rajudranjit's படம்

வணக்கம் இந்தியச் சகோதரர்களே! சில நேரங்களில் நல்லதை சொல்பவர்கள் பையித்தியக்காரர்கள் என அழைக்கப்படுவதுண்டு, இது இன்று நேற்று புதியதல்ல,

உலகம் தோன்றிய முதல் நடந்து வரும் ஒரு அடக்கு முறையும் கூட, சிந்தித்து செயல்படுவது எல்லா உயிரிடத்தும் இயல்பாய் உள்ளதே, ஆனால் மனித சமூகத்தில் அது மித மிஞ்சியேயுள்ளது

எதை நாம் சிந்தனை என்கின்றோமோ அது நம்மை பார்த்து சிரிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகின்ற நிலையில் நாம் ஒரு பையித்தியம்,

எதை நாம் நம் சிந்தனையின் வழி சிந்தித்து செயல்படுத்தி நமக்கும் நம்மை சேர்ந்தவர்களுக்கும் பயனுள்ளாதாக்குகின்றோமோ அப்போது கிண்டலும் கேளியும் செய்தவர்கள் நம்மை ஆச்சரியத்துடன் நோக்குவது சிந்தனை வெற்றிப் பெற்று நம்மை அதிபுத்திசாலி எனப் புகழும்

யார் எதை சொன்னாலும் அதை கவனியாமல் மக்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் நல்லதை செய்ய முற்பட துணிந்துவிட்டால் நாம் அடுத்தவரை எண்ணி தயங்காமல் நாம் நம் பாதயை நோக்கி வெற்றி நடைப்போட்டு அக்காரியத்தை வெற்றிப் பெற வைப்பதிலே நாம் பயனளிப்பவராகத் திகழவும் வரும் தலைமுறைகளின் வாழ்வு சிறக்கவும் உலகம் சமாதானமும் சிறப்பும் அடைய வழி செய்யும்

ஆமாம் இதை படிக்கும் தாங்களெல்லாம் நினைக்கலாம், இவன் எதை சொல்ல வருகின்றான் எதற்காக இவ்வளவு சுற்று சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று

காரணம் நல்லதை சொல்ல தயக்கமில்லை, அதை ஒரு பொருட்டாக சொல்ல வரும்போது செவிமடுக்காதவர்களின் ஏளனம் எமக்கு ஒரு முட்டுகட்டையுமாகாது ஆனால் நாம் வாழும் நாடு நமக்கு என்றும் புண்ணியபூமி

அப்புண்ணிய பூமி அன்னியரின் கைப்பாவையாகிவிடக் கூடாது என்பதன் நோக்கமே!

நோக்கம் அடுத்த சிந்தனையில்!

என்றும்: சுஷ்ருவா!

6
Your rating: None Average: 6 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

அப்புண்ணிய பூமி அன்னியரின்


5

அப்புண்ணிய பூமி அன்னியரின் கைப்பாவையாகிவிடக் கூடாது

இந்த கவலை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளது. ஆனால் ஆள்பவர்கள் அதிகம் பேர் அப்படி நினைக்க வில்லை என்பது வருத்தமே.

இன்னும் நிறைய எழுதுங்கள்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

ஆள்பவர்கள் மேல் எந்தத்தவறும்


ஆள்பவர்கள் மேல் எந்தத்தவறும் இல்லை நண்பரே! தன்னை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுமக்களின் விழிப்புணர்வு சரியானதாக இல்லாததே அக்குறை!

நன்றி நண்பரே! கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன்!

joshi2010's படம்

அருமையான


7

அருமையான சிந்தனை.....
"அப்புண்ணிய பூமி அன்னியரின் கைப்பாவையாகிவிடக் கூடாது என்பதன் நோக்கமே!"

உலகிலுள்ள ஒவ்வொரு தமிழனின் எண்ணமும் அது தான்.......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


rajudranjit's படம்

அரசியல் சதுரங்கத்தின் முன்


அரசியல் சதுரங்கத்தின் முன் நல்லவைகளும் தீயவையே, தீயவைகளை வெற்றிக்கு மட்டும் நல்லவையாக பயன்படுத்துகின்றார்களே அங்கே தான் உருவாக்கப்படுகின்றது உண்மைகளின் அழிவுகள், தப்பித் தவறி அப்படியும் சில உண்மைகள் உயிர் பிழைத்து உலகின் பார்வையின் முன் நீதி கேட்கின்றது!

நன்றி நண்பரே!