படி நான் கேட்டதும் மனிதன் கோபித்து கொள்வார், சங்கடப்படுவார் என்று எல்லாம் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் பரிசாக கிடைத்தது.
ஒரு மனிதனுக்கு மரணபயத்தை ஏற்படுத்தினால் மரணத்திற்கு பின்னால் கிடைக்கும் தண்டனைகளை பற்றிய பீதியை ஏற்படுத்தினால் அவனை அடிபணிய வைக்கலாம் என்பது ஒரு வகையான மனோ தத்துவம். இத்தகைய மனோ தத்துவங்களின் பல பிரிவுகளை நன்றாக கற்று தேர்ந்தவர்கள் கிறிஸ்த்துவ பாதிரிமார்கள். அதனால் அவர்கள் அப்படி தான் பேசுவார்கள். இதே கேள்வியே இரண்டாயிரம் பிறந்த பிறகு யாரிடமாவது கேட்க வேண்டுமென்று காத்திருக்கிறேன். இதுவரை உருப்படியான எந்த பிரசங்கியையும் சந்திக்கவில்லை. என்பதினால் அந்த கேள்வி அப்படியே பாக்கியாக நிற்கிறது
அவர்கள் பிரச்சாரங்களை கேட்கும் போது அடிப்படையே இல்லாமல் ஒரு பொய் பிரச்சாரத்தை துணிந்து செய்ய முடியுமா? விவரம் தெரிந்த யாராவது தட்டி கேட்க மாட்டார்களா? ஒரு வேளை அவர்கள் பிரச்சாரத்தில் சிறிதளவேனும் உண்மையிருக்கலாமோ? என்று நமக்கு எண்ணம் வருகிறது. அவர்களின் வாதத்திற்கு என்ன ஆதாரம் என்று பைபிளின் புதிய, பழைய ஏற்பாடுகளை புரட்டி புரட்டி பார்த்தேன். உலக முடிவு நாளை பற்றி மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ ஒரு வார்த்ததையை கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பைபிளில் தான் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பைபிளை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்யும் பல நடுநிலையான கிறித்துவ அறிஞர்கள் அதை பற்றி எதாவது சொல்கிறார்களா என்றும் விசாரித்து பார்த்தேன். அவர்கள் அனைவருமே ஒரே குரலில் உலகத்தின் இறுதி கட்டம் வரும் போது தேவகுமாரன் பூமிக்கு வருவார், மனிதர்களின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பலாபலன்களை கொடுப்பார், அதுமட்டும் தான் நிச்சயம், மற்றபடி அவர் இந்த வருடத்தில் இந்த தேதியில் வருவார் என்பது பற்றி பைபிளில் எந்த குறிப்பும் இல்லையொன்று சொன்னார்கள்.
இந்த நேரத்தில் மலையாள மொழியில் ஒளிபரப்படும் கிறிஸ்த்துவ தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியை காண நேரிட்டது. அதில் மாயன் கால நாகரீக மக்கள் ஒரியன் காலண்டர் என்ற ஒன்றை வைத்திருப்பதாகவும் அதில் 2012, டிசம்பர் மாதம் வரையில் தான் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த நாள் தான் பூமியின் கடைசி நாள் இயேசு பூமிக்கு வரும் நாள் என்று சொல்லப்பட்டது. அதை கேட்டவுடன் உண்மையிலேயே மாயன் நாள் காட்டி அப்படி எதாவது சொல்கிறதா? அப்படி சொல்லப்பட்டால், எந்த ஆதாரத்தை வைத்து சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆராய ஆசை ஏற்பட்டது.
மாயன் நாகரீகத்தை பற்றி சிறிய வயதிலிருந்தே நம்மில் பலருக்கு அறிமுகம் உண்டு, பாரசீக நாகரீகம், கிரேக்க நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்ற நாகரீக வரலாறு வரிசையில் மாயன் நாகரீகத்தையும் கேள்விபட்டிருக்கிறோம். மாயன் கால நாகரீக மக்கள் கணிதம், வானியல் ஆராய்ச்சி, போன்ற துறைகளில் மகா மேதாவிகளாக இருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம். அது மட்டுமல்ல டேரி மில்க் சாக்லேட், பைய்ஸ்டார் சாக்லேட், போன்றவற்றிக்கெல்லாம் அடிப்படை தொழில் நூட்பம் தந்தது. அதாவது உலகின் முதல் முறையாக சாக்லேட் தயாரித்தது மயான் மக்கள் என்பதை அறிந்து வியப்பும் அடைந்திருக்கிறோம்.
அவர்களின் நாகரீகம் தான் மயான் நாகரீகம் அவர்கள் காலத்தை கி.மு. 2600-ல் தொடங்கியது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 2600 எல்லாம் இல்லை, மாயர்களின் காலம் அதற்கு முன்பே துவங்குகிறது என்று ஒரு சாரர் கருதுகிறார்க்ள. அப்படி சொல்பவர்கள் தங்களுக்கு ஆதாரமாக போப்பல் வூ என்ற மாயர்களின் இதிகாச புத்தகத்தை காட்டுகிறார்கள். எது எப்படியோ மாயர்களின் காலம் என்பது இன்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது பல அரசியல் காரணங்களால் மாயர்கள் வாழ்ந்த அமெரிக்க பகுதி மெக்சிகோ, கௌத மாலா, பெலிஸ், ஹோண்டுராஸ், எல் சார் வாடார், என்று தனிதனியாக பிரிந்து கிடக்கிறது.
விண்வெளியில் பால்வழி என்ற ஒரு பகுதியியை நாம் அறிவோம். இந்த பால்வழி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது ரேடார் கருவிகள் உருவான பிறகு அதாவது 1945-ல் பிறகு தான். ஆனால் மாயர்கள் 5000-வருடத்திற்கு முன்பே பால்வழி மண்டலத்தை நன்கு அறிந்து அதை பற்றிய விவரங்களை குறித்து வைத்து இருக்கிறார்கள்.
பண்டைய இந்திய வானியல் ஆய்வாளர்களும் இதற்கு பிரஜாபதி என பெயரிட்டு அழைத்துள்ளனர். ஆனால் நவீன விஞ்ஞானம் பல கருவிகளை வைத்து கண்டுபிடித்த ஒரியன் நெபுலாவை மாயர்கள் எந்த கருவிகளும் இல்லாமல் கண்டறிந்து உள்ளது விடை கிடைக்காத அதிசயமாக இன்று நிற்கிறது.
மெக்சிகோவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமிடு ஒன்று உள்ளது. அது சீசென் யீட் என்ற நகரில் இன்றும் உள்ளது. இதிலுள்ள அதிசயம் என்னவென்றால் இந்த பிரமீட்டின் நிழல் இரண்டு சிறகுகள் முளைத்த பாம்புபோல வருடம் தோறும் மார்ச் 21-ம் தேதியும், செப்டம்பர் 23-ம் தேதியும் பூமியின் மீது விழுகிறது. இந்த அதிசயத்தை காண உலகெங்கும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் அந்த நகரத்தில் குவிகிறார்கள்.
சூரியன் இயக்கத்தை மிக நூணுக்கமாக ஆராய்ந்து நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே சம நோக்கு நாளையும், நிழல் உருவம் வரும்படியான தோற்றத்தையும் உருவாக்க முடியும். சூரியனுடைய இயக்கத்தை மட்டுமல்ல சந்திரனின் சலனத்தையும் அவர்கள் நன்கு அறிந்து நாட்களை பற்றிய கணிதத்தை ஏற்படுத்தி இன்று நாம் உபயோகப்படுத்துகின்ற நாட்காட்டி போன்ற காலண்டரையும் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த காலண்டரின் பெயர்தான் ஒரியன் காலண்டர்.
ஒரியன் காலண்டர் கி.மு. 550-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நமது இப்போதைய நாட்காட்டிகளை விட ஒரியன் காலண்டர் மிகவும் வித்தியாசமானது அவர்களின் கணக்குப்படி இப்போது போலவே அப்போதும் வருடத்திற்கு 365- நாட்கள் தான். ஆனால் மாதங்கள் பதினெட்டு, ஒவ்வொரு மாதமும் இருபது நாட்களை கொண்டதாகும். இந்த காலண்டருக்கு ஹாப் என்று பெயர்.
தெய்வ காரியங்களுக்கு என்றும் வானிநிலை ஆய்வாளர்களுக்கு என்றும் தனியாக இஸல்கின் என்றொரு காலண்டர் உண்டு, இதன்படி இருபது நாட்கள் கொண்ட ஒரு மாதமும், பதிமூன்று மாதங்கள் கொண்ட ஒரு வருடம், அதாவது இருநூற்றி அறுபது நாட்கள் கொண்ட ஒரு வருடம் வரும், மாயர்களின் கணக்குப்படி ஹாப், இஸ்லால்கின் ஆகிய ஆண்டுகள் 52 ஆண்டுகளுக்கு ஒரு முறை இணையும்,
அந்த இணைப்பு ஏற்படும் வருடத்தல் உலகில் மாபெரு மாற்றங்கள் ஏற்படும் என மாயர்கள் சொல்கிறார்கள் இதுவரை உலகில் ஏற்பட்ட பெரிய யுத்தங்கள், இயற்கை பேரழிவுகள், மாபெரும் சாதனைகள், முன்னேற்றங்கள் அனைத்துமே இத்தகைய வருட சந்ததியில் தான் நடந்திருப்பதாக பலர் சொல்கிறார்கள். இந்த இஸல்கின் காலண்டர்தான் 2012-ம் வருடம் டிசம்பர் மாதம் 23-ம் தேதியோடு முடிவடைகிறது. அந்த தேதியில் உலகம் அழிந்து புதிய உலகம் பிறக்கும் என்று மாயன் தீர்க்கதரிசனம் சொல்கிறது.
மாயர்களின் அழிவு யாரால் ஏற்படும் அந்த இனம் அழிந்த பிறகு அவர்கள் வாழ்ந்த பகுதியான அமெரிக்கா எப்படி வளரும்? உலகத்தை எப்படி ஆட்டிவிக்கும்? அமெரிக்க, ரஷ்ய பனிப்போர், செங்கிஸ்கான், நெப்போலியன், ஹிட்லர், ஸ்டாலின் மா.சே.தூங், மகாத்மா காந்தி போன்றோர்களை பற்றியும் மிக துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது.
உலகம் அழிய போகும் காலத்தில் மனிதர்களின் மனோநிலை எப்படி மாறி அமைந்திருக்கும்? இயற்கை சூழல் எப்படி மாறும்? அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை எவ்வாறு சுருக்கும். என்ற விவரங்கள் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் ஒரளவு நடந்துள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது ஒரியன் தீர்க்கதரிசனம் நடந்துவிடுமோ என்ற அச்சம் நமக்கு இயற்கையாக ஏற்படுகிறது. ஆனால் இந்த தீர்க்க தரிசனத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது.
யோக சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் பதஞ்சலி முனிவர் எழுதிய பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூல் எந்தயோகி தனது மனதை நினைத்த மாத்திரத்தில் புறப்பொருளிலிருந்து விடுவித்து கொள்கிறானோ அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் பார்க்கும் தகுதி பெற்றிருக்கிறானோ அவனே முக்காலத்தையும் உணர முடியும் என்று கூறி அதற்கான மனபயிற்சியும் உடல் பயிற்சியையும் விரிவாக கூறி செல்கிறது.
அதன் படி நடந்தால் நிச்சயம் சாதாரண மனிதன் கூட யோகி ஆகிவிடலாம். என்பது நடைமுறை உண்மை. ஆனால் இப்படி பயிற்சி செய்து முக்காலத்தை அறிவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட பிறக்கும் போதே இந்த தகுதியோடு பிறப்பவர்களும் இருக்கிறார்கள். அத்தகையவர்களின் பட்டியலை எடுத்து பார்த்தால் கார்கி, மைத்ரேயி கௌதம புத்தர், இயேசுநாதர் என்று தொடங்கி சமீபத்தில் முக்தி பெற்ற காஞ்சி மகாபெரியவர் வரை சொல்லலாம். ஆனால் இவர்களில் உலகத்தில் நடக்க போகின்றவைகளை சொன்வர்கள் மிகவும் குறைவு, அப்படி குறைவான தீர்க்க தரிசிகளில் நாஸ்டர்டாமஸ் ஒருவர் இவர் ஜோதிடரோ, குறி சொல்பவரோ அல்ல, பிறப்பிலிருந்தே அதீத ஆற்றல் பெற்ற அதிசய மனிதர்.
பிரெஞ் புரட்சிக்கு பிறகு பிரான்ஸ் நாட்டின் அரசனாக நெப்போலியன் வருவதையும் அவன் ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொள்வதையும், கடைசி காலத்தல் ஹெலினா தீவில் சிறைப்பட்டு பைத்தியமாகி மாண்டு போவதையும் நெப்போலியன் தோன்றுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்டர்டாமஸ் சொல்லி வைத்துள்ளார்.
இது மட்டுமல்ல ஹிட்லரின் தலைமையில் ஜெர்மன் வீறுகொண்டு எழுவதையும் வல்லரசுகளுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்வதையும் பின்னர் ரஷ்யாவில் மாட்டிக்கொண்டு படுதோல்வியடைந்து கண்ணுக்கு தெரியாமலேயே மாண்டு போவதையும் ஹிட்லரின் காலத்திற்கு பிறகு ஜெர்மன் நாடு கிழக்கு மேற்கு என இரண்டாக பிளவு படுவதையும் நாஸ்டர்டாமஸ் முன்கூட்டியே சொல்லி வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் நாஸ்டர்டாமஸ் போல ஒவ்வொரு காலகட்டத்திலும் பல தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களின் தீழ்க்கதரிசனமும் பல நேரங்களில் சரியாக இருந்திருக்கிறது. 1986-ல் குஜராத் மாநிலத்தில் பாபுராம் பட்டேல் என்ற ஒரு அதிசய மனிதர் இருந்தார். அவர் இந்தியாவை பற்றி ஏராளமான தீர்க்க தரிசனங்களை சொல்லியிருப்பதாக கேள்வி. அதில் மிக முக்கியமானது இருபத்தியோரம் நூற்றாண்டின் துவக்க பகுதியில் அயல்நாட்டு பெண்மணி ஒருவர் இந்தியாவின் அரசாங்கத்தை திரைமறைவிலிருந்து இயக்குவார் என்றும், அவருக்கு பிறந்த வாரிசு கூட இந்தியாவின் தலைமை பதவிக்கு வரும் என்றும் சொல்லி இருக்கிறராம். இந்த வார்த்தையின் சாயலே சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சுட்டி காட்டுவதை உணரலாம்.
இப்படி ஏராளமான தீர்க்கதரிசிகளும், தீர்க்க தரிசனங்களும் உலகம் முழுவதும் உண்டு, ஆனால் இவர்களிலிருந்து நாஸ்டர் டாமஸ் முற்றிலும் மாறுபட்டவர். அவர் எழுதி வைத்த தீர்க்க தரிசனங்கள் அனைத்துமே தெளிவானவைகள். மிக துல்லியமான கணக்கின் விடைபோல தெரியகூடியவைகள்.
ஆனால் துரதிஸ்டவசமாக அவர் எழுதி வைத்துள்ள பாடல்களை சாதாரணமாக படித்து புரிந்து கொள்ள முடியாது. சம்பவம் நடந்த பிறகு அடடா இதை தான் அவர் அப்படி சொன்னாரா? என்று துன்பப்படவைக்கும. ஏன் அவர் தெரிந்த புரிந்த பாஷையில் தெரியாத வகையில் எழுதிவைத்துள்ளார் என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது ஆச்சர்யமான ஒரு உண்மை தெரியவருகிறது.
இந்த உலகத்தில் அன்றாடம் நடைபெறுகின்ற நிகழ்வுகள் எல்லாமே கடவுள் என்ற மகாசக்தியின் எண்ணப்படி நடந்து வருகிறது. இதை இறைவனின் திரு உள்ளம் என்று மெய்ஞானி கருதுகிறான், இயற்கையின் ஒழுங்குமுறையான செயல்பாடு என்று விஞ்ஞானி நம்புகிறான். இரண்டிலும் கருதுகோள்கள் வேறுவேறு என்றாலும் அடிப்படை உண்மை என்னவோ ஒன்று தான்.
உலகில் அமெரிக்கா என்ற ஒரு கண்டத்தை கண்டுபிடிக்காத காலத்தில் நாஸ்டர்டாமஸ் சுகந்திரமாக வாழ விரும்பிய சிலர் தனியாக ஒரு நாட்டை உண்டாக்குவர்கள். அது உலகின் முதல்தர பணக்கார நாடாக திகழும் என்று கூறினார். அவர் குறிப்பிட்டது அமெக்காவை தான் என்பது சொல்லாமலேயே விளங்கும். மேலும் அந்த நாட்டில் இருபத்தியோரம் நூற்றாண்டின் துவக்க காலகட்டத்திலேயே நாற்பத்தி ஐந்து டிகிரி கோணத்தில் வானத்தில் தீப்பிழம்புகள் தோன்றும். தீ நகரத்தியே ஆக்கிரமிக்கும், பயங்கரவாதத்தின் பேரரசன் வருவான், அவன் எதனிடமும் இரக்கம் காட்டமாட்டான். என்று சொல்வதோடு இல்லாமல், வானில் இரண்டு இரும்பு பறவைகள் போதும் புகையும் நெருப்பும் புது நகரத்தையே மூடும் என்கிறார்.
ஆனால் அவர்கள் யார் கண்ணிலும் பயங்கரவாதத்தின் பேரரசன் என்ற வாசகம் தட்டுபடவில்லை போல்தெரிகிறது. நாஸ்டர்டாமஸ் அந்த பயங்கரவாத அரசன் யார் என்பதை பற்றியும் அவனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றியும் சிறிய விளக்கங்கள் கொடுத்துள்ளார்.
மாபெரும் அராபிய நாட்டிலிருந்து வருவான். வலிமை கொண்ட தலைவனாக உருவெடுப்பான் அவனினும் கொடியவன் அதற்கு முன் யாரும் உலகில் இருந்திருக்க மாட்டார்கள். மானிட வர்க்கமே அவனை கண்டு அஞ்சும் அவன் நீலதலைபாகை அணிந்திருப்பான், அவனால் உருவாகும் போர் இருபத்தியேழு ஆண்டுகள் தொடர்ந்து நடக்கும் என்றும் சொல்கிறார்.
சரி இவர் இத்தனை தீர்க்க தரிசனங்கள் சொல்லியிருக்கிறார். 2012-ல் உலகம் அழியும் என்று சொல்லியிருக்கிறாரா? நிச்சயம் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அப்படி சொல்லியிருந்தால் இரண்டாயிரத்தில் துவங்கும் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் இருபத்தியேழு வருடங்கள் தொடர்ந்து நடக்கும் என்று எப்படி சொல்வார். பன்னிரெண்டு வருடங்கள் தான் நடக்கும் என்று சொல்லிருக்கலாமே எனவே ஒரியன் காலண்டர் விஷயம் சரியான முடிவு அல்ல என்ற முடிவுக்கு தான் வரவேண்டியுள்ளது.
அந்த முடிவை நாம் எடுப்பதற்கு முக்கிய காரணம் உண்டு, புகழ் பெற்றிருந்த மாயன் நாகரீகம் கிறிஸ்த்துவ மத வெறியர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு சில எச்சசொச்சங்கள் தான் மீதம் கிடைக்கிறது. ஆதிகால ஐரோப்பாவிலும், அரேபியாவிலும் ஒரு மூடதனம் மிக கொடுரமாக ஆட்சி செய்து வந்தது. அதாவது பைபிளில் சொல்லப்படாத கருத்துக்களோ அல்லது கூர்-ஆனில் இல்லாத கருத்துக்களோ எந்த தனிமனிதனோ அல்லது புத்தகமோ அல்லது நிறுவனமோ சொன்னால் அதை சாத்தானின் வேலை என்று கருதி முற்றிலும் அழித்துவிடுவார்கள்.
கட்டுரையின் ஆரம்பத்தில் கிறிஸ்த்துவ, இஸ்லாமிய வேதங்கள் உலக அழிவு நாளை துல்லியமாக குறிப்பிடவில்லை என்று பார்த்தோம். இந்து மதத்தினுடைய ஆதார நூல்கள் என்ன சொல்கின்றன என்பதையும் பார்த்தால் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். இந்துமத கால கணக்குப்படி நான்கு யுகங்கள் உண்டு என்று நமக்கு தெரியும். இதில் கிரேதா யுகத்திற்கு 17,28,000 ஆண்டுகள் உண்டு, திரேதாயுகத்திற்கு 12,95,000 ஆண்டுகள் உண்டு, துவாபரயுகத்திற்கு 8,64,000 ஆண்டுகள் உண்டு, தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு மொத்த வயது 4,32,000 ஆண்டுகள் ஆகும். கலியுகம் பிறந்து இப்போது 5,110 வருஷம் தான் ஆகிறது. இன்னும் 4,26,890 வருடங்கள் முடிந்த பிறகு தான் கலியுகத்தின் ஆயுள் முடியும். அப்போது தான் பிரம்மாவிற்கு பகல்முடிகிறது இரவு வரும். அதாவது பிரம்மாவின் இரவு என்பது உலகத்தின் அழிவு அல்லது செயல்படாத நிலை என்பதாகும். அதனால் அதுவரை இயற்கை நியதிப்படி உலகம் அழியாது, நாமாக அணுகுண்டை போட்டு கொண்டால் தான் உண்டு அதற்கு இயற்கையும், இறைவனும் பொறுப்பு ஏற்க முடியாது.
கருத்துகள்
கிருத்துவமதமும், இந்து மதமும்
கிருத்துவமதமும், இந்து மதமும் ஒன்றை தெளிவாக சொல்கிறது. கலி அவதார புருஷன் வெண்குதிரையின் மேல் வருவார் என இந்து மதமும்,
இயெசு கிறி்ஸ்து வெண்குதிரையின் மேல் வருவார் என புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது...
தகவலுக்கு மிகவும் நன்றி.......

Nanbarukku vanakkam,
Nanbarukku vanakkam,
Ven kudhiraiil varubavar yaar enbatharkku similarities of hinduisam & Islam, Terrorisam patriya vidaikalukku terrorisam monopoly of islam DVD's Paarkkavum, author Dr,zakir naik anaithu matha vethangalaiyum research seidhullavar ungal anaithu santhegamum thiralam.
























