joshi2010's படம்

வணக்கம் நண்பர்களே...

இன்றைய நாட்களில் நம் தளத்திற்கு தினந்தோறும் பல புதிய நண்பர்கள் நம் தளத்தில் உறுப்பினர்களாக இணைகின்றனர்...... இது மிகவும் வரவேற்கத் தக்க ஒன்று ...... தளத்திலும் பல புதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது...... நண்பர்களின் சார்பாக அட்மினுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்......

இத்தளத்தில் சிறப்பாக செயல்பட்ட பல பழைய நண்பர்கள் இன்றைய நாட்களில் இத்தளத்திற்கு வராதது இத்தளத்திற்கு எங்களைப் போன்றவர்களுக்கு சிறிது.....வருத்தம் தான்...... ஆனாலும் இன்றைய நாட்களில் பல புதிய நண்பர்கள் அருமையான கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பதிவது.... மிகவும் ஒரு நல்ல செயல் தான்......

இத்தளத்திலும்..... சிலர்.... .... பெண்களை மட்டுமே குறி வைத்து..... மெஜேஸ் அனுப்பி மட்டுமே வருகின்றனர்.... .என்ன காரணம் என்று புரியவில்லை....... காலப் போக்கில் இது ஒரு டேட்டிங் தளமாக மாறிவிடக் கூடாது என்பதே என் மனக் கவலை....... இத்தளத்தில் உள்ள பல நண்பர்கள் சமுதாயத்தில் பல நல்ல நிலைகளில் உள்ளனர்..... அவர்களின் நட்பைப் பெற்று .... அவர்களின் வாழ்விலும் ஒரு மாற்றம் ஏற்பட்டால் அது இத்தளத்திற்கும் பெருமை.... .தமிழால் நாம் ஒன்றினைந்தோம் என்று நம் தாய் மொழிக்கும் பெருமை......

இன்னும் இத்தளத்தில் புதியதாக சேரும் பலர்... ஆங்கிலத்தில் தங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிகின்றனர்..... நான் ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை..... ஆனால் இத்தளம் முற்றிலும் தமிழ் தளமாக இருக்க வேண்டுமென்பது என் அவா.....
மேலும் இத்தளத்தில்.... நமது அட்மின் முயற்சியால்..... தளத்திற்கு வரும் அணைவரும்.... எளிதாக " தமிழில் " டைப் செய்ய வசதிகள் தரப்பட்டுள்ளது...... அதனை அணைவரும் பயன்படுத்தினால் ... மிகவும் நல்லது......

அட்மினுக்கு ஒரு வேண்டுகோள் :

இத்தளத்தில் உள்ள உறுப்பினர்கள் அணைவரும் இவ்வாறு முகம் தெரியாமல் பழகுவதை விட வருடத்திற்கு ஒரு முறை , ஒரு நாளில் சந்தித்து.... மகிழ்ந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்..... எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த நாம் அணைவரும்... தாய் மொழியாம் தமிழால் நாம் ஒன்றினைய இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என்பது எனது விருப்பம்....... ஆதலால் இதற்கு முடிந்தால் அட்மினோ அல்லது இத்தளத்திலுள்ள யாராவதோ முயன்றால் மிகவும் நலமாயிருக்கும்......

கடந்த ஒரு வருடமாக நான் இத்தளத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றேன்.... ஆரம்ப முதல் இத்தளம் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றது....மிகவும் மனதார எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்......

இத்தளத்தில் புதியதாக சேரும் நண்பர்கள் முதலில் தங்கள் விபரங்களை நிரப்பும் போதே,,, தமிழில் டைப் செய்யும் முறையைப் பற்றி சொல்லி தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்......

மேலும் இப்போது எங்களின் பதிவுகளில் பழைய பதிவுகளை மீண்டும் எங்களால் பார்க்க முடியவில்லை.... ஆதலால். நாங்கள் பதிந்த பழைய பதிவுகளை நாங்கள் பார்க்க வசதி ஏற்படுத்தினால்... இன்னும் சிறப்பாக இருக்கும்....... தயவுசெய்து இதற்கு ஏதேனும் வழி ஏற்படுத்தினால் இன்னும் எங்கள் மனம் தங்களுடைய சேவையில் ஈடுபடுத்த நன்றாக இருக்கும்.....


கருத்துகள்

Ragavan's படம்

மிக நன்று.. நீங்கள் சொன்னபடி


மிக நன்று.. நீங்கள் சொன்னபடி நடந்தால் சந்தோஷம்தான் நண்பரே....
ஊர் கூடி தேரை இழுப்போம்...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


vinoth's படம்

நண்பர் ஜோஷி, இதே கருத்தை


நண்பர் ஜோஷி,

இதே கருத்தை முன்பு குமரன் அவர்களும் தெரிவித்திருந்தார். சந்திப்பு சாத்தியப்படுமா என்பது சந்தேகம். அனைவரும் ஒரே இடத்தில் அல்லது கொஞ்சம் பக்கத்தில் இருந்தாலாவது இது சாத்தியம். அப்படி இருப்பவர்களும் அதிக முனைப்புடன் இல்லாமலே இருக்கிறார்கள்.
சந்திப்பது முக்கியமல்ல. சந்தித்து என்ன சாதிக்கப்போகிறோம் என்பதும் முக்கியம். வெறும் நட்பு ரீதியான சந்திப்பு என்றால் தளத்தின் உறுப்பினர்களாகவே சந்தித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

தமிழ் தளமாக இருப்பினும் நட்புப்பாலம் என்பதை டேட்டிங் அளவில் போவது அவரவர் கையில் உள்ளது. ஏனென்றால் நண்பராக இணையாதவர்கள் அவர்களுக்குள் தனிப்பட்ட செய்தி அனுப்ப இயலாது. அப்படியே அனுப்பினாலும் அது பிடிக்கவில்லை எனில் நண்பரில் இருந்து விலக்கிக்கொள்ளவோ அல்லது தனிப்பட்ட செய்தி அனுப்பாமல் செய்யவோ வழி உள்ளது. அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மற்றபடி பழைய உறுப்பினர்கள் வருவதும் வராததும் அவரவர் தனிப்பட்ட உரிமை. அதில் சொல்வதற்கு ஏதுமில்லை. தளம் பிடித்திருந்தால் அல்லது பயனுள்ளதாக இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

இன்னுமொரு முக்கிய விசயம், தமிழ் நண்பர்கள் கூகிள் குழுமம் ஒன்று இருப்பது பலருக்கு தெரியாது. வருத்தமான விசயம், குழுமம் மற்றும் இணைய தளம் தனித்தனி போல இயங்குவது தான். அங்கு இருப்பவர்கள் அதிகமாக இங்கே இல்லை. இங்கே இருப்பவர்கள் அதிகமாக அங்கே இல்லை. முகவரி http://groups.google.com/group/Tamil2Friends

நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...