dharshi's படம்

உலகின் மூன்றாவது மிகப் பெரிய கத்தோலிக்க நாடான பிலிப்பைன்சின் தலைநகரம் மணிலா. 16 மாவட்டங்களை உள்ளடக்கிய அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இது 2007ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி இங்கு 16 இலட்சத்து 60 ஆயிரத்து 714 மக்கள் வசிக்கின்றனர். இது 38.55 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது.

உலகிலேயே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மணிலா முதலிடம் வகிக்கிறது. அரசியல், வணிகம், கலை, கல்வி, மதம், போக்குவரத்து என பிலிப்பைன்சின் ஒட்டுமொத்த தலையெழுத்தும் இங்குதான் நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய், நெல், கரும்பு, வாழை, சோளம், ரப்பர், புகையிலை போன்றவை முக்கிய விளை பொருட்களாக உள்ளன.

‘பிலிப்பினோ’ முதன்மை மொழியாக உள்ளது. அதுதவிர, ஆங்கிலமும், ஸ்பானிஷ¤ம் பேசப்படுகின்றன. பிலிப்பைன்சின் புகழ்பெற்ற தேசிய அருங்காட்சியகம் மணிலாவில் உள்ளது. சீனர்கள் தங்கியிருந்தது மற்றும் அவர்களின் பங்களிப்பு போன்றவற்றை விளக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் அந்த அருங்காட்சியகத் தில் வைக்கப்பட்டுள்ளன.

‘பெஸோ’ என்ற பெயரில் நாணயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மணிலாவுக்கு வருகை தருகின்றனர். பல்வேறு விதமான போக்குவரத்து வசதிகள் இங்கு காணப்படுகின்றன. டாக்ஸி கேப்ஸ், ஆட்டோ ரிக்ஷா, பெடி கேப்ஸ் போன்ற வாகனங்கள் மக்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மின்னணுப் பொருட்கள், துணி, எந்திரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன. உலகச் சுகாதார மையத்தின் அலுவலகம் இங்கு அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி :- தினகரன், இலங்கை.

3.66667
Your rating: None Average: 3.7 (3 votes)

கருத்துகள்

Ragavan's படம்

அப்படியா...


4

அப்படியா... Shock


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


dharshi's படம்

ஆமா...


ஆமா...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Ragavan's படம்

சரி சரி..


சரி சரி..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

(No subject)


4

doctor


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

(No subject)


3

Clap