உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.
ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு
நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே
அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்
மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.
உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம்
நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது
போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும்
ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை
உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்
மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு
ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று
பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி
78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%,
கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்
ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.
இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ
அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க
முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள
மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே
இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.
இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து
வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்
கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2
லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக
இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது
போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்
தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட
வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.
இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்
ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.
யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்
எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே
மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.
180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்
ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு
விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்
பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை
கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்
இருக்கும்.
சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்
செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்
கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக
வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று
65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட
வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே
நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை
போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.
*
*==============
மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்
படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு
படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம்
கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே
பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை
யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்
கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.
யோசியுங்கள்...
இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி
இஸ்லாத்தில்
தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால
பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை
அவமதித்துப் பேசுகிறார்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து
தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.
அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க
முற்ப்படுகிறார்கள்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த
சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்
பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக
தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்
காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது
செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்
என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்
கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்
வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்
நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்
வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?
யோசியுங்கள்...
குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே
காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,
பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்
மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்
தொகை பெருகினால் பரவாயில்லையாம்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!
யோசியுங்கள்...
இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.
யோசியுங்கள்...
வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்
ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்
என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்
அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக
நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே
வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்
என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு
ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.
இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?
நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்
அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது
பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.
இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய
அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களை
பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை
காப்பாற்றிக்கொள்வோம்
*
ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும்
ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து
சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது
இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.
யோசியுங்கள்....
கருத்துகள்
வணக்கங்க வினோத், ரொம்ப
வணக்கங்க வினோத், ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கீங்க.
ஒளி வந்தால் இருட்டு ஓடிபோகும், கேள்விகள் பிறந்தால் அறியாமை மறையும்.
ஒரு சில கேள்விகள்
உலகத்தை உறுவாக்குபவர்கள் உழைப்பாளிகளே இதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஆதிகாலத்தில் முதன்முதலில் உருவான தொழில் விவசாயம்.
எந்த பிராமனன் விவசாயம் செய்தான்? இல்லை என்ன தொழில் செய்தான்?
உடல் உழைப்பே இல்லாதவர்கள் பிராமனர்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எந்த வரலாற்றை பார்த்தீங்கனு சொல்ல முடியுமா?
ஜா எழுத்து வருவதற்கு முன் தமிழில் ஜாதிகளே இல்லைங்க
இந்தியாவில் பிரிட்டிஸ்காரர்கள் வருவதற்கு முன் இந்து மதம் எங்கே இருந்தது?
"இந்து" என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? அது எந்த மொழியை சேர்ந்தது?
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபொழுது மக்களை பட்டியலிட்டார்கள் அப்போது அவர்களுக்கு கிரித்துவர்கள் தெரியும், இஸ்லாமியர்கள் தெரியும் மீதி உள்ளவர்களை திருடர்கள் என்றனர். அவர்கள் வைத்த பெயர்தான் இந்து (French) .
பிராமனர்கள் எல்லோரும் ஏழைகள் என்று உங்களுக்கு யார் சொன்னது?
இன்று உயர்பதவியில் வகிப்பவர்கள் பெரும்பாலானோர் பிராமனர்கள்தான்.
அர்ச்சகர்களுக்கு அரசாங்கமே இன்று சம்பளம் வழங்குகிறதே?
அர்ச்சகர்கள்தான் சாமிக்கு அருகிலேயே இருக்கிறார்களே கடவுளிடமே முறையிடலாமே எதற்காக சம்பள உயர்த்த அரசாங்கத்திடம் முறையிடுகிறார்கள்? ஏனென்றால் அவர்கள்தான் அது கடவுள் அல்ல கல் என்று முதலில் அறிந்தவர்கள். அதனால்தான் "எல்லாமே அவா அவா விதிப்படிதான் நடக்கும்" என்றில்லாமல் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
கொள்ளை அடிப்பதில் எல்லா மதங்களுமே ஒன்றுதான். அதனால்தான் கோவில்களில் வடமொழியில் அர்ச்சனை, சர்ச்களில் ஆங்கிலம், மசூதிகளில் உருது மொழி என புரியாத மொழிகள் பயன்படுத்தபடுகின்றன. ஏனென்றால் புரிந்தால் வியாபாரம் பாதிக்கும். எல்லா வியாபாரத்துக்கும் இதுதான் அடிப்படை.
மதம் ஒரு போதை அதனால் மனிதர்களை மிருகமாக்கவும் பிரிக்கவும் மட்டுமே முடியும்.
மதமும் மதுவும் ஒன்று.
விஸ்கி நல்லதா? பிராந்தி நல்லதா? இல்லை ஒயின் நல்லதா?
பிராந்தியிலிருந்து விஸ்கிக்கு மாறினா என்ன? விஸ்கியிலிருந்து ஒயினுக்கு மாறினா என்ன?
மதுபழக்கம் கூடாது என்பதே நல்லது.
நண்பரே சில கேள்விகளுக்கு
நண்பரே சில கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவற்றை பகிர்கிறேன்.
///இந்தியாவில் பிரிட்டிஸ்காரர்கள் வருவதற்கு முன் இந்து மதம் எங்கே இருந்தது?///
பல பெயர்களில் இங்குதான்யிருந்தது. ஆதாரங்கள் பழமையான கோயில்கள், பல நூல்கள் அதில் சில வேதநூல், புராணம் .....
///அர்ச்சகர்களுக்கு அரசாங்கமே இன்று சம்பளம் வழங்குகிறதே?///
அரசு பணமில்லை, இது இந்துஅறநிலைத்துறை வருவாய்
என்றும் நட்புடன்

நல்லா கேட்கிறீங்க, பிராமணன்
நல்லா கேட்கிறீங்க,
பிராமணன் விவசாயம் செய்தான்? என கேட்கிறீர்கள், இந்து மதம் பிராமணர்களுக்கு மட்டும் உரியதல்ல, தமிழர் சில வைஷ்ணவ பெரியோர்களில் பிராமணர் அல்லாத ஜாதியினர் தான் அதிகம் என்பது தெரியுமா, வேதங்களில் விவசாயம் பற்றி எல்லாமே கூறப்பட்டுள்ளது தெரியுமா?
ஜா எழுத்து வந்தபின் தான் ஜாதி வந்தது என்கிறீர்கள், ஜாதி தங்களுக்குள் அடிபோடச்செய்தது ஆங்கியன் வந்த பின்புதான் நண்பரே, ஊரு ரெண்டுபட்டால் என பழமொழி சொல்வார்கள், ஆங்கிலேயன் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் பிரிவினை, அதன் முன்பு ஜாதி இருந்தது, பிரிவினை சண்டைப்போட்டுக் கொள்ளவில்லை என்பதை அறியுங்கள்.
இந்து மதம் என்ற பெயர் சிந்து நாகரீகம் என்பதிலிருந்தே உருவானது, இந்து என்பதற்கு இந்தியா அல்லாத வேறு மொழி சொற்களில் அர்த்தம் பார்ப்பது மூடத்தனம், அதை பெரிய பகுத்தறிவு வாதிகள் உணரவேயில்லை, தாங்கள் கூறிய ஒளி அங்கு வரவேயில்லை என நினைக்கிறேன். அவ்வாறு அர்த்தம் பார்த்தால் வேறுபல சொற்களுக்கும் அர்த்தம் கூற முடியும்.
முதலி்ல் நீங்கள் இந்து மதம் என்பதை ஒரு மதமாக பார்ப்பதை விடுங்கள், அது மதம் அல்ல, வாழ்க்கை முறை, ஆன்மீகம், அறிவியல், விஞ்ஞானமும் இயற்கையும் கலந்த வாழ்க்கை முறை, அதையும் விஸ்கி, பிராந்தி போன்றவற்றையம் குழப்பாதீர்கள்.
மதுபழக்கம் கூடாது என்பதே நல்லது என்பதை மிகவும் வரவேற்கிறேன், ஆனால் அரசே சாராயக்கடை நடத்தும் அவலத்தை எங்கே போய் கூறுவது?
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பிராமனர் அல்லத சாதியினர்
பிராமனர் அல்லத சாதியினர் அதிகம் என்பது தெரியும் நன்பரே. பிராமனன் தொழில் செய்யவில்லை என்பதை நீங்களே குறிப்பிட்டு உள்ளீர்கள் "கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக நம்பியிருக்கும் பிராமணர்களை......" என்ற வரிகளில்.
"ஜாதி தங்களுக்குள் அடிபோடச்செய்தது ஆங்கியன் வந்த பின்புதான்" என்று கூறுகிறீர்கள். ஆங்கிலேயர்கள் முதலில் வந்தார்களா ஆரியர்கள் முதலில் வந்தார்களா?
வரலாற்றில் "ஆரியர்கள் வருகை" என்ற பகுதியை நீங்கள் படிக்கவில்லையா?
கல்வி பாடத்திட்டம் உருவாக்குவதிலும் பிராமனர்களின் குறுக்கு புத்தி இருந்தது.
உதாரனத்திற்கு "ஆரியர்கள் வருகை" என்று குறிப்பிட்டுவிட்டு இஸ்லாமியர்கள் வந்ததை "இஸ்லாமிய படையெடுப்பு" என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் வந்தால் வருகை இஸ்லாமியர்கள் வந்தால் படையெடுப்பா?
சிந்த்சமவெளி நாகரீகம் ஆதி திராவிடர்களால் உருவாக்கப்பட்டது. அங்கு ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் இந்து மதம் மட்டுமல்ல எந்த மதமும் இருந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. "சிந்து நாகரீகத்தில் இந்துமதம் இருந்தது" என்பது உங்கள் கற்பனையில் உதித்ததா இல்லை உங்கள் காதில் விழுந்ததை எழுதினீர்களா?
இந்து என்ற வார்த்தை எந்த மொழியைச் சேர்ந்தது என்று நீங்கள் கூறவே இல்லையே?
இந்து என்ற வார்த்தை தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகள் எதிலும் இல்லை.
அப்படி இருந்தால் நிருபியுங்கள்.
"இந்து மதம் என்பதை ஒரு மதமாக பார்ப்பதை விடுங்கள், அது மதம் அல்ல, வாழ்க்கை முறை" என்கிறீர்கள் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் ஒரே வாழ்க்கை முறையை கொண்டுள்ளனரா?
ஆன்மீகமும் அறிவியலும் கலந்த வாழ்க்கை முறை எது?
ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளே அறிவியலுக்கு அடிப்படை. அறிவியல் வாழ்க்கை முறையில் அறியாமை குவிந்திருப்பது ஏன்?
ஒரு நூலை எழுதுவதற்கு முன் நூறு நூல்களாவது படிக்க்வேண்டும் என்பார்கள். நீங்கள் கட்டுரை எழுதும் முன்னர் தயவுசெய்து அவை சம்மந்தப்பட்ட நூல்களையாவது படித்துவிட்டு எழுதுங்கள்.
நன்றி.
"ஆங்கிலேயர்கள் முதலில்
"ஆங்கிலேயர்கள் முதலில் வந்தார்களா ஆரியர்கள் முதலில் வந்தார்களா?"
ஆரிய படையெடு்பபு நடைபெறவில்லை என்பதும் மாக்ஸ் முல்லர் கூறியது பலதும் பொய் புரட்டு என்பதும் நிருபிக்கப்பட்ட ஒன்று, என்பதை அறியுங்கள். அதை குறித்து நிறைய புத்தகங்கள் கூட வந்துவிட்டது, அதை படியுங்கள், நமக்குள் பிரிவினை வாதத்தை தூண்ட கையில் எடுக்கப்பட்ட ஆயுதம் தான் அரிய படையெடுப்பு, ஜாதி முறை, ஆரியம் திரிவிடம் எல்லாம் என்பதை அறியுங்கள்.
இஸ்லாமியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் நாட்டை பிடிக்கவே வந்தார்கள், ஆரியர்கள் வருகை என்பதே பொய், அது திணிக்கப்பட்டது, ஆரியர்கள், சிந்து சமவெளி நாகரீகம், பாகிஸ்தான் என்பதெல்லாம் முன்பு ஒரே பாரதமாக இருந்தது.
நான் முதலியேயே கூறியபடி இந்து என்பது மதம் அல்ல, அது மதம் என்று இருந்தால் மட்டுமே சிந்து நாகரீகத்தில் இருந்ததா இல்லையா என்பது கேள்வியாகும்.
சிந்து என்பதே இந்து ஆனது. அதற்கும் இந்து என்பதற்கு வேறு மொழியில் அர்த்தம் இருந்தாலும் அது ஏற்புடையதன்று. அது இந்திய மொழி கூட இல்லை. இந்து என பெயர் சூட்டப்பட்டதே நமக்காக அல்ல, நமக்கு பெயர் முக்கியமாக இருக்கவில்லை.
புரியாமல் கேள்வி கேட்காதீர்கள், நான் முதலிலேயே கூறியபடி இந்து என்ற வார்த்தை நமககு தேவையாக இருக்கவில்லை. இந்த நெறிமுறைகள் ஸநாதன தர்மம் என்றே கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள் சூட்டிய பெயரை ஆராயவது நகைப்புக்குரியது.
ஸநாதன தர்மத்தில் இன்றைய அறிவியலும் மருத்துவமும் கூறுவதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டார்கள், அது அர்த்தசாஸ்திரம், வானசாஸ்திரம், ஆயுர், சித்த மருத்துவம் போன்றவற்றில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
கடைசியாக நீங்கள் கேட்ட மற்றொரு கேள்வி,
"இந்துக்கள் அனைவரும் ஒரே வாழ்க்கை முறையை கொண்டுள்ளனரா?"
தினம் எத்தனை முறை குளிக்கிறார்கள் என்பதோ, எத்தனை முறை தொழுகிறார்கள் என்பதோ என்ன உடுத்தி என்ன உண்கிறார்கள் என்பதோ அல்ல வாழ்க்கை முறை.
அறியாமை இன்றைய அறிவியல் நிறைந்த உலகிலும் இருக்கிறது. அன்றும் இருக்கிறது.
ஸநாதன தர்மத்தில் அறியாமை மக்கள் ஏன் என்று கேட்டால்.
அங்கு கூறப்பட்டதை தெளிவாக புரிந்து கொள்ள நம்மவர்களுக்கு அறிவு கிடையாது. அங்கு அதிகமாக உவமை மூலமே கூறப்பட்டுள்ளது. உதாரணமாக சந்திரகிரணத்தில் பாம்பு சந்திரனை விழுங்குவதாக கூறப்பட்டது உவமை, அதன் பொருள் அறியாத மூடர்கள்தான் நிஜமாவே பாம்பு சந்திரனை விழுங்குவதாக நினைத்து கேலி செய்வார்கள்,
இந்து மதம் பற்றி கேள்வி எழுப்பு முன் அதை பற்றி அறிந்திருங்கள் நண்பா
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நான் கேட்ட கேள்விகளுக்கு
நான் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் கருத்தில் பதில் இல்லையே நன்பா?
நன்பா ஆங்கிலேயர்கள் தான் பாரதம் என்ற நாட்டை உருவாக்கினார்கள். அதற்கு முன் 500க்கும் மேற்பட்ட சிற்றரசர்கள்தான் ஆண்டு வந்தனர். தயவு செய்து வரலாற்றை திரிக்காதீர்கள்.
இந்த கட்டுரையின் தலைப்பே "மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்" என்பதுதான் இந்து என்பது மதம் இல்லை என்றால் இந்த கட்டுரையே தேவை அற்றது.
பெயரை ஆராய்வது நகைப்புகுறியதா?. தமிழன் வைத்த ஒவ்வொரு பெயரிலும் அர்த்தம் இருந்தது. பிராமனன் வைத்த ஒவ்வொரு பெயரிலும் சூழ்ச்சி இருந்தது.
உதாரணத்திற்கு
நித்யகல்யாணி__ நித்தம் என்றால் தினமும் (அ) அடிக்கடி, கல்யாணி என்றால் திருமணம் செய்பவள். தினமும் திருமணம் செய்பவளுக்கு என்ன பெயர்?
இது போல நிறைய பெயர் இருக்குதுங்க. ஆராய்ச்சி பன்னாமல் சிந்திக்காமல் சூழ்ச்சியை உணரமுடியாது.
நான் சொன்ன வாழ்க்கைமுறை என்பது மக்களின் மொழி, கலை, பண்பாடு, கடவுள் வழிபாடு இன்னும் பல.எந்த மதத்திலும் கடவுளும் வழிபடும் மறையும் பெரும்பலும் ஒன்றாகத்தான் இருக்கும், இந்து மதத்தில் இது சாத்தியமில்லை.
"ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று என்று பழக முற்படுவோம்" என்று கூறுகிறீகளே. நீங்கள் மனுதர்மத்தை தூக்கி எறிய தயாரா? தாழ்த்தப்பட்டோர் பூஜை செய்து பிராமனர்கள் வழிபடுவார்களா?
நிசத்தில் உள்ள சாதிக்கொடுமைகள் உங்கள் கணினிக்கு வராதுங்க.
இன்னும் எங்கள் ஊரில் இரட்டை டம்ளர் முறை இருக்குதுங்க. பத்திரிக்கையிலும் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு.
நீங்கள் தூங்குகிறீர்களா இல்லை தூங்குவதுபோல் நடிக்கிறீர்களா?.
ஐயா, வெளிநாட்டு மோகம்,
ஐயா,
வெளிநாட்டு மோகம், ஆங்கிலேய மோகம், பணத்தாசை கொண்டு, அவர்களுக்கு அடி பணிந்து எல்லாவற்றையும் இழந்து வருகிறோம், அது தங்கள் கண்ணுக்கு தெரியாவிட்டால் என்ன வென்று சொல்வது
வெறும் பெயரை வைத்து ஆராய்ச்சி நடத்தாதீர்கள்.
உங்கள் அறிவை என்ன வென்றுசொல்வது என்று தெரியவில்லை, பிராமண திராவிட ஆரிய பிரிவினைவாதம் வரும் முன்னர் நாமெல்லாம் ஒன்றாகத்தான் இருந்தோம். இன்று அதை வைத்து நம்மை பிரிக்கிறார்கள் சூட்சிக்காரர்கள், நாம் அடிபணிந்து விட்டோம், நம்மை நாம் எதிர்த்து என்ன கிடைக்கப்போகிறது என தெரியவில்லை,
கல்யாண என்பதற்கு வெறும் திருமணம் என்று பொருள் கொண்டால் நீங்கள் கூறியது சரி, ஆனால் அதற்கு அதுமட்டும் பொருளில்லை, எதையும் தன்னிச்சையாக கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், யாரோ சொல்லிச்சென்றார் என அதை வைத்து விவாதம் வேண்டாம்.
ஸநாதன தர்மம் என்றால் என்ன என்று புரியாமல் கண்டதை கடவுள், எத்தனை கடவுள் என்று கூறாதீர்கள்,
ஜாதிக்கொடுமைகளை எதிர்த்து பாடுபட்ட எத்தனை இந்துக்களை உங்களுக்கு காட்டவேண்டும்?
திருமூலர் முதல் பாரதி, விவேகானந்தர், காந்தி, ஐயா வைகுண்டர் எல்லோருமே ஜாதியை எதிர்த்தவர்கள்தான், அவர்கள் இந்துக்கள் தான், முன்பே கூறியபடி பிராமணம் என்பது மட்டும் இந்து என்ற நினைப்பை விடுங்கள்,
இன்று 1% வீடுகளிலாவது தாங்கள் கூறிய மனுதர்மம் கடைபிடிக்கப்படுகிறதா? மனுதர்ம நூலை விட்டு இங்கே வேறு நூலே இல்லையா? இவர்களும் இந்துக்கள் தானே, ஒரு நூல் இருந்தால் அதை கடைபிடிக்கவேண்டும் என்று முட்டாள் தனமாக நம்புவதல்ல ஸநாதன தர்மம், இங்கே அனைவருக்கும் முழுமையாக யோசிக்க உரிமை உண்டு.
இரட்டை டம்ளர் போன்ற எல்லாக்கொடுமைகளையும் களையவேண்டியது நமது கடமை, அதற்கு ஒற்றுமை தேவை, இங்கே வந்து பிரித்து சண்டைபோட வைக்கும் நரித்தன வர்க்கங்களை என்ன வென்று சொல்வது,
நிஜமான கம்யூனிஸத்தை உணராமல் மதமாற்றிகளுக்கு அடிபணியும் கம்யூனிஸமும், பணத்துக்காக தன் இனத்தை காட்டிக்கொடுக்கும் கேவலமும் நிறைந்த நாட்டில் நாம் இருக்கிறோம், நம்மை திருத்திக்கொள்வோம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
கேள்விக்கு கேள்வி பதிலாகாது
கேள்விக்கு கேள்வி பதிலாகாது நன்பா.
என் கேள்விக்கு பதில் தராமல் நழுவுவதிலேயெ இருக்கிறீர்கள்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பூஜை செய்ய பிராமனர்கள் வழிபடுவார்களா?
முதலில் இதற்கு பதில் தாருங்கள்.
அவரவர் குலத்தொழிலை அவரவர்தான் செய்யவேண்டும் என்றவர்கள் அவர்கள் குலத்தொழிலான பூஜை செய்வதை விட்டுவிட்டு மருத்துவராகவும், அரசு அதிகாரிகளாகவும்.... இன்னும் பல"உயர்ந்த" வேலைகளுக்கு மாறியது ஏன்.
அவர்களின் தொழிலை அடுத்தவர்கள் செய்யகூடாது என்பவர்கள் ஏன் அடுத்தவர்களின் துறைகளில் நுளைய வேண்டும்?
பேர் வைப்பதில் கூட பிராமனர்களின் சூழ்ச்சி இருந்தது என்பதெ என் கருத்து. தனி மனிதனின் பெயரில் மட்டுமல்ல தமிழ் மாதங்களின் பெயர்கள், ஆண்டுகளின் பெயர்கள், தமிழிசையின் பெயர்கள் என எல்லாவற்றையும் மாற்றியது ஏன்?
கல்யாணம் என்பதற்கு வேறு என்ன அர்த்தம் கூறப்போகிறீர்கள்?
பாரதியின் மறுபக்கம் தெரியாமா?
வாங்கி படியுங்கள் " பாரதிய ஜனதா பார்ட்டி" புத்தகத்தை.
முதலில் இந்து என்பது மதமா இல்லையா?
மதம் என்றால் இந்து மதம் என்றால் என்ன? அதன் கோட்பாடு என்ன?
அதை பின்பற்றுபவர்கள் யார்?
தங்கள் கேள்வியே வேடிக்கையாக
தங்கள் கேள்வியே வேடிக்கையாக உள்ளது., நீங்கள் எதிர்ப்பது பிராமணரை மட்டுமே. என்று கருதுகிறேன் சரியா.
சரி பிராமணர்களை ஏன் நம்மவர்கள் எதிர்க்கிறார்கள் என பார்ப்போம்.
ஏன் என்றால் ஸாநாதன தர்மத்தின் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பவர்களில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு, மற்ற வர்களுக்கு எத்தனை நூல்கள் உண்டு என்பது கூட தெரியாது, பகவத்கீதையை 1 % மக்கள் கூட அவர்கள் பார்த்திருக்க முடியாது., அப்படி இருக்க மதமாற்றிகள் நினைப்பது இந்த பிராமணர்களை அழித்து விட்டால் ஸநாதன தர்மம் அழிந்து போகும் என்ற நப்பாசை. அவ்வாறு அழிந்து விட்டால் மற்றவர்களை அவதூறுகளை எழிதாக பரப்பமுடியும், மாதம் மாற்றிவிடமுடியும், உண்மையை சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள் என சூழ்ச்சி செய்கிறார்கள், இதற்கு நீங்கள் பலியாடு, சரியா பதில்?
உங்களுக்கே கூட இது தெரியாமல் இருக்கலாம், ஒத்துக்கொள்ள உங்கள் ஆணவம் இடம் கொடுக்காது. இதுதான் உண்மை.
ஸநாதன் தர்மத்தில் ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த மாதிரி அவர்களுக்கு பிடித்த தெய்வத்தை வணங்கவும் கண்மூடித்தனமாக நம்பாமல் தானாக சிந்திக்கவும் முழு உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
உங்களுக்கு பிராமணர் அல்லாதவர்கள் பூஜைசெய்யும் எத்தனை கோவிகளை காட்டவேண்டும்? மதமாற்றத்திற்கு பயன்பட்ட சாதியை ஒழிக்க வந்த ஐயா வைகுண்டர் ஏற்படுத்திய பதி (கோவில்) களில் பிராமணர் பூஜை நடத்த முடியாது, அங்கே பூஜையே கிடையாது, தெய்வ உரு கிடையாது, இதுவும் ஸநாதன தர்மமே. நான் மறுபடிமறுபடி கேட்டுக்கொள்வது பலேவேறு இடங்களில் மதமாற்றிகளின் சூழ்ச்சியால் எழுதப்பட்ட கருத்துக்களை தலையில் வாங்கி நடக்காமல் சுயமாக நல்ல நூல்களை படித்து அறியுங்கள். உண்மை விளங்கும்.
அவரவர் குலத்தொழிலை செய்வது அவரவர் விருப்பம், வேறு தொழில் செய்யக்கூடாது என விதி எதுவும் கிடையாது.
தங்கள் கேள்வியை நோக்கும் இடத்து பிராமணர்கள் தினம் தியானம் யோகா செய்கிறார்கள், அதன்மூலம் அறிவு வளர்கிறது, அதனால் நல்ல வேலையில் சிறக்கமுடிகிறது. நம் மக்களும் இவ்வாறு செய்தால் நமக்கும் அறிவு மிளிரும், எதையும் சிறப்பாக செய்ய முடியும்.
வேதம் எந்த ஒரு ஜாதியினருக்கும் சொத்து அல்ல. எலலோரும் அதை படிக்கலாம், என வேதமே கூறுகிறது. அதை விரும்பாதவர்கள் அதை படிப்பதை கேட்க நேர்நதால் அவர்களின் செவியில் பழுக்க காய்ச்சிய இரும்பு ஊற்றினாற் போன்ற உணர்வுடன் அந்த மூடர்கள் மனநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கோவிலில் நல்ல சத்சங்கத்தை கேட்பவர்கள் அதை விரும்பி கேட்டபவர்களுக்கு தேனாகவும் விரும்பாதவர்களுக்கு மேலே சொன்ன படியும் மனநிலை இருக்கும்.
எனவே தியானம், யோகம் போன்ற எல்லாமே எல்லோருக்கும் உரியது, இன்று பல கிருத்துவர்களும் முஸ்லீம்களும் வேதாத்திரி மகரிஷி, ஈஷா யோகா மையங்களில் இதை கற்று பயனடைகிறார்கள், நாம் இதை ஒத்துக்கொள்ளாமல் அடுத்தவரை குறைகூறி நடப்பது கேவலம்,
பேர்வைப்பதில் உங்கள் மனகுமுறலை கூறுகிறீர்கள்,. நித்தியகல்யாணி என்பது ஒரு மருந்து செடியின் பெயர் என்பது உங்களுக்கு தெரியுமா.
ஸநாதன தர்மம் பற்றி கேட்டுள்ளீர்கள்,
யார் யார் தன்னை நம்புகிறார்களோ அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல் அவர்களிலும் அன்போடு இறைவனை காண்கிறார்களோ அவர்கள் நீங்கள் கூறிய இந்துக்கள்.
ஏன் என்றால் நம்மில் உள்ளே இருப்பவன் இறைவனே என எல்லா வேதங்களும் கூறுகின்றன. அஹம் பிரம்மாஸ்மி, தன்னையே நம்பாதவன் நாத்திகன்.
இதையெல்லாம் உணராதவர்கள் பலர் சூழ்ச்சியாக கூறுவதை நம்பிவிடுவார்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா, ஸநாதன தர்மத்தில் மற்றவர்களை இழிவு படுத்துதலையே செய்யக்கூடாது, அதனால் மற்ற மதக்காரர்களை தாக்கி பேசுவதையே கேவலமாக நினைப்பார்கள்.
ஆனால் மற்றவர்களோ இதையே தங்கள் தொழிலாக செய்துவருகிறார்கள், மறுக்க முடியுமா உங்களால்?
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்ல கருத்து
நல்ல கருத்து சிந்திக்கவேண்டியவை.
எனக்கு இந்த பக்கங்கள்தான் நினைவுக்கு வருபவை
http://www.tamilhindu.com/tag/கிறிஸ்தவம்/
நண்பர்களே ஒரு சின்ன சிந்தனை
மதத்தின் பெயரால்,கடவுள் பெயரால் என்றும் மனிதர்கள் பிரிவது இயற்கை விதியோ ?? குரு
பரமஹன்ச யோகனந்தரின் சிறு விளக்கம். ஒரு யானைப்பாகனின் 4 குருட்டு மகன்கள் ,யானையைய் ஒரு நாள் குளிக்க வைத்தனர்.காலை தொட்டு கழுவியவன் காலெ யானை என்றான்,துதிக்கை தொட்டவன் அதையே யானை என்றான்.வாலை தொட்டவன் அதுவே யானை என்றான்.வயிறை தொட்டவன்.அதே முழு யானை என்றான். எல்லாம் கேட்ட யானை பாகன், அவர்களின் தந்தை சொன்னார் எல்லாம் சேர்ந்ததே
யானை என்றான்.அது போல எந்த மதம் முழுமையாய் கடவுளை கன்டது? முழுமையாய் கண்டவர்கள் அதிகம் பேசியதில்லை.
கடினமாக வித்தியாசமாக சிந்தித்தாலே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.ஆனால் முழு வெற்றியாகுமா?அனைவரும் ஏற்று கொன்டு,
நம் உள்மனமும் கொண்டாடுவதல்லவா வெற்றி?
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
நண்பர்களே ,வரலாற்றை பிரித்து
நண்பர்களே ,வரலாற்றை பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள். அருமை.
இந்தியா என்பது ஆதிகாலத்தில் பாகிஸ்தானையும் உள்ளடக்கிய ஒரு மாகாணம். அதில் வாழ்ந்த மக்கள் கூட்டம் இந்தியர்கள் என அழைக்கப்பட்டனர். அப்போது மதம் என்ற வார்த்தை சைவம்,வைணவம் என்ற வகையில் தான் இருந்தது. ஆனாலும் அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்ற கூட்டம்.அவ்வளவுதான். அவர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்ததால் இயற்கை பொருட்களான கல்,மண்,விலங்குகள்,மனித உருவங்கள் அனைத்தையும் கடவுளாக வழிபட்டனர். அறிவியலும் பகுத்தறிவும் பின்தங்கியிருந்த காலமது. பிற்காலங்களில் அரேபிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத சித்தாந்தங்கள் இந்தியாவில் நுழைய தொடங்கிய பிறகுதான் ஆட்சியாளர்களால் சலுகைகள் மதவாரியாக பிரித்துகொடுக்கப்பட்டன. அதன் விளைவுதான் இந்த மதங்களும் மதமாற்றங்களும்.
மற்றபடி இயற்கை நம்மை மனிதனாக வாழமட்டும்தான் இங்கே படைத்திருக்கிறது. எந்த உயிருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வதே மனிதம். அத்துடன் நமக்கும் பகுத்தறிவு இருக்கிறது. (இறைத்தூதர்களும் பகுத்தறிவாளர்கள்தான்.இப்படி வாழ்ந்தால் நன்மை என்று வழிகாட்டினார்கள் .அவ்வளவுதான்) நம்மை படைத்த சக்தி வந்து நீ இந்த மதத்தைதான் அந்த மதத்தைதான் பின்பற்றவேண்டும் என்று கூறவில்லை. இவைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.அதனால் இந்த சாதி மத பாகுபாடுகளை குப்பையில் தூக்கிபோட்டுவிட்டு மனிதர்களாக மனிதநேயத்துடன் வாழுங்கள்.(நம்மை படைத்த நம் அறிவுக்கு எட்டாத அந்த சக்திக்கு நாமும் நம் மண்ணில் வசிக்கும் மண்புழுவும் ஒன்றுதான். கோடானகோடி பிரமாண்டமான இந்த பிரபஞ்சத்தில் இந்த பூமியே ஒரு தூசு. அதில் நாமெல்லாம் எங்கே? அதனால் பிறந்தோமா,எந்த உயிருக்கும் தீங்கின்றி வாழ்ந்தோமா,இறந்தோமா என்று இருங்கள்.அவ்வளவுதான் வாழ்க்கை.)
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
உன்மைதாங்க. சாதி இனம், மதம்
உன்மைதாங்க. சாதி இனம், மதம் அனைத்தையும் மறந்து மனிதனாக வாழவேண்டும். காலம் காலமாக ஒரு சில வகுப்பினர் மட்டும் மற்ற வகுப்பினர் தாழ்தப்படுத்தியே வந்ததையே மறைத்து அவர்களை புனிதர்களாக எழுதுவது வெந்த புன்னில் வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது
கண்டிப்பாக கார்த்திக்.
கண்டிப்பாக கார்த்திக். தீண்டாமையை அழிக்க பாடுபடுவோம், அதற்காக மொத்த இந்து மதத்தையே குறைகூறுவது முட்டாள்தனம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
கையில் எண்ணை வைத்துகொண்டு
கையில் எண்ணை வைத்துகொண்டு நெருப்பை அனைக்கபோகிறீர்களா?
கிழையில் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்ட போகிறீர்களா?
சமுதாயத்தில் உள்ள இழிவான செயல்களின் கூடாரம்தான் மதம்.
சாக்கடை படிந்த உடல் மீது சந்தனம் தடவுவது முட்டாள்தனம்.
முதலில் சாக்கடை கழிவை நீக்கிவிட்டு வாருங்கள்.
ஹாஹா "கையில் எண்ணை
ஹாஹா
"கையில் எண்ணை வைத்துகொண்டு நெருப்பை அனைக்கபோகிறீர்களா?
கிழையில் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்ட போகிறீர்களா?"
இதே கேள்வியை நான் உங்களிடம் கேட்க வேண்டியது.
இந்து என்பது மதமாக இருக்கவில்லை என கூறிவிட்டேன், அப்படியென்ரால் நீங்கள் மற்ற மதங்களை சாக்கடை என்றுரைக்கிறீர்களா? ஹாஹா நல்லது.
சில மதங்களின் வெழி வெற்றுத்தோற்றத்தை வைத்து எல்லா மதங்களும் இவ்வாறுதான் என புரிந்து வைத்துக்கொள்வது முட்டாள் தனமானது.
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்,
ஸநாதன தர்மம் சொல்வது
தன்னை நம்புவனே ஆத்திகன்.
தன்னை நம்பாதவனே நாத்திகன்.
இப்போ பதில் சொல்லுங்கள் நீங்கள் ஆத்திகனா நாத்திகனா? 
நாத்திகன் என்றால் முதலில் உங்கள் மேல் ஒட்டியிருக்கும் அழுக்கை கழுவவேண்டியவர் தாங்கள் தானே.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அப்படி சொல்லுஙகள்
அப்படி சொல்லுஙகள்... கார்திக் சாக்கடையை தினிக்காதிர்கள்







