அன்பு நண்பர்களுக்கு
இந்த இழையின் மூலம் ட்ரூபால் எனும் CMS பற்றி தொடராக தமிழில் எழுதலாம் என இருக்கிறேன்.
இந்த தொடர் பல்வேறு கணினி வல்லுநர்களுக்கும் இணைய தள வடிவமைப்பாளர்களுக்கும் மிகுந்த பயனளிப்பதாக அமையும் என நம்புகிறேன்.
வெள்ளை மாளிகையின் http://www.whitehouse.gov/ இத்தளம் ட்ரூபாலில் வடிவமைக்கப்பட்டது தான். இன்றைய இணைய வடிவமைப்பில் ட்ரூபாலின் முக்கியத்துவத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இணைய தள வடிவமைப்பின் நடைமுறை சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளைம் வைத்து இக்கட்டுரை நகர்த்தப்பட உள்ளது. உதாரணத்திற்கு தமிழ் நண்பர்கள் (http://tamilnanbargal.com) தளத்தில் ஒவ்வொரு வசதியும் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பது போன்ற உதாரணத்தைக் காட்டி சிக்கல்களும் தீர்வுகளும் போன்ற நடையில் ட்ரூபாலை நாம் இங்கே படிக்கலாம்.
ஒவ்வொரு இழையிலும் அதற்கு சம்பந்தமான கேள்விகளை தாராளமாக கேட்கலாம். முடிந்தவரை சிறப்பாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.
தங்கள் நல்லாதரவை வேண்டி....
என்னைப் பற்றி:
ட்ரூபால் மூலம் இணய தல வடிவமைப்பிலும் ட்ரூபால் தளத்தில் மாட்யூல் நிரல் எழுதி வெளியிடுவதிலும் பல ஆண்டுகள் கிடைத்த அனுபவத்தை நண்பர்களுடன் இத்தொடர் மூலம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். ட்ரூபாலுக்காக சில மாட்யூல்களையும் எழுதி இலவசமாக வெளியிட்டுள்ளேன். ட்ரூபாலில் எனது முகவரி: http://drupal.org/user/194674
--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth








