இதை எழுதத்தான் வேண்டுமா எனும் குழப்பம் இருபத்து நான்கு மணிநேரமாக இருந்தது. ஆனாலும் சனிக்கிழமை மாலை எஸ்.எஸ்.மியூசிக்கில் ஒளிபரப்பான அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி (எனிதிங் ஃபார் விஜய்) எத்தனை அநாகரீகமானது அதில் போட்டியாளர்கள் நடத்தப்பட்ட விதம் எத்தகைய மனித உரிமை மீறல் என்பது நிச்சயம் பதிவு செய்யப்படவேண்டியது அவசியம் என கருதுகிறேன்.
கடந்த சில நாட்களாக மேற்கூறிய இந்த தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் தொடர்ச்சியாக வந்ததை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். விஜயை சந்திக்க இவர் என்ன செய்யப்போகிறார் என்ற வாசகத்துடன் ஒரு டப்பா விஷம், ஒரு ஹீட்டர் மற்றும் தலையை மழிக்க ஒரு கத்தி ஆகியவை காட்டப்பட்டன. அப்போதே இது ஏதோ ஏடாகூடமான நிகழ்ச்சி என்பது புரிந்தது. ஆனாலும் முதலில் ஒளிபரப்பானபோது இதைப் பார்க்க இயலவில்லை (நன்றி: ஆற்காடு வீராசாமி). நேற்று மாலை அந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பானபோது எதேச்சையாக காண நேர்ந்தது. சந்தேகமில்லை இதைவிட மட்டமான ஒரு நிகழ்ச்சி இதுவரை வந்திருக்க முடியாது.
அந்த நிகழ்ச்சியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒவ்வொரு செயலாக செய்கிறார்கள் (மன்னிக்கவும் இதை திறமை என சொல்வதற்கில்லை). அது குறித்து நடுவராக இருக்கும் அந்த டிவி பெண் தொகுப்பாளர் கருத்து தெரிவிக்கிறார். மற்றொரு நடுவர் முகத்தை மலச்சிக்கல் வந்த மாதிரி வைத்துக்கொண்டு கருத்து இல்லை என்று சொல்கிறார். கடைசியாக முடிவு அறிவிக்க வேண்டிய நேரத்தில் அவரது கருத்து கேட்கப்பட, அவர் போட்டியாளர்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார். அந்த கேள்விகள் யாவும் அவரை சிறைவைக்கும் அளவுக்கு அநாகரீகமானவை, மன்னிக்க இயலாதவை மற்றும் மனிதத்தன்மையற்றவை.
வா போ என்கிற ஏகவசனங்கள், வெளியே போ எனும் அதட்டல்கள் (கெட் அவுட் என இருமுறை கத்துகிறார்), நீ போட்டிக்கு தகுதியில்லாதவன் எனும் நேரடி அவமானங்கள் என அவரது ஒவ்வொரு வாக்கியமும் மனித உரிமை மீறலாகவே இருந்தது. இவை முன்பே திட்டமிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஒரு நிறுவனத்தில் அதன் ஊழியருக்கு இதில் எதையாவது ஒன்றை செய்தாலும் அது குற்றம். அந்த குற்றங்கள் எதுவும் நடப்பதில்லை என நாம் சொல்லவில்லை. ஆனால் அப்படியொரு செய்கை நடைபெற்றதாக செய்தி வந்தாலே அந்த நிறுவனம் அதை நாங்கள் செய்யவில்லை என மறுக்கும். ஆனால் இங்கு இப்படியான ஒரு குற்றச்செயலை பட்டவர்த்தனமாக அதுவும் நாளுக்கு நூறு விளம்பரம் போட்டு ஒளிபரப்புகிறார்களே என்பதுதான் நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.
இதற்குப் பிறகு ஒரு போட்டி இருந்தது. அந்த கான்ஸ்டிபேஷன் நடுவர் இருவரையும் தகுதியவற்றவர்கள் என சொல்லி இறுதிவாய்ப்பாக ஒரு ஒரு போட்டிவைக்கிறார் (இதுவரையான போட்டிகளில் நீங்கள் ஜெயிக்கவில்லை, உங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் தோற்றுவிட்டார்கள் என அதற்கு ஒரு விளக்கம் வேறு). விஜயை சந்திக்க மூன்று வாய்ப்புக்கள் தரப்படுகிறது. ஒன்று- விஷமருந்துவது, இரண்டு- ஹீட்டரில் கைவைப்பது(அது இயங்கும்போது) , மூன்று- தலையை மழித்துக்கொள்வது. இதில் ஏதேனுமொன்றை செய்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம் என்றால் எதை செய்வீர்கள் என கேட்கிறார்கள். அப்பெண் விஷமருந்துவேன் என்கிறார், அந்த இளைஞன் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன் என்கிறார்.
நீங்கள் இதை பார்த்திருந்தால் அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என சொல்லுங்கள்.. பார்க்கவில்லை எனில் இதைப் படிக்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். மொட்டை அடிக்க கத்தியை தலையில் வைத்தபிறகு நடுவர்கள் ஞானோபதேசம் செய்கிறார்கள், “இதை நீங்கள் விரும்பும் விஜய் விரும்புவாரா?”. பிறகு மற்றொரு நடுவர் சொல்கிறார் “உங்களது இண்டலிஜென்சை சோதிக்கவே இந்த சுற்று வைக்கப்பட்டது”. சோனியா அகிம்சையைப் பற்றி பேசியதை கேட்ட செவிகள் மன்மோகன் ஊழல் ஒழிப்பை பற்றி பேசியதை பார்த்த கண்கள் நம்முடையது, ஆகவே இந்த காட்சி ஒன்றும் நம்மை திகைக்க வைக்காது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
விஜயை பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு போட்டியில் கலந்துகொள்பவன் ஒரு முழுக்கேனையனாகத்தான் இருப்பான். ஒரு நடிகனைக் காண டான்ஸ் ஆடி ஜெயிப்பதே கேவலம், அதையே செய்தவன் மயிரை சிரைக்க மாட்டானா? அட மூதேவிகளே இண்டலிஜென்சை சோதிக்க இதுவா வழி? எனக்குகூட விஜய் முகத்தில் காறித்துப்பி அவரது இண்டலிஜென்சை சோதிக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் நாம் மனிதர்கள் என்பது நினைவுக்கு வந்து அமைதிகொள்கிறோமா இல்லையா.. டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா ?
இன்று மாலை (13/02/11) ஒரு நண்பருடன் இதுகுறித்து பேசுகையில் இது ஒருவேளை அந்த நடிகரது பெயரைக்கெடுக்க செய்யப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்றார். இது நிச்சயம் பரிசீலிக்க வேண்டியதே. எஸ் எஸ் மியூசிக் டிவி லாட்டரி மார்ட்டீனால் நடத்தப்படுவது, அவர் கருணா சொன்னால் யார் வேட்டியை வேண்டுமானாலும் உருவத்தயங்க மாட்டார், அவர் இதை செய்திருக்க நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. அவர் விஜய் என்கிற நடிகரை வலுவிழக்க செய்தாலும் அதனால் அவரே அம்பலப்பட்டுப்போனாலும் தமிழ்நாட்டுக்கு லாபமே. ஆனால் இதில் அவமானப்படுத்தப்படுவது விஜய் ரசிகர்கள், அதனை ஒளிபரப்புவதன் வாயிலாக ஒட்டுமொத்த சமூகமும் மானங்கெட்டவர்களாக சித்தரிக்கப்படுவதுதான் கண்டணத்துக்குரியது.
விஜய்க்காக எதையும் செய்யத்துணிபவன் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருப்பான். ஆனாலும் ஒரு மனநோயாளியின் மான அவமானங்களைப்பற்றியும் மனித உரிமையப்பற்றியும் கவலைப்படுவது நம் கடமை. கேள்விப்பட்டவரை பல தொலைக்காட்சிப் போட்டிகளில் இப்படி கலந்துகொள்வோரை அவமானப்படுத்தி அவர்களை அழவைத்து அதன்வாயிலாக வருமானம் பார்ப்பது என்பது பொது இயல்பாக இருக்கிறது. ராக்கி சாவந்த் நடத்தும் நிகழ்ச்சியொன்றில் இழிவுபடுத்தப்பட்ட ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஒரு டிவி போட்டியில் கலந்துகொண்டபோது மோசமாக திட்டி வெளியேற்றப்பட்ட ஒரு மேற்குவங்க மாணவி மனநிலை சிதைந்து கோமாவில் இருக்கிறார்.
ஆகவே நண்பர்களே இதுமாதிரியான நிகழ்ச்சிகளை முற்றாக புறக்கணியுங்கள் (இதுவரை நான் பார்த்த ஒரேயொரு டி.வி போட்டி இதுதான்). உங்கள் சுற்றத்தில் யாராவது இப்படியான போட்டிக்கு போனால் தலையில் தட்டி தடுத்து நிறுத்துங்கள், அங்கு போய் அவமானப்படுத்தப்படுவதற்கு பதில் இதுவே எவ்வளவோ மேல். உலகக்கோப்பையை புறக்கணிக்கச் சொல்லி செய்யப்படும் பிரச்சாரம் போல தெரிந்தவர்களிடமெல்லாம் இவற்றையும் புறக்கணிக்கச் வலியுறுத்துங்கள். நடுவர்கள் சோனியா போல மற்றவர்களை அவமானப்படுத்தி காயப்படுத்துவதையும் போட்டியாளர்கள் கருணாநிதி போல அழுதே சாதிப்பதையும் இன்னும் எத்தனை நாள்தான் சகித்துக்கொண்டிருப்பது.
கருத்துகள்
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
டிவியில் பல போட்டிகளில்
டிவியில் பல போட்டிகளில் மற்றவர்கல் பங்கேற்பதை விட சொல்லி வைத்து நடிப்பதே அதிகமாக உள்ளது.
பார்ப்பவனைத்தான் குற்றம் சொல்லமுடியும். 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தமிழ் நாட்டில் ரசிகர்கள்
தமிழ் நாட்டில் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
தறுதலைகளுக்கு இது தேவைதான். 
இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
பணம், புகழ், ஜால்ரா இதற்காக
பணம், புகழ், ஜால்ரா இதற்காக எத்தனை கீழே இறங்கி விடுகிறார்கள்! தொலைக்காட்சிக்கான சென்சார் எப்போழுது வருமோ!!!
கொதித்து குமுறும் எல்லார் சார்பாகவும் செல்வகுமாருக்கு நன்றி.
நீங்க அ.தி.மு.க வா.
நீங்க அ.தி.மு.க வா. அடுத்தவர்களுடன் கம்பேர் பண்ணி பேசுவதர்க்கு யாருக்கும் உரிமை இல்லை. நீங்கள் கூறி இருப்பது ஒரு தமிழனின் மனக்குமுறல் போல இல்லை. ஒரு அ.தி.மு.க கட்சிக்காரரின் மனக்குமுறல் போல இருக்கிறது.
இது என் மனதில் தோன்றிய கருத்து. 
மன்னிக்கவும். நீங்க ஒரு
மன்னிக்கவும். நீங்க ஒரு "குறிப்பிட்ட சிலரை" எதிர்தது போல் இருந்ததால் அப்படி சொல்லி விட்டேன். வாழ்த்துக்கள் நண்பரே.....

தொலைக்காட்சி நிறுவன்ங்களுக்கு
தொலைக்காட்சி நிறுவன்ங்களுக்கு எல்லாம் இப்பொழுது என்ன நிகழ்ச்சி நட்த்துவது என்பது கேள்விக்குறியான விசயமாகி விட்ட்து.
அதிலும் ஏதாவது ஒரு பண்டிகை அல்லது முக்கிய விடுமுறை என்றால் அவ்வளவு தான். ஆளாளுக்கு திரைப்பட நடிகர்களை பேட்டி எடுக்க கிளம்பிவிடுறாங்க? சரி அந்த நடிகர், நடிகைகளாவது ஏதோ பெரிய பேர் வாங்கி நிறைய சாதனைகளை செஞ்சவங்களா இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பட்த்துல நடுச்சவங்க எல்லாம் பேட்டி கொடுக்க வந்துவிடுவாங்க!
மொத்த்தில் தொலைக்காட்சி நிறுவன்ங்களுக்கு சினிமாத்துறை இல்லை என்றால் ஒன்றுமில்லை!
அதற்கடுத்து யோசிக்க வேண்டிய விஷயம், தொலைக்காட்சி தொடர்கள்.
சோகமே இல்லாத ஒரு தொடரை கண்டிப்பா யாராலும் சொல்லவே முடியாது. சோகமும் அழுகினி தொடர்கள் மத்தியில் கொலை முயற்சி சம்பவங்கள் எல்லாம் கூட தொடரில் வந்தாகிவிட்டன!
இதிலிருந்து ஒரு மாறுதலுக்காக தான், இந்த் மாதிரி போட்டி நிகழ்ச்சிகள் எல்லாம்!
இதுல இன்னும் காமெடி என்ன் என்று கேட்டால் அதற்கு வருகிற நீதிபதிகள் தான்! ஏதோ பெருசா சாதனை செய்து வந்தவங்க மாதிரி ஒரு நினைப்பு!
தொலைக்காட்சி என்பது தொ(ல்)லைக்காட்சி ஆனதே மிச்சம்! 
___________________________________
சரவணமுத்து





















