joshi2010's படம்

விவேகானந்தரின் சிந்தனைகள்

சிங்கத்தின் இதயம் வேண்டும்

* எழுங்கள், விழியுங்கள் என்ற அச்சமற்ற செய்தியை அறைகூவிச் சொல்வதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இந்தப் பணியில் நீங்கள் என்னுடைய உதவியாளர்களாக இருங்கள்.

* தொடர்ந்து மனதில் புனிதமான எண்ணங்களையே சிந்தியுங்கள். யாருக்காவது உங்களால் சிறு நன்மையாவது செய்ய முடியுமா என்று எண்ணி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.

* பிரதிபலன் எதையும் கருதாமல் நாம் உலகிற்குச் செலுத்தும் ஒவ்வொரு நல்லெண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த நல்லெண்ணமே பாவ புண்ணிய பலன்களில் இருந்து நம்மை விடுவிக்கிறது.

* சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய முழு ரகசியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்.

* சமநிலையில் இருந்து பிறழாதவர்கள், நெஞ்சில் சாந்தகுணம் கொண்டவர்கள், இதயத்தில் இரக்கமும் அமைதியும் உடையவர்கள், பிறர் சொல்வதை ஆராய்ந்து ஏற்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு தாங்களே நன்மையைத் தேடிக்கொள்கிறார்கள்.

* உழைப்பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள்.

பயம் தேவையில்லை

* வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.

* நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும், எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்.

* உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.

* இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது.

* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.

* உலகவாழ்வுக்குள் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள், உழையுங்கள். இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒருபயனும் இல்லை.

7.6
Your rating: None Average: 7.6 (20 votes)

கருத்துகள்

kumaran's படம்

விவேகானந்தரின் மற்றுமொரு


விவேகானந்தரின் மற்றுமொரு முக்கியமான அறிவுரை....என்னுடையதும் கூட; ''புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்த தத்துவத்தையும் கண்மூடித்தனமாக ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.'' (புத்தரும் இதையேதான் சொல்லி இருக்கிறார்)


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.