joshi2010's படம்

பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்!
பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்!
பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்!

பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.

நன்றி.... தமிழ்விண் செய்தி

எனது கருத்து :
இது தமிழர்கள் அணைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு மகிழ்ச்சியான செய்தி..... தமிழீழத்தை ஒரு தேசமாய் பிரான்ஸ் அங்கீகரித்துள்ளது என்பதையே இது காட்டுகின்றது...........எல்லாவற்றையும் இழந்து, உயிரோடு மட்டும் வாழும் ஈழ ஜனங்களுக்கு இந்த வருடத்தில் இது ஒரு மகிழ்வான, ஆதரவான செய்தி.....முடிந்தால் எல்லா தமிழர்களும் இந்த தமிழீழ தபால் தலைகளை பயன்படுத்துவதின் மூலம்.... நம் ஒரு வகையில் நம் தமிழீழ ஆதரவை பெருகச் செய்யலாம்.....

7.25
Your rating: None Average: 7.3 (4 votes)

கருத்துகள்

vinoth's படம்

கண்டிப்பாக இது தமிழர்கள்


4

கண்டிப்பாக இது தமிழர்கள் அணைவரும் பெருமைப்படக்கூடிய ஒரு செய்தி.....


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

உலகெங்கும் வாழும்


7

உலகெங்கும் வாழும் தமிழருக்குக் கிடைத்த உயரிய மதிப்பு. இதனை உலகத் தமிழர் எல்லோரும் பாவித்து(பிரான்ஸ் தமிழர் ஊடாக) அவ்வவ் நாட்டவருக்கு வெளிப்படுத்தி மகிழ்வைக் கொண்டாட முன்வாருங்கள்.
Clap Clap Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

இது தமிழர்கள் அனைவரும்


9

இது தமிழர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு மகிழ்ச்சியான செய்தி தான்!!.....
Clap Clap Clap

rajudranjit's படம்

இன்னும் தொடரட்டும்1


9

இன்னும் தொடரட்டும்1 Clap Clap Clap