yarlpavanan's படம்

மன்னிக்கவும் நண்பர்களே!
தாங்கள் செய்த பதிவுகளுக்குச் சான்றாக தங்களது இணைய முகவரிகளைத் தரலாம். wall post இல் தலைப்பைத் தந்த பின் மிகுதியைப் படிக்க தங்களது இணைய முகவரியை click செய்யுமாறு கேட்பது அழகில்லை.

அது 'தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களைத் தங்கட பக்கம் வா' என்று பிச்சை கேட்பது போலத் தெரியவில்லையா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல சிறந்த பதிவுகளைத் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்த பின், அதற்குக் கீழே தங்களது இணைய முகவரிகளைக் குறிப்பிட்டால் அழகாக இருக்காதா?

நானும் பல தளங்களில் உறுப்பினர் தான். எந்த ஒரு தள உறுப்பினரையும் என் பக்கம் வா என்று அழைத்ததில்லையே! அது எனது புலமைக்கு இழுக்கு எனக் கருதுகிறேன்.

ஆகையால், எனது படைப்பைப் பதிகிறேன்; படைப்பின் தரத்தை முன் நிறுத்தியே வாசகர்களும் நண்பர்களும் என்னுடன் இணைகிறார்கள்.

அது போல உங்கள் திறமையைத் தமிழ் நண்பர்கள் தளத்தில் வெளிப்படுத்துங்கள். பதிவிடுவது மட்டுமன்றி மாற்றார் பதிவிற்குக் கருத்துத் தெரிவிப்பதிலும் உங்கள் திறமை வெளிப்படுமே. அது தான் உங்கள் தள வாசகர்களைப் பெருக்க உதவும். அதுவே இலக்கிய நேர்மையும் ஆகும்.

இனிய நண்பர்களே!
தங்களது சிறந்த பதிவுகளைத் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்யாமல்; பதிவின் தலைப்புகளை wall post இல் இட்டு; மிகுதியைப் படிக்க தங்களது இணைய முகவரியை click செய்யுமாறு தங்களது இணைய முகவரியைப் பதிவிடுவது 'தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களைத் தங்கட பக்கம் வா' என்று பிச்சை கேட்பது போலத் தான் வெளிப்படும்.

சில தளங்களில் இவ்வாறு அழைப்பது அல்லது மின்னஞ்சல் ஊடாக 'தங்கட பக்கம் வா' என்று அழைப்பது தடை செய்யப்பட்டுள்ளதோடு உறுப்பினர் நிலையையும் நீக்குகிறார்களே!

இணையப் பதிவுகளால் நான் நற்பெயரெடு்க்க உதவிய, எனது தாய்த் தளமான தமிழ் நண்பர்கள் தளத்தின் பழமையும் பெருமையும் நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டி வராது. ஏற்கனவே, நீங்களே அறிந்திருப்பீர்களே!

நண்பர்களாகிய நாம் ஒன்றிணைந்தால் தான் தமிழ் நண்பர்கள் தளத்தை இன்னும் மேம்படுத்தலாம். எனது பதிவு எவரையும் புண்படுத்தினால் என்னைத் தண்டிக்கவும்.

4
Your rating: None Average: 4 (6 votes)

கருத்துகள்

malathi's படம்

பொட்டில் அடித்தார் போல்


6

பொட்டில் அடித்தார் போல் சொல்வது என்பது இப்படித்தானா? Dingue


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


yarlpavanan's படம்

மிக்க நன்றி.


மிக்க நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Tamil's படம்

அன்புள்ள நண்பர் யாழ்பாவாணன்


1

அன்புள்ள நண்பர் யாழ்பாவாணன் அவர்களுக்கு,

தாங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தின் மீது வைத்திருக்கும் அன்பும் அக்கரையுமே இவ்வாறு எழுத வைத்துள்ளது என்பதை உணர்கிறோம்.

தமிழ் நண்பர்கள் தளத்தில் இரண்டு வகை பதிவுகள் உள்ளது. ஒன்று முதன்மை பதிவுகள், இரண்டு சுவர் பதிவுகள் (wall posts/ status updates), இவற்றில் முதன்மை பதிவுகளில் முழுபதிவும் பதிய கட்டாயப்படுத்துகிறோம். இங்கே முழு பதிவையும் இட்டு அவரவர் தங்கள் வலைதளத்தின் முகவரியையும் இட உரிமை உண்டு.

அதே சமயம் முதன்மை பதிவில் பதிவின் சிறிதை மட்டும் பதிந்து மேலும் தொடர்ந்து படிக்க வலைப்பூவிற்கு அழைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

பல பதிவர்களும் தங்கள் வலை தளத்தை மெருகூட்டவும், சிறப்பாக வளர்க்கவும் விரும்புவது இயற்கையே. அவர்கள் பதிவை பல நண்பர்களும் வந்து படித்து கருத்து சொல்வதையே சிறந்த பரிசாக எழுத்தாளர்கள் நினைப்பார்கள்.

இதற்காகவே, தமிழ் நண்பர்கள் தளத்தில் சுவர் பதிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை அவரவர் தங்கள் பக்கத்தில் அவரவர் விரும்பிய சிறு செய்திகளையோ தங்கள் வலை முகவரிகளையோ, அல்லது பதிவின் சிறிதை மட்டும் போட்டு மீதியை படிக்க வலை முகவரியையும் இட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் நண்பர்கள் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் வசதி ஆகும்.

இதை மற்ற பதிவுத்திரட்டிகள் போல செயல்படுத்தி வருகிறோம். இதை மேலும் சிறப்பாக விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேலைகள் நிறைவு பெற்றதும் வெளியிட உள்ளோம்.

நன்றி.
தமிழ்,
தமிழ் நண்பர்கள் சார்பில்,
http://tamilnanbargal.com


tamilnanbargal.com


yarlpavanan's படம்

மதிப்புக்குரிய தமிழ் அவர்களே,


மதிப்புக்குரிய தமிழ் அவர்களே, எனது உள்ளத்தில் எழுந்த எண்ணங்களையே பதிவு செய்தேன். இதனால் தமிழ் நண்பர்கள் தள முகாமைத்துவத்திற்கு தீங்கு வருமாயின், எனக்குத் தண்டனை தாருங்கள் அல்லது இப்பதிவை நீக்கிவிடலாம்.

பதிவின் முழுமை தான் பதிவருக்கு அழகு. பதிவின் சிறு பகுதியையோ தலைப்பையோ வழங்கி அதன் கீழ் இணைப்பையோ சுட்டியையோ பதிவது பதிவருக்கு அழகல்ல என்பதை பதிவர்கள் தான் உணரவேண்டும்.

குறித்த பதிவின் முதன்மைச் செய்தியைத் தந்தால், அப்பதிவின் முழுமையை அறிய நண்பர்கள் அவர்களின் தளத்தை நாடலாம். அதற்கு நான் எதிரி அல்ல. தளத்தில் சிலர் தொடர்ந்தும்; தாம் தமது தளத்தில் புதிதாகச் சேர்த்த பதிவை தமிழ் நண்பர்கள் தளச் சுவரில் (wall posts) இட்டு தங்கள் தள முகவரியை வழங்கி வருகிறார்கள். அதாவது, அதனை நான் அவர்களது விளம்பரமாகக் கருதியே இப்பதிவை பதிவு செய்துள்ளேன்.

ஒவ்வொருவரும் தமக்கென இணையப் பக்கம் வைத்திருப்பதையோ நடத்துவதையோ நான் ஊக்குவிக்கிறேன். அதில் அவர்கள் தூய தமிழ் பேண வழிகாட்டுகிறேன்.

ஆனால், அவர்கள் தமது சொந்தப் படைப்பாயின் முழுமையாகத் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்து தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களின் ஆதரவைப் பெறலாமே. மேலும், தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களின் பதிவுகளைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறலாமே. இவ்விரு பணிகளையும் செய்யாது; தாம் தமது தளத்தில் புதிதாகச் சேர்த்த பதிவை தமிழ் நண்பர்கள் தளச் சுவரில் (wall posts) இட்டு தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களின் கவனத்தை ஈர்ப்பது குறித்த பதிவர்களுக்கு அழகல்ல என்பதை மீளவும் வலியுறுத்துகிறேன்.

குறித்த பதிவர்களை மதிப்பீடு செய்ய அவர்களது முழுமையான பதிவோ தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களின் பதிவுகளைப் பார்வையிட்டுக் கூறிய கருத்துக்களோ தான் உதவும். இதன் படி தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களின் மதிப்பைப் பெற்ற பதிவர்கள் மேற்படி தளச் சுவரில் (wall posts) எதனையும் இடாமலே; தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்கள் அவர்களின் தளத்தைப் பார்வையிடுவார்களே.

என்னை எடுத்துக்கொண்டால்; தமிழ் நண்பர்கள் தளத்தில் எனது படைப்புகளை முதலில் பதிவு செய்கிறேன்; அதன் இணைப்பை கீச்சுக்கள்(Twitter), முகநூல்(Facebook) பக்கங்களில் பதிவு செய்கிறேன்; நண்பர்களின் தளமிரண்டிலும் மீள்பதிவு செய்கிறேன்(இம்மீள்பதிவு தமிழ் நண்பர்கள் தள முகாமைத்துவத்திற்கு எதிராயின், நிறுத்திக் கொள்ள முடியும்). நான் இவ்வாறு தான், எனது பதிவுகளுக்கான வாசகர்களை பெருக்க முனைகிறேன். சுவரில் (wall posts) தமது பதிவின் தலைப்பிட்டு இணைப்பிடுவோர் இதனைக் கையாள முடியுமே!

நான் எந்த ஒரு தனியாளையும் சுட்டியோ தாக்கியோ பகைக்க விரும்பவில்லை. நான் ஓர் இதழியியாளர் என்ற முறையில் சில கருத்துக்களைச் சொல்லி முடிக்கிறேன்.

பத்திரிகையில் எழுதுவோரும் சரி, இணையத் தளங்களில் பதிவு செய்வோரும் சரி பதிவை முழுமையாக மேற்கொள்ளுங்கள். அப்பதிவைப் படித்த வாசகர்கள் நீங்கள் விளம்பரம் செய்யாமலே உங்களைத் தேட வைக்கும் படி அமையும் வண்ணம் உங்கள் பதிவைத் தரமாக எழுதுங்கள். உங்கள் விளம்பரங்களை விட, உங்கள் முழுமையான பதிவைப் படித்த வாசகர்கள் உங்கள் மீது விருப்பம் கொள்வதாலேயே; நீங்களும் உங்கள் நூல்கள், இணையப் பக்கங்கள் போன்ற உங்களைச் சார்ந்த எல்லாமே அடையாளப் படுத்தப்படுகிறது.

முடிவாகச் சொல்வதற்கு ஒன்றுண்டு. பதிவர்களுக்கு ஒழுக்கம் தேவை. அதாவது, விளம்பரம் இன்றி பதிவின் தரத்தால், வாசகர்கள் மத்தியில் விருப்பம் அதிகரிக்கப்பட்டுப் பிரபலமாவதைப் பின்பற்றாலாம். அவ்வாறானவர்கள் சுவரில் (wall posts) குறும் செய்தி, தத்துவங்கள், வழிகாட்டல்கள், ஓரிரு வரிக் கவிதைகள் எனப் பல பதிவுகளைப் பதியலாம். மேலும், சுயவிவரப்(Profile) பதிவில் அவரவர் இணையத் தளங்களின் எல்லா முகவரிகளையும் பதிவு செய்யலாமே.

அன்புள்ள பதிவர்களே, எனது கருத்துக்கள் தங்கள் கருத்துக்களுடன் முரண்பட்டால் எதிர்ப் பதிவு செய்யுங்கள் உடன்பட்டால் ஒழுக்கமுள்ள பதிவர்களாக ஒன்றிணைந்து தமிழ் நண்பர்கள் தள மேம்பாட்டில் பங்கெடுப்போம் வாருங்கள். மதிப்புக்குரிய தமிழ் அவர்களே தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். அதே வேளை தமிழ் நண்பர்கள் தள ஒழுக்கக் கோவைக்குக் கட்டுப்படுகி்றேன்.
நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Ponvannan's படம்

யாழ்பாவாணனின் கருத்துக்கள்


யாழ்பாவாணனின் கருத்துக்கள் ஏற்புடையனவாக இருக்கின்றன. நானும் அவரை ஆதரிக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் தமிழ் நண்பர்கள் தளம் இன்னும் சிறப்படையும். தனித்து இயங்கி பெயர் பெறுவதைப் பெரிதாகக் கருதாமல் ஒன்றாக இணைந்து இயங்கி தமிழ் நண்பர்கள் தளத்தை மேலும் வலுப்படுத்துவோமே. இறுதியில் நன்மை அடையப் போவது நாம்தானே.

yarlpavanan's படம்

தனித்துத் தங்கள் பதிவுகளைத்


தனித்துத் தங்கள் பதிவுகளைத் தங்கள் தளத்தில் தொகுப்பதை வரவேற்க வேண்டும். அவர்களது பதிவை முழுமையாக தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்து, அதன் கீழ் 'சான்று:தமது இணையத் தள முகவரி' என முடிக்கலாம். இதனால் வாசகர் பதிவரின் ஏனைய பதிவுகளைப் பார்வையிட இடமுண்டு. இவ்வாறு பதிவு செய்யும் நண்பர்களைப் பாராட்டலாம். எல்லோரும் ஒன்றிணைந்து உலகில் தமிழ் நண்பர்கள் தளத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு, அதேவேளை அவரவர் தங்கள் தளங்களையும் மேம்படுத்தலாமே.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

"முடிவாகச் சொல்வதற்கு


8

"முடிவாகச் சொல்வதற்கு ஒன்றுண்டு. பதிவர்களுக்கு ஒழுக்கம் தேவை. அதாவது, விளம்பரம் இன்றி பதிவின் தரத்தால், வாசகர்கள் மத்தியில் விருப்பம் அதிகரிக்கப்பட்டுப் பிரபலமாவதைப் பின்பற்றாலாம். அவ்வாறானவர்கள் சுவரில் (wall posts) குறும் செய்தி, தத்துவங்கள், வழிகாட்டல்கள், ஓரிரு வரிக் கவிதைகள் எனப் பல பதிவுகளைப் பதியலாம். மேலும், சுயவிவரப்(Profile) பதிவில் அவரவர் இணையத் தளங்களின் எல்லா முகவரிகளையும் பதிவு செய்யலாமே."

ஐயா பொன்வண்ணனின் கருத்துக்கு எனது ஆதரவுகள். அன்பர் யாழ்பாவாணரின் ஆதங்கம் தமிழ்நண்பர்களின் தளம் சிறப்படைய வழிவகுக்கக் கூடியதே எனவே நமது தமிழ்நண்பர்கள் தளம் சிறப்படைய நாம் ஓரணியாய் நிற்போம்!

yarlpavanan's படம்

அறிஞர் பொன்வண்ணன்


அறிஞர் பொன்வண்ணன் அவர்களுக்குத் தெரவித்த பதிலையே தங்களுக்கும் கூறுகின்றேன். ஒவ்வொருவரும் தனித் தனி தளம் நடத்துவதை ஆதரிப்போம். ஆனால், தமது தளங்களில் தாம் இடும் பதிவின் தலைப்பைத் தமிழ் நண்பர்கள் தளச் சுவரில் (wall posts) இட்டு, மிகுதியைப் படிக்கத் தமது இணையத் தள முகவரியை தருவதை விட தமிழ் நண்பர்கள் தளத்தில் முழுமையான பதிவை மேற்கொள்ளலாம்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

திரு யாழ்பாவாணன் கருத்துகளை


3

திரு யாழ்பாவாணன் கருத்துகளை ஏற்கிறேன்.
தமிழ் நண்பர்கள் சார்பில் சொல்லப்பட்ட கருத்து நடப்பின் பதிவர்களின் பொதுவான இயல்பு. அதை தவறு என்றும் கூற இயலவில்லை.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தங்கள் நடுநிலையான கருத்தை


தங்கள் நடுநிலையான கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். தமிழ் நண்பர்கள் தளத்தால் வழங்கும் பதிவர்களுக்கான வசதிகளைக் குறைக்குமாறோ அல்லது பதிவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறோ நான் கேட்கவும் இல்லை. நானும் ஒரு எளிய(சாதாரண) பதிவர் என்ற வகையில்; அவ்வாறு தமிழ் நண்பர்கள் தள நிர்வாகத்தைக் கேட்க, எனக்கு உரிமையோ தகுதியோ இல்லை.

ஆயினும், தமது தளங்களில் தாம் இடும் பதிவின் தலைப்புடன் தமது இணையத் தள முகவரியை தமிழ் நண்பர்கள் தளச் சுவரில் (wall posts) பதிவதை நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பதிவர்கள் தங்கள் பதிவுகளை முழுமையாக தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்து, அதன் கீழ் 'சான்று:தமது இணையத் தள முகவரி' என முடிக்கலாம். இதனால் வாசகர் பதிவரின் ஏனைய பதிவுகளைப் பார்வையிடவும் இடமுண்டு. இதனையே நானும் விரும்புகிறேன். எனது எண்ணத்தையே இப்பதிவில் வெளிப்படுத்தி உள்ளேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


joshi2010's படம்

வணக்கம் நண்பரே,..... நான்


1

வணக்கம் நண்பரே,.....

நான் எழுதிய " என்னுடன் வாழ்ந்திட வா....அன்பே" என்ற கவிதையில் நான் விளக்கத்திற்கு கொடுத்த முகவரிக் கொணடு தாங்கள் இந்த பதிவினை எழுதியுள்ளீர்கள்... மிகவும் நன்றி........

நான் ப்ளாக் பதிந்துள்ளேன்... வந்து ரேட்டிங போடச் சொல்லி யாரிடமும் சொல்லவுமில்லை... பிச்சை ஏந்தவுமில்லை....பிச்சை கேட்டு என் பதிவுகளை பிரபலப்படுத்தும் எண்ணமும் சிறிதும் இல்லை..... . மேலும் அந்த கவிதைகள் எல்லாம் "தமிழ் நண்பர்கள்" தளத்தில் பதிந்தவை தான்...... அதன் இணைய முகவரி பெரிதாக இருந்த்தால் தான் என் ப்ளாக் முகவரி கொடுத்தேன்..... ஏற்கெனவே கவிதை பெரிய அளவாகிவிட்டதால் தான்....மேலும் என் தளத்திற்கு புகழும், ரேட்டிங்கும் எதிர்ப்பார்க்கும் அளவு திறமையும், எனது பெயருக்குப் பின்னால் தளத்தின் முகவரியை சேர்த்து அதனை பிரபலப்படுத்தும் அளவு பதிவுகளைப் போட நான் தங்களைப் போன்ற பெரிய பதிவாளரும் இல்லை.....

எனக்கு இணையத்தில் எழுத்து ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்த தமிழ் நண்பர்கள் தளம் தான்.......... இத்தளத்தின் பெருமையையும், பழமையையும் கெடுக்க வேண்டி கண்டிப்பாக நான் என் ப்ளாக் முகவரியைச் சேர்க்கவில்லை.......

மேலும் என் எழுதிய என் பதிவில் அக்கவிதைக்கான் " தமிழ் நண்பர்கள் தளத்தின் முகவரியைச் சேர்த்துவிட்டேன்..... தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


yarlpavanan's படம்

உண்மையில் நான், தங்களுடைய


உண்மையில் நான், தங்களுடைய எந்தப் பதிவைப் பார்த்தும் எதனையும் பொருட்படுத்தி இப்பதிவை எழுதவில்லை. சுவர் பதிவில் (wall posts) தலைப்பை மட்டும் இட்டு மிகுதிக்குத் தங்கள் தளத்தை நாடுக என்றவாறு அவரவர் இணைய முகவரியைக் கொடுப்பது அழகல்ல என்பதையே சுட்டினேன். எனது பதிவின் நோக்கு இதனடிப்படையிலேயே அமைந்தது.

தயவு செய்து என்னை மன்னிப்பீராக. என்னை மற்றவர்களை விடப் பெரியவராக நான் நினைப்பதில்லை. என்னை விட அதிகமான பதிவுகளை மேற்கொண்ட தாங்களே, என்னை விடப் பெரிய பதிவர்.

மொத்தத்தில் நாமிருவரும் தமிழ் நண்பர்கள் தளத்தின் மூலம் பயனடைந்தவர்களாயின், எமக்கிடையே கருத்து முரண்பாடு இருக்கக்கூடாது. எனவே, எனது பதிவில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டி, மாற்றுத் தீர்வுகளை முன்வைக்குமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

சிறு பதிவுகளாயின் முழுமையாகத் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்து, அப்பதிவின் கீழ் இணையமுகவரியை இட உடன்படுவது போல; பெரிய பதிவுகளாயின் அப்பதிவின் அறிமுகத்தை வழங்கிய பின் அவ்வறிமுகத்தின் கீழ் இணையமுகவரியை இடலாமே!

சிறந்த பதிவை அடையாளப்படுத்த சுவர் பதிவு (wall posts) போதாது என்பதால் முழுமையான பதிவோ அல்லது அப்பதிவின் அறிமுகமோ தான் நல்லது. இதனால், பதிவரின் நன்மதிப்பும் பேணமுடியுமென நான் நம்புகிறேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


joshi2010's படம்

வணக்கம் நண்பரே, எனது


வணக்கம் நண்பரே,

எனது கருத்திற்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி........ இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை...... ஆனாலும் உங்களுக்கு " லொள்ளு" ஜாஸ்தி............... நான் உங்கள் பதிவுகளை எல்லாம் தெரிந்து தான்... தங்களைப் பெரியவர் என்றேன்.... ஆனால் நீங்கள் பதிவுகளின் எண்ணிக்கை வைத்து என்னை வஞ்சப் புகழ்ச்சியில் வாழ்த்துகிறீர்.......

நான் இத்தளத்தில் பதிந்துள்ள பதிவுகள் அணைத்திலும் கவிதைகள் (தப்பு தப்பு கவிதைகள் அல்ல, கிறுக்கல்கள்_ மட்டுமே எனது சொந்த படைப்பு..... நான் அதனை இத்தளத்திலேயே ஏற்கெனவே சொல்லியுள்ளேன்.......

எனக்கு ஒரு பழக்கம் அதுவென்னவெனில் இணையத்தில் உலாவும் போது என்னை கவர்ந்த விஷயங்கள் எதுவாயினும் அதனை கணிப்பொறியில்
Ms- Word, Excel இவற்றில் காப்பி செய்து சேமித்து வைத்துவிடுவேன்..... ஓய்வு நேரங்களில் அதனை மீண்டும் படித்துப் பார்ப்பேன்.... எனில் எனக்கு நினைவுத் திறன் கம்மி தான்...... சொந்தமாக பதிவுகளை எழுதும் அளவிற்கு நம் கற்பனைத் திறன் வளரவில்லை..... தங்களின், பொன்வண்ணன், மேலும் இத்தளத்தில் சிறந்த பதிவர்களின் சொந்த பதிவைக் காணும் போது எனக்கு மனதில் எழுத வேண்டும் என்ற ஆவல் வரும்..... ஆனால் அதனை மேம்படுத்த, வளர்க்க வழியில்லை....

முடிந்தவரை.... எனக்குத் தெரிந்திருந்தால் பதிவுகளின் கீழ் அதன் ஆக்கத்தினை தெரிவித்து இருப்பேன்..... மேலும் என்க்கு பயனளிக்கும் என்ற விஷயங்களை மட்டுமே பதிந்துள்ளேன்........
எல்லாம் ஒரு பொது நலம் தான்னா?////////

நான் கூறிய கருத்துக்கள் ஏதேனும் தங்களை பாதித்திருந்தால் என்னை அன்புடன், நட்புடன் மன்னிக்கவும்.............


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


yarlpavanan's படம்

"உங்களுக்கு " லொள்ளு"


"உங்களுக்கு " லொள்ளு" ஜாஸ்தி............... நான் உங்கள் பதிவுகளை எல்லாம் தெரிந்து தான்... தங்களைப் பெரியவர் என்றேன்.... ஆனால் நீங்கள் பதிவுகளின் எண்ணிக்கை வைத்து என்னை வஞ்சப் புகழ்ச்சியில் வாழ்த்துகிறீர்......." என்பதில் உண்மையில்லை. இது கடவுள் மீது சத்தியம்.

நான் குறிப்பிட்டது; நீங்கள் சீனியர் நான் யூனியர் என்று எண்ணித் தான். மேலும், தங்கள் பதிவுகளைப் பார்வையிட்டு, தரக் குறைவாகவோ இழிவாகவோ கருத்துத் தெரிவித்ததும் இல்லை. தங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நான் ஒரு போதும் வஞ்சப் புகழ்ச்சியில் வாழ்த்த மாட்டேன். அப்படி எண்ணி என் மீது கோபம் கொள்ள வேண்டாம்.

தங்களின் எந்தப் பதிவையும் பார்வையிட்டு, குறை பிடித்து முரண்பட நான் ஒரு போதும் முயற்சி செய்ததில்லை. அதே போலத் தான் எந்தவொரு நண்பிரினதும் பதிவைப் பார்வையிட்டு, குறை பிடித்து முரண்பட நான் ஒரு போதும் விரும்பியதும் இல்லை. அது எனது பணியுமல்ல.

நண்பர் ஒருவர் "சுவர் பதிவில் (wall posts) தலைப்பை மட்டும் இட்டு மிகுதிக்குத் தன் தளத்தை நாடு" என்று அடிக்கடி பதிவதைப் பார்த்தே எனது பதிவை எழுதினேன். எனது பதிவில் குறித்த நண்பரின் பெயரைச் சேர்க்காது விட்டது என் தவறு. அது முறையுமல்ல.

இதழியலில் பெயர் சுட்டி அல்லது மறைமுகமாக அடையாளப்படுத்தி; தாக்குரை(கண்டனம்), திறனாய்வு(விமர்சனம்) செய்வதில்லை. அவ்வாறு செய்பவர் ஒழுக்கமற்றவர் என இதழியலில் கருதப்படுகிறது. அதனடிப்படையிலேயே பதிவின் தலைப்பு அல்லது பதிவின் கருப்பொருள் அல்லது பதிவின் விரிப்பு பொருட்படுத்தப்பட்டு தாக்குரை(கண்டனம்), திறனாய்வு(விமர்சனம்) செய்யப்படுகிறது. குறித்த நண்பரின் பெயரைச் சேர்க்காது விட்டதற்குக் காரணம் இதுவே.

நண்பர்களைப் பகைக்க வேண்டுமென்பதற்காக அல்ல, தமிழ் நண்பர்கள் தள மேம்பாடு கருதியே குறித்த பதிவை மேற்கொண்டேன். முடிந்த வரை எனது பதிவையும் குறித்த நண்பரின் சுவர் பதிவு (wall posts) நடவடிக்கைகளையும் பார்வையிடுங்கள். அதன் பின் என் மீது கோபம் கொள்ளுங்கள். எனக்குத் தண்டனை தாருங்கள்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


selvakumaar's படம்

வண‌க்கம் நண்பர்களே, எனக்கு


5

வண‌க்கம் நண்பர்களே,
எனக்கு தெரிந்தவைகளை இங்கே குறிப்பிடுகிறேன். நமக்குள் ஏன் இந்த போட்டி, சண்டைகள். நமக்குள் சண்டை போட்டதால் தான் நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையானோம். நமக்குள் சண்டை போட்டதால்தான் நமது ஈழ உறவுகளை இழந்தோம். இது நாம் இன்னும் மாறவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நமது எண்ணங்களை எடுத்து கூறுவதற்கு எவ்வளவோ நல்ல வலைதளங்கள் இருக்கிறது. நான் கண்டவற்றுள் தமிழ் நண்பர்கள் என்ற இத்தளம் தமிழ் நண்பர்களுக்காகவே ஒரு சிறந்த தளமாக இருக்கிறது. இதில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளை கடைபிடித்து நமது என்னங்களை வெளிப்பத்துவோம். நாம் நமது வலைதள அறிவை வெளிக்காட்டுவதற்கு எவ்வளவோ நல்ல தளங்கள் உள்ளன. அவற்றில் உங்கள் திறமைகளைக் காட்டுங்கள். அதற்கு பதிலாக இங்கிருந்து நண்பர்களை இழுப்பது நல்லது அன்று.
நமது நண்பர் திரு.யாழ்பாவணன் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. எனவே நமது வலைதள அறிவை வெளிப்படுத நமது தமிழ் நண்பர்கள் வலைதளத்திள் நமது பதிப்புகளை வெளியிடுவோம். மாறாக நமது நண்பர்களை தனது சொந்த வலைதளத்திற்கு இங்கிருடந்து தூண்டில் போட்டு இழுப்பதை நிறுத்துவோம். நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி சுமுகமாக இருப்போம். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
yarlpavanan's படம்

நண்பரே தங்கள் கருத்தை


நண்பரே தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் தனித் தனி தளம் நடத்தலாம். அவரவர் தளத்தில் பதிவிடும் முழுமையான பதிவை தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்து அதன் கீழ் 'சான்று:தங்கள் தள முகவரி' எனப் பதியலாம். அதனால், பதிவரின் புலமையால்; பதிவரின் தளத்தை நாடும் தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்கள் இருக்கலாம். இதனால் குறித்த பதிவர் தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களை விளம்பரப்படுத்தியோ வலிந்தோ தனது தளத்திற்கு இழுக்காது ஒழுக்கம் பேணுவதாகக் கருதமுடியும். அதேவேளை தனது முழுமையான பதிவைத் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்து தனது புலமையால் தமிழ் நண்பர்கள் தள உறுப்பினர்களை நேர்மையான வழியில் தனது தளத்திற்கு இழுக்கவும் முடியும்.

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பதிவை முழுமையாகத் தமிழ் நண்பர்கள் தளத்தில் பதிவு செய்யும் போது முகநூல்(Facebook), கீச்சுக்கள்(twitter), google plus போன்ற தளங்களை விட; தமிழ் நண்பர்கள் தளத்தை உயர்த்தலாம். "நான் கண்டவற்றுள் தமிழ் நண்பர்கள் என்ற இத்தளம் தமிழ் நண்பர்களுக்காகவே ஒரு சிறந்த தளமாக இருக்கிறது. இதில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளை கடைப்பிடித்து நமது எண்ணங்களை வெளிப்படுத்துவோம்." என்ற நண்பர் selvakumaar அவர்களின் கருத்தைப் பின்பற்றித் தமிழ் நண்பர்கள் தளத்தைத் தரம் உயர்த்த நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil