இனதலைவர்களுக்கு உள்ள வன்முறை கொண்ட மனதினால் வந்தவினை இந்த கலவரம்,இன கட்சிகாரர்கள் ஒன்றும் நல்லவர்களும் இல்லை, காரணம் கைதியாக பல வருடங்கள் சிறையில் இருந்தவர்கள் என்பது இந்த உலகமே அறியும். உயிரின் மதிப்பு தெரியாமலேயே இது போன்ற ஜாதி சண்டையில் பங்கெடுத்து (அப்பாவிகள் )உயிரை விடுவது தென்மாவட்டகளில் மட்டுமே நடக்கும்...... பல பேர் ஒரு இடத்தில கூடும் போது அதுவும் ஒரே இனகாரர்கள் என்னும் போது அவர்களிடம் ஒரு இனம்புரியாத கட்டுகடங்காத தைரியம் உருவாகி ஒழுக்கமின்மைக்கும்,அராஜகத்திற்கும் வழி வகுக்கிறது....அதுவே இது போன்ற வன்முறைகளை தூண்டுகிறது. இந்த கலவரம் ஒரு சிலர் டாஸ்மாக் போன பின் வந்தவினைதான் என்று நான் நினைக்கிறன் இதில் என்ன வென்றால் கூட்டமாக இருக்கும்போதுதான் மனிதன் பயபடுவதில்லை இதுவே தனியாக இருந்தால் இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்து இருக்காது. அந்த இனம் மக்களின் தலைவர்கள் செய்யும் வேலைதான் இது. இவர்கள் அந்த இனம் மக்களின் கல்வி அறிவை வளர்க்கமாட்டர்கள்.வன்முறையை வளர்த்து விடுகின்றனர்.அந்த மாவட்டத்தில் கல்வி அறிவு உள்ள மக்கள் மிகவும் குறைவு.காரணம் தின பிரச்சனை( சாப்பாடு ........முதலியன )அவர்களுக்கு சரியாக இருக்கிறது.மத்திய, மாநில அரசாங்கம் நிறைய வளர்ச்சி திட்டங்கள் செய்கிறது .அந்த இனத்தின் தலைவர்கள் இதனை அவரவர் இன மக்களுக்கு எடுத்து சொல்லி அவர்களின் கல்வியை வளர செய்யாமல் இன கலவரத்தை வளர்த்து அதில் அவர்கள் (தலைவர்கள்)குளிர் காய்கின்றனர். இது இந்த (ஒரு சில )அப்பாவி மக்களுக்கு தெரியாமல் தனது இனத்தின் ஆளுமையை என்று நினைத்து அரசாங்க சொத்தை சேதபடுத்தி, இந்த உலகில் உள்ள மக்களிடம் (அந்த இனத்திற்க்கே) காட்டுமிராண்டி என்ற கெட்டபெயர் சம்பதித்து கொள்ளுகின்றனர்.இவர்களை,
மனித மிருகங்கள் ஆக்கி கொண்டு இருக்கிறர்கள்.இந்த இனத்தின் தலைவர்கள்.இதில் யார் பெரியவர் என்று சண்டை வந்து விட்டால் இந்த பூமி தங்காது.அமைதிக்கு போராடியவர்களின் குரு பூஜையில் இந்த கலவரம்.என்ன கொடுமை இது!!!!!!!!!!!!
இதை இந்த இன மக்கள் புரிந்து கொள்ளுவார்கள் என நம்பிகையுடன்
aaju
- aaju's blog
- Login or register to post comments
- 288 reads
கருத்துகள்
அப்பாவி மக்களுக்கு தெரியாமல்
அப்பாவி மக்களுக்கு தெரியாமல் தனது இனத்தின் ஆளுமையை என்று நினைத்து அரசாங்க சொத்தை சேதபடுத்தி, இந்த உலகில் உள்ள மக்களிடம்
(அந்த இனத்திற்க்கே) காட்டுமிராண்டி என்ற கெட்டபெயர் சம்பதித்து கொள்ளுகின்றனர்.
இவர்களை,மனித மிருகங்கள் ஆக்கி கொண்டு இருக்கிறர்கள்.
இந்த இனத்தின் தலைவர்கள்.இதில் யார் பெரியவர் என்று சண்டை வந்து விட்டால் இந்த பூமி தங்காது.அமைதிக்கு போராடியவர்களின் குரு பூஜையில் இந்த கலவரம்.
___________________
உண்மை தான் தோழரே!!
இந்த கலவரம் ஒரு சிலர்
இந்த கலவரம் ஒரு சிலர் டாஸ்மாக் போன பின் வந்தவினைதான் என்று நான் நினைக்கிறன் இதில் என்ன வென்றால் கூட்டமாக இருக்கும்போதுதான் மனிதன் பயபடுவதில்லை இதுவே தனியாக இருந்தால் இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்து இருக்காது. அந்த இனம் மக்களின் தலைவர்கள் செய்யும் வேலைதான் இது. இவர்கள் அந்த இனம் மக்களின் கல்வி அறிவை வளர்க்கமாட்டர்கள்.வன்முறையை வளர்த்து விடுகின்றனர்.
மிகவும் அருமையான கட்டுரை











