வினா: சுவாமிஜி, தர்மம் செய்வதும், தர்மம் வாங்குவதும், மற்றவருக்காக இறங்குவதும் மனிதனின் பலவீனத்தைத் தானே காட்டுகிறது ?
மகரிஷியின் விடை:
தர்மம் செய்வதும், பிறர் துன்பம் கண்டு இறங்குவதும் தான் மனிதன் இயல்பாகும். இது பலவீனம் அல்ல. ஆன்மாவின் பலமாகும். வாங்குவதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். தேவையுள்ள போது வாங்குவதில் தவறில்லை. கொடுப்பவரின் மனத்திருப்திக்காகவும் வாங்கலாம்.
ஒருவர் பிச்சை எடுக்கிறான் என்றால் அங்கு தான் ஏழ்மை மற்றும் பலவீனம்(Poverty and Weakness) வருகிறது. பட்டினி கிடப்பவனுக்கு உணவு அளிக்க வேண்டியது தான். ஆனால் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இருப்பவனுக்கும், வீட்டில் சென்று அறுசுவை உணவு உண்பவருக்கும் சாப்பாடு போடுவது தர்மம் ஆகாது.
வினா:ஐயா, நான் இதுவரை வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளித்து வாழ்ந்து விட்டேன். ஆனால் நான் பெற்றதோ, துன்பமும் கஷ்டமுமே ஆகும். இப்போது நேர்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் என்ன செய்ய ?
மகரிஷியின் விடை
அறநெறியில் நம்பிக்கையோடு தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். வினைப்பதிவுகள் தீரும் காலத்தில் துன்பம் தோன்றும். அதை அனுபவித்துத்தான் தீர்க்க முடியும். ஆன்மீகப் பயிற்சிகள் உங்களுக்கு இதை மாற்றும் மனவலிமையைக் கொடுக்கும். அதற்கு வேறு மாற்று வழியில்லை.
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் நேர்மையற்ற முறையில் சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள். பிறகு உண்மை
புரியும்.
thanks to vethathiri.org
கருத்துகள்
நல்ல கருத்துகள் உங்களுக்கு
நல்ல கருத்துகள்
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் நேர்மையற்ற முறையில் சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள். பிறகு உண்மை
புரியும்.
-- ஹாஹா
அவர் அப்படியே போய்விடப்போறார்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ம்ம் அருமை
ம்ம் அருமை
--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!
மிகவும் உயர்ந்த அருமையான
மிகவும் உயர்ந்த அருமையான வரிகள்,,
மிகவும் பிடித்த வரிகள்:.....
"வாங்குவதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். தேவையுள்ள போது வாங்குவதில் தவறில்லை. கொடுப்பவரின் மனத்திருப்திக்காகவும் வாங்கலாம்"
அருமைத் தோழரே
நல்லவனாக இருந்து
நல்லவனாக இருந்து பார்க்கும்போது கிடைக்கும் நிம்மதியை அனுபவிக்கும் எவரும் தவறு செய்யத் தயங்குவார்கள்.








