saravanamuthu's படம்

நாடகத்தில் நடித்த மக்குப்பையன்

அது ஒரு சின்ன கிராமம். அங்கே ஒரு பள்ளிக்கூடம்.
அதிலே நிறைய பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விடுமுறை வரும் சமயத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவைக்
கொண்டாடுவது வழக்கம்.

பிள்ளைகள் எல்லாம் ஆளுக்கு ஒரு வேடம் போட்டுக்கொள்வார்கள். ஒரு நாடகம் மாதிரி நடித்துக் காட்டுவார்கள்.

மாதா, சூசையப்பர், ஆடு மேய்ப்பவர்கள், மூன்று ராஜாக்கள், காபிரியேல் தூதர்...
இப்படி எல்லோரும் அதிலே வருவார்கள்.

காபிரியேல் தூதர் வானத்தில் தோன்றுவார்.
“உங்களுக்கு இறைவன் மனுவாக அவதரித்துள்ளார்”என்று கூறுவார்

வானத்திலே வால் நட்சத்திரம் தோன்றும். மூன்று ராஜாக்கள் பின் தொடர்ந்து வருவார்கள்

இந்த நிகழ்வுகளையெல்லாம் அந்தப் பள்ளியின் மாணவர்கள் மேடையிலேயே நடித்துக் காட்டுவார்கள்

ஒவ்வொரு ஆண்டும் இது நடைபெறும்

ஒரு தடவை கிறிஸ்துமஸ் விழாவை இது மாதிரி கொண்டாடுவதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் எல்லாம்

நடந்து கொண்டிருந்தன. நாடகத்தில் யார் யாருக்கு என்னென்ன வேடங்கள் என்பதை முடிவு செய்து ஆசிரியர்கள் முன்கூட்டியே முடிவு செய்து அறிவித்தார்கள்.

மாணவர்கள் எல்லோருக்கும் ஆளாளுக்கு ஒரு வேடம் கிடைத்தது.

அந்த வகுப்பிலேயே மக்குப் பையன் ஒருவன் இருந்தான்
விளையாட்டில் அந்தப் பையனை மற்றவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை.

அவனுக்கு ஒரு வேடம் கொடுக்கவேண்டும். என்ன வேடம் கொடுப்பது?ஆசிரியர்கள் மிகவும் தயங்கினார்கள். யோசித்தார்கள். கடைசியாக வேறு வழியின்றி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

“இதோ பார்.... நீ என்ன பண்றே..... சூசையப்பரும் மாதாவும் ஒவ்வொரு விடுதியாக இடம் கேட்டுக்கொண்டு
உன்கிட்ட வருவார்கள். நீ விடுதிக்குள்ளேயிருந்து வெளியே வந்து, இங்கே இடமில்லை என்று சொல்லவேண்டும்.

அவ்வளவுதான் உன் வேலை.” ஆசிரியர் சொன்னதைக் கேட்டுச் சரி என்று தலையாட்டினான் அந்தப் பையன்.

தினமும் தவறாமல் ஒத்திகை நடந்தது.
எல்லாம் முறையாக நடந்தது. விழா நாளும் வந்தது.

அரங்கிலே அமர்ந்திருக்கிற பார்வையாளர்கள் அனைவரும் மேடையை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.நிறைமாத கர்ப்பிணியான தேவமாதாவை அழைத்துக்கொண்டு வருகிறார்

சூசையப்பர். ஒவ்வொரு விடுதிலேயும் இடம் கேட்கிறார். நம்ம மக்குப் பையனிடமும் வருகிறார்.இடம் கேட்கிறார்

இவன் பதில் சொல்லவேண்டும். இல்லை.... இடம் இல்லை” என்று சொல்ல வேண்டும்.
ஆனால் அப்படிச்சொல்லவில்லை. பேசாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

மேடைக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஆசிரியர் இவன் பேச வேண்டிய வசனத்தை எடுத்துக் கொடுக்கிறார்.இங்கே இடமில்லைன்னு சொல்லு.. என்று மெதுவாகச் சொல்கிறார்.

அவன் அப்போதும் ஒன்றும் சொல்லாமல் சும்மா நிற்கிறான்.

கூட்டத்தில் சலசலப்பு. எல்லோரும் சிரிக்கிறார்கள்

மேடையிலே இருக்கிற மாதாவுக்கும் சூசையப்பருக்கும் மேற்கொண்டு என்ன செய்வதொன்று புரியவில்லை.
தவிக்கிறார்கள்.

கடைசியாகப் பையன் வாயைத் திறந்தான்.

“ஐயா... இங்கே இடமில்லை. ஆனா எங்க வீட்டுக்கு வாங்க நிறைய இடமிருக்கு” என்றான் தன் கண்களைத்
துடைத்துக் கொண்டே.

எல்லோரும் அவனைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
அந்தச் சிறுவனின் கண்கள் கலங்கியிருக்கின்றன.
முகம் மிகவும் சிவந்திருக்கிறது.

நிஜமாகவே அழுதிருக்கிறான். அதனால்தான் அவனிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை.

கூட்டத்தில் சிரித்தவர்கள் எல்லாம் இப்போது மெளனமாகி விட்டார்கள்
----------------- படித்ததில் பிடித்தது ---------------

----------- சிறகை விரிப்போம் நூலிலிருந்து!----------

சரவணமுத்து!!!!

5
Your rating: None Average: 5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

நன்று


6

நன்று


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


sugiri's படம்

குழந்தை மனம் கல்மிஷம்


4

குழந்தை மனம் கல்மிஷம் அற்றது!!!! அதனால் தான் கடவுள் அங்கே குடியிருக்கிறான்.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/