அன்பு நிறைந்த தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைந்துள்ள புதிய நண்பர்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன்.
தமிழ் நண்பர்கள் தளத்தின் சிறப்பறிந்து, தமிழால் தமிழ் உறவுகளைப் பேண தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களின் அறிமுகத்தாலும் பிற அறிமுகத்தாலும் நீங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைந்திருப்பீர்கள். உங்கள் இலக்குகள் எல்லாம் வெற்றி பெற தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்கள் எல்லோரும் உதவுவார்கள் என உறுதி கூறுகிறேன்.
அன்பு நண்பர்களே, தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைந்ததும் நாம் எல்லோரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள் என்பதை உணர்வோம். ஆகையால், எமக்குள் எத்தனையோ தேவைகள் இருக்கலாம்; அவற்றை நிறைவேற்ற உரிமையுடன் தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களின் உதவிகளைக் கேட்டுப் பெற முன்வாருங்கள்.
உங்களது எல்லாவிதான படைப்புகளையும் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்யுங்கள். உங்கள் பதிவைப்பார்த்து நண்பர்கள் கருத்திடலாம். அதற்குப் பதில் கருத்து அல்லது நன்றி தெரிவியுங்கள். நண்பராக இணைய வேண்டுகோள் விடுத்தால், ஆமோ இல்லையோ என பதிலளியுங்கள். எந்த வகையிலும் நட்பைப் பலப்படுத்தி எல்லோருடனும் இணைந்து எங்கள் தாய் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொல்களை நீக்கித் தூய தமிழ் பேண ஒன்றிணைவோம். இவை யாவும் என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களே!
தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைந்ததுள்ள புதிய நண்பர்களே! மீண்டும் மீண்டும் தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்கள் எல்லோரும் உங்களை வரவேற்கிறர்கள் என்பதைத் தெரிவிக்கின்றேன்.

கருத்துகள்
புதிய தமிழ் நண்பர்களை
புதிய தமிழ் நண்பர்களை வரவேற்பதில் நானும் கலந்து கொள்கிறேன்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நன்றி, வந்தோரை வாழ வைக்கும்
நன்றி, வந்தோரை வாழ வைக்கும் தழிழ் நாட்டன்பர்களுக்கு..... 
அன்பரே! தங்களுடன் இணைந்து
அன்பரே! தங்களுடன் இணைந்து நானும் நமது புதிய உறவுகளை தமிழ் நண்பர்கள் தளத்திற்கு இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்!










