இளையவர்களைப் படையில் சேர்ப்பதைத் தடுக்கவே, 'வலன்ரைன்' என்னும் கத்தோலிக்க மதகுரு இளம் இணையர்களுக்கு மணமுடித்து வைத்துள்ளார். இதனாலேயே அவரைச் சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் சாவடைந்த நாளே FEB 14. இந்நாள் உலகிற்கு நல்லதைச் செய்தவரை நினைவூட்டும் துக்க நாளே! அப்படியானால், இந்நாள் பொய்யான காதலர் நாளே! இது வரலாறு சுட்டும் உண்மையாதலால், காதலர்களே என் மீது சீறிப் பாய வேண்டாம். மாற்றுக் கருத்து இருப்பின் நீங்களும் தமிழ் நண்பர்கள் தளத்தில் குறி்ப்பிடுங்கள்.








