வணக்கம். "நான் நேற்று இரவில் பதிந்த பதிவுகளை ஏன் நீக்கினீர்கள். தங்கள் விதிமுறைகளுக்கு புறம்பாகவோ, மாற்றாகவோ ஒன்றும் பதியவில்லையே? தாங்களாகவே என் அனுமதியில்லாமல் எனக்கு ஒன்றும் தகவல் தெரிவிக்காமல் எப்படி நீக்கலாம். அப்பதிவுகளுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? விளக்கம் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். சரியான காரணம் தெரியாமல் இனிமேல் நான் தங்களின் தளத்தில் இருக்க விருப்பமில்லை. விலகிவிட நினக்கிறேன். தங்கள் விளக்கம் வேண்டுகிறேன்."
நண்பர்களே,
மேலே கண்ட கடிதத்தை நிர்வாகிக்கு அனுப்ப இயலவில்லை. நேற்று இரவில் பதிந்த கிட்டத்தட்ட முப்பது நாற்பது பதிவுகளை காரணமில்லாமல், எனக்கு ஒரு வரியும் எழுதி தெரிவிக்காமல், நீக்கியிருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. சரியான காரணமில்லாமல் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டதால். இனிமேல் நான் பதிவுகள் போட எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும். இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
அன்புள்ள
விஸ்வம்.
கருத்துகள்
நிர்வாக இயக்குனர்
நிர்வாக இயக்குனர் அவர்களுக்கு...!!
ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறாக இது
இருக்க வேண்டும் என நம்புகிறேன்.. அப்படி இல்லாத பட்சத்தில்
பதிவுகளைப் பதிபவரிடம் ஒரு அறிவிப்புக் கொடுத்து விட்டு (அது விதிமுறைப்படி இல்லாத பதிவாயிருந்தாலும் கூட..) அதனை அழித்தால் அவருடைய மனம் புண்படுதலைத் தவிர்க்க முடியும் என்பது எனது கருத்து..!! அடுத்த முறை அந்த தவறும் கூட நிகழாதல்லவா..!! நன்றி..!!
annaa
ha....ha...ha...idhu romba
ha....ha...ha...idhu romba kalamagave nadandhu varugiradhu....ennudaya padhivugal kooda pala ippadi hide seyyappattuvittadhu....adhanaldhan nan padhivugal poduvadhai kuraithuvitten.(Thalam, oru kurippitta madhavadhigalin pracharathukkum,ambulimama kadhaigalukkagavum odhukkappattuvittadhu.)
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
என்ன குமரன் தமிழ் மறந்து
என்ன குமரன் தமிழ் மறந்து போச்சா?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
வணக்கம் ஐயா நமது தளத்தில்
வணக்கம் ஐயா
நமது தளத்தில் சிறப்பாக செல்பட்டுவரும் தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிந்த அந்த கவிதைகள் கவிஞர் துரை அவர்களுடையது.
2. இவர் நம்து தளத்தின் உறுப்பினர். (http://tamil2friends.com/friends/vceprojects)
3. இவரது கவிதைகள் ஏற்கெனவே தளத்தில் பதிப்பட்டுவருகிறது.
http://tamil2friends.com/user/739/posts/kavithaigal
அதே கவிதைகளை மறுபடி தளத்தில் போடவேண்டாம் என்றே அப்பதிவுகள் அழிக்கப்பட்டது.
தங்களிடம் தெரிவிக்க இன்று மடல் அனுப்ப இருந்தேன். மன்னி்க்கவும்.
மேலும் அடுத்தவர் கவிதைகளை அவரவர் அனுமதி பெற்று பதிய வேண்டுகிறோம். http://tamil2friends.com/node/45
நன்றி
தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com

எது நடந்ததோ, அது நன்றாகவே
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது..................
எல்லோரும் கோபத்தை மறந்து, சந்தோஷமாக இருப்போம்...








