கருத்துகள்
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு. துரோகம் செய்பவன் எப்படி நண்பனாக முடியும். முழுவதும் விலகிவிடத்தான் வேண்டும்.
நானாக இருந்தால்
நண்பனாக இருந்ததால் அவனுக்கு நம் பலவீனங்கள் நன்கு தெரியும். அதனால் அவனை முழுவதுமாக விலக்காமல் நட்பை தொடரவேண்டும். அவனுக்கு நாம் போலியாக நண்பன் போல் நடிக்க வேண்டியதுதான்.இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். கடந்த ஆறு மாதங்களில் இரண்டு துரோகங்களை சந்தித்துள்ளேன். என் அனுபவம்.
சந்துரு
செய்த தவறுக்கு அவரே
செய்த தவறுக்கு அவரே வருந்தினால் அரவணைப்பதில்
தவறொன்றுமில்லை..!!
நன்றி..!!
annaa
"நம்பி கெடுப்பவனுடன் நட்பாய்
"நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட
நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்"
"நல்ல நண்பர்கள் ஆபத்தில் உதவுவார்கள்
கெட்ட நண்பர்கள் ஆபத்தை தருவார்கள்"
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
கெட்டவனாயிருந்தாலும் நம்
கெட்டவனாயிருந்தாலும் நம் நட்பை அளவுடன் வைத்துக் கொள்வதுதான் நல்லது. விலகிப் போவதால் ஒரு பகைமை வருவதற்கு வாய்ப்பாகி விடும்.அதை தவிர்த்துக் கொள்ளலாமே!
நம்பிக்கை
நட்பு என்பது முதலில் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை.
நட்பு துரோகம் என்பது நம்பிக்கை துரோகம்
தெரியாமல் செய்தால் தவறு
தெரிந்தே செய்தால் தப்பு
தவறு செய்தவன் மன்னிக்கப்படலாம்- அவன் ஒப்புக்கொள்ளும் போது!
தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டியவன்
உங்கள் மன அமைதி உங்களுக்கு
உங்கள் மன அமைதி உங்களுக்கு முக்கியமாக தோன்றினால் அந்த நபரிடம் இருந்து விரோதம் இல்லாமல் விலத்திக்கொள்வதே நல்லது. ஆனால் அந்த நபரை மனிதராக மதிக்க வேண்டும். மனிதர்கள் பிழையும் விடுவார்கள் என்ற சமாதானமான (வன்முறையை உருவாக்காத) சிந்தனையுடன் விலக வேண்டும்.










