துலா லக்கினத்தில் பிறந்த ஜாதகர்கள் தராசுக்கோலின் சமநிலைக்கேற்ப ஏற்றத்தாழ்வுகளும் சமநிலையான குணங்களும் அமையப்பெற்றவர்கள்.
புகழ்பெற்ற இந்த லக்னத்தில் மாவீரன் நெப்போலியன், ஆறாம் ஜார்ஜ் மன்னர், இரண்டாவது மகாயுத்தத்தின் போது உலகத்தையே ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர், சைதன்னிய மகாபிரபு, அத்ரி மகரிஷி, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, பாரதத்தின் விடுதலைப்போருக்காக அரிய பெரிய தியாகங்களைப் புரிந்து, நமது இந்திய நாட்டினுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தேசப்பிதா அண்ணல் காந்தி மகாத்மா, அக்பர், கர்னாடகத்தின் புலி என்று புகழப்பட்ட ஹைதர் அலி, ரஷிய நாட்டு சர்வாதிகாரி ஸ்டாலின், கண் பார்வையற்ற பிறபல பிடில் வித்துவான் துவாரம் வெங்கடசாமி நாயுடு, சர்.சி.பி. இராமசாமி அய்யர் ஆகிய அறிஞர்களும், சர்வதிகாரிகளும், நிர்வாகத்திரன் பெற்றவர்களும் பிறந்திருக்கிறார்கள்.
மூர்த்தி சிரிதெனினும் கீர்த்தி பெரிது என்ற உண்மை மொழியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ராசி நேயர்களின் குணபாவங்கள் அமைந்திருக்கும் தராசு எவ்வளவு சிறியதாகத் தோற்றமளித்தாலும் எவ்வளவு மதிப்புக்குரிய நுட்பமான பொருள்களையும் எடைப்போடப் பயன்படுவதைப் போல இந்த ராசி நேயர்கள் தோற்றத்தில் சிறியவர்களானாலும், பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் சாமர்த்தியமும் படைத்தவர்கள்-அவரவர் தராதரத்தை வெகு சீக்கிரத்தில் எடைபோட்டு நிர்ணயம் செய்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். இயற்கையாகவோ அல்லது உபயோகத்தின் விளைவாரோ தராசின் சமநிலை குறைந்தபோது நிறைவுபடுத்த ஒரு புறம் எடைக்கு ஆதாரம் வைத்து பிறகு எடை நிறுப்பது போல உங்களுக்குஇயற்கையாகவோ அல்லது செயற்கையின் விளைவாகவோ சில குறைபாடுகள் இருப்பினும் அவற்றை சரிப்படுத்திக் கொள்ளும் இயல்பு கொண்டவர்நீங்கள். பிறரை எளிதில் மயங்கிடச் செய்யும் வசீகரத் தோற்றம் இவர்களிடம் இயற்கையாகவே காணப்பட்டாலும் திருப்தி கொள்ளாமல் பிறர் கவனத்தைக் கவர்ச்சி செய்ய செயற்கை முறைகளையும் கையாள்வார்கள்.
ஆண்களாயினும் பெண்களாயினும் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களால் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். ஆண்களில் பெரும்பாலோர் வினோதமாக மீசையை வளர்த்துக் கொண்டிருப்பர். பெரும்பாலோர் மீசையைத் தராசுபோல் அமைத்துக் கொள்வதில் முழுக் கவனத்தையும் செலுத்துவர். ஒரு சிலர் மூக்கின் துவாரங்களுக்கு அப்பால் மீசை வளர்வது சரியல்லவென்று அக்கறையுடன் ஒதுக்கி வைப்பர். வேறு சிலர் மீசை எவ்வளவு நீளமாக அமைகிறதோ அவ்வளவு தூரம்வளர்த்து இருபக்கமும் முனையில் கூர்மையாக முறுக்கேற்றுவார்கள். ஒருசிலர் மீசையை பிரஷ்போல் அமைத்துக் கொள்வதுண்டு. ஆக மொத்தத்தில் பிறர் கவனத்தை ஈர்க்குமளவுக்கு தங்கள் மீசையை அழகுப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுபவர்கள் எனக்கூறலாம்.
பெண்களாக இருந்தால் நடு வகிடு எடுத்து இரட்டைப் பின்னல் பின்னிக்கொள்வர்-வயது வித்தியாசம் பாராட்டாத இந்த ராசிப் பெண்கள் நீங்கள் கூந்தலை விதம் விதமாக, கவர்ச்சிகரமாக அழகுபடுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுவர். செவியில் நீண்ட தராசு போன்ற ஆபரணங்களை அணிந்து கொள்வர். கண்களுக்கும், மேல் புருவங்களுக்கும் மைதீட்டி அழகுபடுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வர். இவர்களுக்கும் மற்ற பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கண்களில் வெளிப்புறத்திலும் மைக்கோடுகள் நீண்டிருக்கும். மூக்கின் இருபுறமும் துவாரங்கள் குத்திக் கொண்டு நகையணிந்து கொள்வர். இல்லையென்றால் மூக்கு குத்திக் கொள்ளாமலேயே விட்டுவிடுவர். மூக்கின் தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். இவர்கள் சிரித்தால் கன்னத்தின் இருபுறமும் அழகான சிறு குழி விழும். இவர்கள் இயற்கையாகவே அழகு வாய்ந்தவர்களாயினும், அத்துடன் திருப்தி கொள்ளாமல் செயற்கையாக அழகுபடுத்திக் கொள்வர்.
ஆண், பெண் யாராயினும் தோற்றத்தில் குள்ளமாக காணப்படுவர். இவர்களுக்கு வாய்க்கும் கணவன்-மனைவி அல்லது கூட்டாளிகள் இவர்களைவிட உயரமாகக் காணப்படுவர். மூக்கும் முழியும் லட்சணமாக இருக்கும். உங்களுக்கு உதடுகள் அசைந்தும் அசையாமலும் மேல்பல் வெளியே தோன்றும்படி அமைந்திருக்கும். நீங்களே பேசுவதற்கு முன்பே சிரித்து விடுவீர் ஆயினும் பிறர் உங்களிடம் பேசுவதற்கு முன்பே கவனிக்காதது போல் காட்டிக்கொள்வீர். மெல்லிய குரல் படைத்தவர்களாயினும், ஸ்பஷ்டமாகப் பேசும் உங்கள் பேச்சில் உறுதி தொனிக்கும். உங்களுக்கு முகத்திலோ அல்லது உதட்டிலோ சிறிய காய வடு அல்லது கறுப்பு மச்சம் இருக்கும்.
நேர்மையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் பிறர் நெறி தவறும்போது கோபம் கொள்வர். தராசுக்கோல் எந்தப் பக்கம் பாரம் அதிகமாகிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து கொடுப்பது போல் காணப்பட்டாலும், முடிவு இவர்களுடையதாகத்தான் இருக்கும். கோலைச் சாய்த்த போதிலும், தட்டுபாரத்தை சரியாக விட்டாலும் தராசுக்கோல் மீண்டும் சமநிலையை எய்வது போன்ற நடு நிலையான சுபாவம் கொண்டவர். இந்த சுபாவத்துக்கொப்ப இவர்கள் மேலிருந்து கீழிறங்குவதும், கீழே இருந்த மேலே ஏறுவதும் உண்டு. மாடியில் குடியிருப்பதாலும், மாடியில் தொழில் புரியும் அமைப்பு ஏற்படுவதாலும் இவர்களுக்கு இந்த மாதிரி சூழ்நிலை ஏற்படலாம். இது போலவே இம்மாதிரி ஏற்றத்தாழ்வுகள் இவர்களது வாழ்க்கையிலும் அமைந்திருக்கும் என்பதை நிதரிசனமாகக் காணலாம். தந்திரம் என்பதை உங்களிடம் காணமுடியாது. ஆனால் ஆத்திரம் தாங்கமாட்டீர்கள். உங்களுடைய மனோ நிலையை உங்களது கண்கள் வெளிப்படுத்திக் காட்டும். நீதியையும் நேர்மையையும் நிலை நாட்ட வேண்டுமென்பதை இலட்சியமாகக் கொண்ட நீங்கள் சட்ட திட்டங்கள் நீதிக்கு இடந்தராததைக் கண்டு சில சமயங்களில் சோர்வு கொள்வீர்கள்.
இந்த லக்னத்தின் முதற் பாகத்தில் பிறந்த ஜாதகர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், யோகபோகங்களிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் விருப்பம் கொண்டு அவ்வாறே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். எந்தக் காரியத்திலும் மிகவும் சுறுசுறுப்புடன் ஈடுபடும் இவர்கள் வாய்ப்புகள் தளர்ந்த போதிலும் மனந்தளராமல் மகிழ்ச்சியுடன் எதையும் ஏற்றுக் கொள்வார்கள். இவர்களுடைய வாழ்க்கை சந்தோஷகரமாகவே அமைய அவர்களது மனமும் குணமுமே காரணங்களாக விளங்கும்.
நீங்கள் எப்போதும் ஏதாவதொரு கவலையுடன் விளங்குவீர்கள். நிதான சுபாவமுடையவர்களாதலால் எக்காரியத்திலும் மிகமிக நிதானமாக ஈடுபடுவீர்கள். ஆழ்ந்த ஆலோசனை செய்தபின் முடிவு எடுக்கக் கருதி, கருத்துக்கு எட்டியது செயலில் ஈடுபடுவதற்கு முன்னமேயே மறைந்து விடும் அல்லது பிறரால் பறிக்கப்படும். எப்பொழுதும் கவலையே உங்களை சோர்வடையச் செய்ய தோடல்லாமல். உங்களது ஆர்வத்தையும், திறமையையும் குன்றிடச் செய்யும், நிரந்தரமான இன்பத்தைக் காண முயற்சி செய்தாலும் தோல்வியே அடைவீர்கள். சந்தோஷம் என்பது உங்களுக்கு கானல்நீர் போல் தோற்றமளிக்கும். இதற்கு உங்களது வீண் சந்தேகமும், தயக்கமுமே காரணம்.
நீங்கள் ஜாலியான பேர்வழிகளென்றே கூறவேண்டும். இருந்தபோதிலும் தங்களுடைய மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ வெளியே காட்டிக் கொள்ளமாட்டீர்கள். எதிலும் பற்றில்லாதவர் போல காணப்படுவீர். ஆனால் பிறரை எப்போதும் கேலி செய்வதில் வல்லவர். பிறர் சிரிக்கும்படி பேசும் நீங்கள் ஹாஸ்ய நடிகர்களாகவும், விதூஷகர்களாகவும் தோன்றி பிறரை களிப்பூட்டுவீர். தம் கொள்கை மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்காக பேச்சினிடையே வினோதமான துணுக்குகளை அவ்வப்போது ஒவ்வொன்றாக ஹாஸ்ய ரசத்துடன் இணைத்துப் பேசி தம் கொள்கையை பிறர் மனதில் புகுத்துவீர்கள். சமூகத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ளும் நீங்கள் எளிய வாழ்க்கையில் பேரானந்தம் கொள்வீர். பெரிய பதவி வகித்தபோதிலும் அல்லது அந்தஸ்துக்கேற்ப வாழ்க்கைத் தரம் உயர்ந்த போதிலும் ஏழை எளியவர்களிடம் பாகுபாடின்றி ஓரளவு மறைவுமின்றி திறந்த உள்ளத்துடன் பழகுவீர்கள். “கிட்டாதாயின் வெட்டெனமற” என்ற பழமொழிக் கொப்ப கிடைத்தவற்றில் திருப்தி கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வீர்கள்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்த கருத்துகளை நன்றாக தீர யோசித்த பின் தான் வெளியிடுவர். சாதாரணமாக பிறருக்கு வாக்களிக்க மாட்டார்கள். வாக்களித்தபின் எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் பின்வாங்காது கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தயங்க மாட்டார்கள். நீதி, நேர்மை, நெறி முதலியபண்புகளைக் கொண்ட இவர்கள் உண்மைக்காகவும் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் சரளமாக வாதிடுவார்கள். சட்ட திட்டங்களை வேறுக்கும் இவர்கள் நீதியை நிலை நாட்ட சட்டதிட்டத்தைத் தளர்த்தும்படி வாதாடுவார்கள். இவர்களைப் பின்பற்ற பெருவாரியான மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்.
வாக்கு சாதுரியமுடையவர்களானாலும் சில சமயங்களில் கோபாவேசத்துடனும், ஆத்திரத்துடனும் பேசுவர். அணியணியாக தர்க்க நுணுக்கத்துடன் எப்பொருளைப் பற்றியும் காரிய காரணங்களுடன் விளக்கிப் பேசி கேட்பவர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் திறமை பெற்ற இவர்கள் வக்கீலாகவோ அல்லது நீதிபதியாகவோ பதவி வகிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்கள் என்று கூறினால் மிகையாகாது.
சம நோக்குடைய இவர்கள் அதிக சரீர பிரயாசை கொள்ளாதவர்கள். அதிக கஷ்டத்தையும் உங்களால் சகிக்க முடியாது. கற்பனா உலகில் நீங்கள் சஞ்சரிப்பதால் நீங்கள் போடும் திட்டங்களைப் பிறர் புரிந்து கொள்வது மிகக் கடினம். பெரும்பாலும் ஆழ்ந்த யோசனை உடைய நீங்கள் எந்தக் காரியத்தையும் சீர்தூக்கிப் பார்த்து லாப நஷ்ட கணக்குகளை ஆராய்ந்து பார்த்த பின்புதான் இறங்குவீர். பிறருடைய ஆலோசனைகளை எளிதில் அங்கீகரிக்காத நீங்கள் தம்முடைய அபிப்பிராயத்தை மட்டும் வெளியிடும் சுயநலவாதிகள். பிறர் யோசனைக்கு இடம் கொடுக்காத நீங்கள் தம்முடைய ஆலோசனைகளைப் பிறர் அங்கீகரிப்பார்களென்ற நம்பிக்கை உடையவர்கள். மக்கள் அபிவிருத்தியில் கவலைகள் நிறைந்து காணப்படும் சம நோக்குடையவர்களாயினும், சமயத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப பசையுள்ள பக்கம் சாய்ந்து கொடுப்பார்கள்.
வாழ்க்கையில் பல விவகாரங்களில் உங்களுடைய சூழ்நிலையை சரிக்கட்டுவதற்கே உங்களுடைய வாழ்நாள் வீணாகக் கழியும். உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்ற பேராவல் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் நீதி, நெறி, சமயம், சட்டதிட்டங்களை ஆயுதங்களாகக் கொண்டு எதற்கும் சளைக்காமல் போராடும் உங்களை கண்டு மற்றவர்கள் அஞ்சுவார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதைவிட, தோல்வியுறாமல் போவதுதான் பெரிதெனக் கருதும் நீங்கள் தோல்வியுற்றாலும் துவண்டு போகாதவர்கள்.
போக்கு சாதுரியம் மிகவும் படைத்த உங்களிடம் பேச்சுக்கொடுத்து வெற்றி பெறுவது மிகக் கடினம். ஓபாமல் பேசக்கூடியவர் அல்லராயினும் உங்களுடன் பேசும்போது மிக ஜாக்கிரதையுடன் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். ஏனெனில் பிறர் பேச்சில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பதே அவர்களது குறிக்கோள். பிடி எங்கு அகப்படும் என்று சமயம் பார்த்துக் கொண்டே இருக்கும் நீங்கள் அகப்பட்டால் எளிதில் விடமாட்டீர்கள். பிறர் பேசுவதை வெட்டிப்பேசுவதில் உங்களுக்கு அலாதிப் பிரியம். நேர்மையும், நியாயமும் வார்த்தைகளில் தொனிக்கும்.
உங்களை அறியாதவர்கள் சண்டப் பிரசண்டர் என்று தவறாகக் கருதிவிடுவதும் உண்டு. ஆனால் சுபாவமாகவே இவர் பேசுவது பிறருக்கு வாதாடுவதுபோல் தோன்றும். வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் ஒளிவு மறைவின்றி சரளமாகப்பேசும் நீங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் பெட்டிப் பாம்புபோல அடங்கிவிடுவீர். இந்த லக்கினத்தில் உதித்தவர்கள் வழக்கறிஞர்களாக இருந்தால் நீதிபதிகளும், நீதிபதிகளாக இருந்தால் வழக்கறிஞர்களும் இவர்களிடம் திணறுவார்கள்.
பெரும்பாலும் குடும்பத்தில் இவர்களுக்கு மூத்தவர்கள் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தாலும் பெற்றோர் இந்த ராசி நேயர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்தக் காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஒரு சிலருக்கு மூத்த சகோதரர்களுக்குத் திருமணம் நடப்பதற்கு முன்னமேயே திருமணம் நடந்து விடும். சிறுவயதிலேயே குடும்பப் பொறுப்பு ஏற்பட்டு குடும்பத் தலைவன் என்ற பெயரும் ஏற்பட்டு விடும். திருமணத்துக்குப்பின் மனைவி மக்களின் உடலாரோக்கியம் தளர்ச்சியுறுவதால் ஏதாவது ஒரு கவலையில் ஈடுபட்டிருப்பர். சதாகாலமும் மருந்தும் கையுமாக இருக்க வேண்டிய வரும். பெரும்பாலோர்க்குத் திருமணம் ஆகி வெகு நாட்கள் ஆகியும் குழந்தை பிராப்தி ஏற்படுவதில்லை. மனைவி கருத்தரித்து பலமுறை கருச்சிதைவு ஏற்படும்; அல்லது உயிருடன் குழந்தைகள் பிறந்தாலும் உயிர் தரிப்பது துர்லபமாகும். நெடுநாள்கள் புத்திர பிராப்தி இல்லாததால் கவலை மிகுந்து தீர்த்த யாத்திரைகள் புரியவும் நேரிடும். சாந்தி தோஷபரிகாகங்களைச் செய்தபின் சந்ததி-ஏற்பட்டு குடும்பம் விருத்தியாகும். அனேகமாக இவர்களுக்குப் பெண் குழந்தைகள் தான் அதிகமாகப் பிறக்கும். ஆரம்பத்தில் குழந்தைகளே இல்லையென்று கவலைப் பட்டவர்களுக்கு ஆயுள் முடியும் காலத்தில் கருத்தடை முறைகளைக் கையாளக் கூடிய அளவுக்கு அதிக குழந்தைகளைப் பெற்றிடுவர்.
குடும்பப் பொறுப்பு உங்களுக்கு அதிகமாகையால் உங்கள் கையில் பணம் தங்குவது அரிதாகும். தராசில் எடை போடுவதுபோல் வரவும் செலவும் சரிசமமாகவே இருக்கும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற முதுமொழிக்கொப்ப உங்களது வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கையில்பணம் வருவதற்கு முன்பே செலவினங்கள் காத்துக் கொண்டிருக்கும். தப்பித் தவறி ஏதாவது சேமிப்பு நிதியில் பணம் சேர்க்க நினைத்தாலும் எதிர்பாராத செலவுகள் தோன்றி உங்களைத் திக்கு முக்காட வைக்கும். இவரைவிட இவரது மனைவி இரண்டு பங்கு செலவாளியாக இருப்பதும் உண்டு. ஆனால் செலவுக்கேற்றபடி பணஉதவி எந்த நேரத்திலும் தாராளமாக கிடைக்கும். குடும்ப நிலையையும், எதிர்காலத் தேவைகளையும் முன்பே அறிந்த நீங்கள் ஸ்திர சொத்துக்களை வாங்குவதிலும், நிலம், வீடு முதலிய ஸ்திரப் பொருள்களை வாங்கிச் சேர்த்துக் கொள்வதிலும் கருத்தைச் செலுத்தினால் பிற்கால வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் செலவுகளுக்குப் பயன்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்களுடைய குடும்பத்தினருக்கும், மக்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கும், மனைவியின் ஊதாரியான குணத்துக்கு ஏற்ப தாராளமாகச் செலவு செய்யவேண்டுமென்ற தருணத்தில் வேண்டுமானால் எதிர்பாராதவிதமாக பணவசதி ஏற்படுமே தவிர, தன்னுடைய சுகத்திற்காகவோ, ஆடம்பர வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவோ, பெற்றோர் உடன்பிறந்தோர்க்கு உதவி புரியவோ, தாயாருடைய குறைகளைத் தீர்க்கவோ உங்களுக்குப் பணம் பெயராது.
பிறருக்கு உபகாரமாகவும், நீண்டநாள் கடன், வட்டி செலுத்தவும், உயர்ந்த வாடகை செலுத்தவும் உங்களுடைய பணம் செலவாகுமே தவிர கையில் தங்காது; உடனுக்குடன் செலவாகம். ஆனால் கேட்ட இடத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தாராளமாகக் கிடைக்கும் எனினும் நிரந்தர வருவாய் எப்போதும் உங்களுக்கு இருக்கும். இறுதிவரை சுலபமாகச் சம்பாதித்து தனது சந்ததிகளுக்குச் சேமித்து வைத்த பிறகுதான் ஓய்வுபெற்று அமைதி கொள்வர்.
பரோபகார சிந்தையுடையவர்களாதலால் நல்ல காரியங்களக்காகவும், பொது நல சேவைக்காகவும் அடிக்கடி செலவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். வெளியூர்ப் பிரயாணங்களையும், தூரதேச யாத்திரைகளையும் அடிக்கடி மேற் கொள்வதாலும் பிரயாணச் செலவுகளும் அதிகரித்துக் காணும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், இவர்களுடன் பிறந்த சகோதர-சகோதரிகளுக்கும் ஒற்றுமை நீடித்திருக்காது. வெளியுலகுக்கு ஒற்றுமையாக இருப்பதுபோல காணப்படினும், உள்ளூ¬ வேற்றுமை கலந்துகாணப்படுவர். இவர்களுடைய சுகக்குறைவுக்கு இவர்களது உடன் பிறந்தவர்களே காரணமாக இருப்பார்கள். இவர்கள் மனம் இளகி தம் சகோதரர்களுக்கு தம்மால் இயன்ற உதவி புரிய எத்தனித்தபோதிலும் சூழ்நிலை இதற்கு நேரிடையாக ஏற்படும்.
இந்த லக்னத்தில் தோன்றியவர்கள் முயற்சி குன்றாதவர்கள். இவர்கள் முயன்ற காரியங்களில் எதிர்ப்புகள், இடையூறுகள் தோன்றி மனதைச் சஞ்சலப்படுத்தினாலும் ஓரிரு முயற்சியிலும், தேர்ச்சியிலும் தவறினாலும் மிரட்சியடைய மாட்டார்கள். உறுதியும், உற்சாகமும் கொண்டு பிறர் சாதிக்க முடியாத காரியங்களையும் இறுதியில் வெற்றியுடன் சாதித்துக் காட்டுவார்கள். பெரும்பலனை எதிர்பார்த்து முயற்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் வெற்றிபெற்று புகழ்மாலை சூடுவார்களேயன்றி வெகுமதி ஒன்றும் கிடைக்காது. பதவி, அந்தஸ்து, கௌரவம், செல்வச் சிறப்பு, குடும்பநிலை, கல்வி முதலியவை இவர்களின் ஆற்றலை மாற்றிடாது.
இவர்கள் கொண்ட லட்சியங்கள் நிறைவேறுவதற்கும் இவை குறுக்கே நிற்காது. இந்த லக்னத்தில் தோன்றிய பெரும்பாலோர் தங்கள் சூழ்நிலைக்கேற்ப குடும்பகௌரவத்திலும், சமூகத் தொண்டிலும், அரசியல் சேவையிலும் கல்வி வளர்ச்சியிலும், ஞான மார்க்கத்திலும், நல்ல கீர்த்தியுடன் திகழ்வார்கள். தோல்வியிலும் இவர்கள் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். சிலர் ஆழம் தெரியாமல் சில காரியங்களில் இறங்குவதால் திக்கித் திணறி மூழ்கி தட்டுத் தடுமாறி கரையேறிவிடுவார்கள்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வயது வளர வளர தாயாரின் பற்றுதல் குறையும். ஒரு சிலர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் வயதுவந்ததும் தாயாரின் ஆதரவை இழப்பார்கள். இவர்களுக்கென்று தனிக்குடும்பம் ஏற்பட்டதும் தாயாருக்கும் இவர்களுக்கும் பரஸ்பர நேசம் குறைந்து இருவரும் பிரிந்து வாழ்ந்திடுவார்கள். இல்லையெனில் தாயின் அன்பும், ஆதரவும் குறைந்து காணும். ஒரு சிலருக்கு கல்வி முடிவதற்கும் தாயார் விதி முடிவதற்கும் சரியாக இருக்கும். தாயாரின் விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்து கொள்வார்கள். அல்லது குடும்ப வாழ்க்கை நடத்தும் போது தாயார் இவர்களிடத்தில் இருக்கமாட்டார்கள்.
ஏழை எளியவர்களுக்கு உதவிபுரிவதும், கஷ்ட நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் துயரத்தில் ஆழ்ந்தவர்களை மீட்பதும் இவர்களுக்கு சுகமளிக்கக்கூடிய விஷயங்களாகும். இயற்கையாக இவர்கள் சுகமளிக்கக்கூடிய விஷயங்களாகும். இயற்கையாக இவர்கள் சுகமனுபவிக்கக் கூடியவர்கள் அல்லரானாலும் மற்றவர்களுக்கு சுகத்தை அளிக்கக் கூடியவர்கள். சிறுவயதில் பெரும்பாலும் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல சுகத்தை இவர்கள் அனுபவித்திடுவார்கள். குடியிருக்க நல்ல வீட்டு வசதியும், வாகன வசதியும் பின் வயதில் இவர்களுக்கு நன்கு அமையும். நடுவயதுவரை பிறர்களுக்காக வாதாடுவதும், போராடுவதும் இவர்களுடைய லட்சியங்களாகும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தம்முடைய சுய முயற்சியால் கல்விப் பயிற்சியில் நல்லசிரத்தை செலுத்தி உயர்ந்த கல்விச் சிறப்பை அடைவார்கள். பெரும்பான்மையோர் பட்டதாரிகளாக விளங்குவார்கள். இரும்பு, காந்தம், இயந்திரம், உலோகப்பொருள்கள் முதலிய அம்சங்களுக்குண்டான எலக்டிரிகல் என்ஜினியரிங், காட்டு இலாகா பயிற்சி, மெகானிக்கல் என்ஜினியரிங், சுரங்க வேலை நிபுணத்துவம், டைப்ரைடிங், டெலிபோன், டெலிகிராப் ஆகியவற்றில் தொழிற் பயிற்சிகளைப் பெற்று தங்களுடைய திறன், ஊக்கம் இவற்றுக்குத் தக்கவாறு தேர்ச்சியடைவார்கள். ஆனால் எதிலும் தயக்கமும், நிதானமும் இருந்தே தீருவதால் ஒரு சிலர் ஓரிரு முயற்சிசெய்த பின்னர் தான் தேர்ச்சி அடைவார்கள். ஒரு சிலர் தங்கு தடையின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறுவார்கள். ஒரு சிலர் சட்டக்கல்வி பயின்று அதில் தேர்ச்சியும் திறமையும் பெறுவார்கள்.
அனேகமாக இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் சந்ததியே இருக்காது எனலாம். அப்படி இருந்தாலும் மிகக்குறைவாகவே இருக்கும்; பெண்மக்கள் அதிகம் உண்டு அதுவும் வயது கடந்த பிறகுதான் ஏற்படும். பிள்ளைகளால் இவர்களுக்குக் கவலைகள் தான் அதிகம் ஏற்படுமேயன்றி அவர்களால் சுகமோ, வசதியோ, ஆதரவோ ஏற்படாது. பிள்ளைகளால் இவர்களுடைய வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் சம்பாதனையில் பெரும்பகுதி செலவிட நேரிடும். சில சமயங்களில் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் மன வேற்றுமையும் அதிகரிக்கும்.
இந்த லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சாதாரணமாக எந்த நோயும் அணுகாது. நோய் தோன்றினாலும் உடனுக்குடன் குணம் அடைவர். வாதம், வாயு, சிலேஷம் சம்பந்தமான அயர்வுகள் அவ்வப்போது தோன்றி வாட்டினாலும், நிரந்தரமாக இடம் பெறாது. இவற்றுக்குக்காரணம் ராசி நேயர்கள் அவ்வப்போது உட்கொள்ளும் பக்குவமில்லாத பொருள்களேயாகும். கிழங்கு வகைகள், கடலைப் பருப்பு, மாமிசம், கொழுப்பு வகைப் பண்டங்கள், எண்ணெயில் செய்த பலகாரங்கள் சீக்கிரம் ஜீரணமாகாத வஸ்துக்கள் இவையாவற்றையும் இவர்கள் நீக்கவேண்டும். இதுவுமில்லாமல் நேரம் தவறி இவர்கள் உணவு உட்கொள்ளுவதே பெரும்பாலும் அஜீரணக் கோளாறுகளுக்குக் காரணமாகும். சாப்பிட்டு நெடுநேரம் புளியேப்பம் மூச்சுக்கொரு வந்துகொண்டே இருக்கும். சாப்பிட்டவுடன் வயிற்று வலியும், உடலாயாசமும், வாய்க்குமட்டல் உமிழ் நீர் சுரந்து கொண்டே இருத்தல் போன்றவை அடுத்த படியாகத் தோன்றும். இத்தகைய குறிகளைக் கண்டதும் இரண்டு மூன்று நாட்களுக்கு அன்ன ஆகாரமில்லாமல் உபவாசமிருந்தால் எல்லாம் சரியாகிவிடும். இத்தகையோர் பக்குவமாகவும் பத்தியமாகவும் இருத்தல் மிக அவசியம். சிலர் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவதை விடுத்து உச்சி நேரத்துக்கு முன்பு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்வராயின் இவர்களுக்கு எந்த நோயும் அணுகாது. பச்சைமிளகாய், பச்சை மாங்காய் முதலியவற்றை விலக்கவேண்டும். இதுபோலவே இரவு வெகுநேரம் கண் விழித்திருப்பதையும், நேரம் கழித்து சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த லக்ன ஜாதகர்களுக்கு பெரும்பாலும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகவே கடன் ஏற்படும். தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகவும், வாகனச் சேர்க்கையாலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவும், வியாபார முன்னேற்றத்துக்காகவும் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் இவர்கள் குறைந்த வட்டிக்குத் தான் கடன் வாங்குபவர்களாதலால் கூட்டுறவு சங்கங்கள் பாங்கி சேமிப்பு நிதி போன்றவற்றில் நீண்ட நாள் செலுத்தக்கூடிய கடன்களைத்தான் வாங்குவார்கள். வட்டியில்லாக் கடனும் இவர்களுக்கு கிடைக்கும். கடன் பெறுவதில் இவர்களை பாக்கியசாலிகள் எனலாம். ஏனெனில் இவர்கள் கேட்ட இடத்தில் கடன் தாராளமாக கிடைக்கும். நியாயவதிகளானதால் வழக்கு வியாஜ்யங்களில் இவர்களுக்குத் தான் வெற்றி ஏற்படும்.
மகளின் உடல்நலக் குறைவும், மனைவியின் உடல சதியும் ஜாதகர்களுக்குக் கவலைதரும் அம்சங்களாகும், அடிக்கடி சிகிச்சை செய்ய நேரிடுவதால் மருத்துவ செலவுகள் அதிகமாக ஏற்படும். தம்மைப்பற்றி எப்போதும் கவலைப்படாத இவர்களுக்கு பெண்களைப் பற்றிய கவலைகள் ஏற்படும். இவருடைய இளைய சகோதரர்களாலும் கடனும் கவலைகளும் ஏற்படும். இவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் அல்லது கவலை இருந்து கொண்டே தானிருக்கும். ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவதும், பிறர்க்காக உழைப்பதிலும்தான் தன் கவலைகளையும் நோயையும் மறக்க முடியும்.
திருமணமானபின் பொறுப்புடன் குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்தி அரும்பாடுபட்டு தம்முடைய சுயநிலையை உயர்த்திக் கொள்ளப்பாடுபடுவீர். யாருடைய ஆதரவையும் எதற்கும் எதிர்பார்க்கும் நிலைமை உங்களுக்கு ஏற்படாது. அதற்கு நீங்கள் செய்த பாக்கியம்தான். நிராதரவான நிலையிலும், எத்தகைய மனக்குறைகள் ஏற்படினும் தம்பதிகள் ஒருவரைவிட்டு மற்றவர் பிரிந்திருக்கமாட்டார்கள். உங்களுக்கு அமையும் மனைவியும் உங்ளுடைய தேவைகளை முன்கூட்டியே யூகித்தறிந்து அதன்படி நிறைவேற்றக் கூடிய புத்தி சாதுரியமுடையவர்கள். வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் முடித்துக் கொண்டு உங்கள் தேவைக்கேற்ப காலமறிந்து உணவளிக்கும் மனைவி வாய்ப்பது இவர்கள் செய்த பாக்கியமேயாகும். உங்களுக்கு வாய்க்கும் இல்லாள் சகலவசதிகளையும் பொறுப்புடன் கவனித்துக் கொண்டு உங்ளுடைய வருவாயில் குடும்ப நிர்வாகத்தை நடத்திச் செல்லும் பாங்க பெற்றவள். இருப்பதைக் கொண்டு சிக்கனமாக வாழ்க்கையை நடத்திச் செல்வாள்.
இவர்களுடைய குடும்பத்தில் மனைவியின் கைதான் ஓங்கி இருக்கும். இவருடைய விருப்பங்களைவிட இவர்களின் மனைவியின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறிவிடும். இவர்களும் இதற்கு உடன்படுவார்கள். இவர்கள் அனேகமாக பெண்டாட்டி தாசர்களாக இருப்பதும் உண்டு.
உங்களின் மனைவிக்கு இரத்த சம்பந்தமான கோளாறுகளும், மாதவிடாய்க் கோளாறுகளால் கர்ப்பகோசத்தில் ஆயாசங்களும் ஏற்படலாம். ஒரு சிலர்க்கு கர்ப்பப்பை கோளாறுகளுக்கான ரண சிகிச்சை செய்யவும் நேரிடும். தலைசுற்றல், மயக்கம், ஓயாத் தலைவலி, அடிபடுவதால் ரணகாயங்கள், மேலிருந்து கீழே விழுவதால் எலும்பு முறிதல், இரத்தக்கட்டிகள், தீப்புண் போன்றவை ஏற்பட்டு சிகிச்சை பெற நேரிடும். திடீரென்று கணவன் கண்டித்தாலும் பதற்றமான வேலைகளையும் திட்டவட்டமாக செய்து முடிப்பார்கள். நோய் வந்தாலும் ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எதையும் தாமே செய்து முடிக்க வேண்டுமென்ற ஆற்றல் ஒரு புறமிருந்தாலும், மற்றவர் செய்வது இவர்களுக்கு பிடிக்காததினால் எல்லாக் கரியங்களையும் சுயமாகவே செய்து முடிப்பார்கள். மேலும் இவர்களது ஆதரவற்ற நிலையைக் கண்டுபரிதாபபடக் கூடியவர்களோ அல்லது அனுதாபம் தெரிவிக்கக்கூடியவர்களோ அல்லது அனுதாபம் தெரிவிக்கக் கூடியவர்களோ குடும்பத்தில் இருக்க மாட்டார்கள். இப்பெண் மணிகள் நற்பவழ மணியை அணிந்து கொண்டால் தம் தேகத்தில் இயற்கையான தடுப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம்.
நீங்கள்யாருடனும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது. உங்களால் கூட்டாளிகளுக்கு லாபம் ஏற்படுமேயன்றி அவர்களால் உங்களுக்கு எந்தவித ஆதாயமும் ஏற்படாது. கூட்டாளிகளால் உங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும். எனவே சகல உரிமைகளையும் சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொண்டு சுயமாகப் பாடுபடுவது சிறந்ததாகும். அப்படி கூட்டாளிகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமானால் மேஷம், மிதுனம், கும்பம் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுடன் கூட்டு சேரலாம். சிம்மம், துலாம், தனுசு ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பர். ரிஷப, கடக, கன்னி, விருச்சிக, மகர, மீனம் முதலிய லக்னங்களில் பிறந்தவர்களால் உங்களுக்கு பாதகமேயன்றி நற்பலன்கள் ஏற்படா. பண விவகாரங்களில் கண்டிப்பான பேர்வழியாதலால் பிறருக்கு விட்டுக் கொடுப்பவர்களல்லர். நயமாகப் பேசுவதோ காக்காய் பிடிப்பதோ உங்களுக்கப் பிடிக்காது இந்த குணம் படைத்தவர்களையும் உங்களுக்குப் பிடிக்காது. “யதார்த்த வாதி வெகுஜன விரோதி” என்ற பழமொழி உங்களுக்கே தகும். நெருங்கிய உறவினர்களை விட நண்பர்களிடத்தில் தான் அதிக பாசமும் பற்றுதலும் நீடித்து இருக்கும்.
இவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றவர்களாக இருப்பார்கள். சிறுவயதில் கண்டங்கள் ஏற்பட்டாலும் அதிசயிக்கத் தக்க விதத்தில் தப்பித்துக் கொள்வார்கள். ஆனாலும் வாழ்க்கையில் பல சோதனைகள், உடற்சோர்வுகள், விரும்பத்தகாக சம்பவங்கள் அடிக்கடி நேர்ந்து வரும். ஆகார விதியில் பத்தியமாத இருந்து வரின் இவர்களின் தேகாரோக்கியம் கெடாமலிருந்து வரும்.
நீங்கள் புதிய நவீன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக நிறைய செலவிடுவர். கணிதம், ஜோதிடம், வான நூல், மருத்துவ ஆராய்ச்சி, தத்துவசாஸ்திரம், புதிய நாவல்கள், தர்க்கசாஸ்திரம், உணவுப் பொருள் ஆராய்ச்சி, தினசரி, வாராந்திர மாதாந்திர பத்திரிகைகள் வாங்குவதற்கு அதிகமாக செலவிடுவீர்கள். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடுவதால் பிரயாண செலவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
லாப நஷ்டக் கணக்குகளை நன்கு பரீசீலனை செய்த பின்னரே எந்த திட்டத்திலும் ஈடுபடுவார்கள். ஆதலால் நஷ்டம் ஏற்படக்கூடிய விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். லாபம் ஏற்படும் வழிகளிலும் அதிக முதலீடு செய்ய துணிவு ஏற்படாது. வாழ்க்கையில் பல வழிகளில் செலவுகள் ஏற்படும்போது அவற்றைச் சரிக்கட்ட திட்டம் தீட்டி சமாளிப்பார்கள்.
நீங்கள் தீவிர தெய்வபக்தியுடையவர்கள். பெரியவர்களிடத்திலும் ஆசிரியர்களிடத்திலும் மிகுந்த பணிவு கொண்டவர்கள். பழைய சம்பிரதாயங்களை மீற மாட்டீர்கள். தயாள குணமும், இரக்க சிந்தையும், பரோபகார குணமும், தாராளமனமும் கொண்ட நீங்கள் தங்களால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி புரிந்திடுவார்கள். தம்மால் முடியாவிட்டாலும், உதவிபுரிபவர்களுக்கு சிபாரிசு செய்து உதவியளித்திடுவார்கள். இதனால் உங்களுக்கு அடிக்கடி செலவுகள் தான்ஏற்படும்.
உங்களுடைய தகப்பனாரும் நீண்ட ஆயுள்பெற்றவரே. ஆனால் தன்னிச்சைபோல் சுயேச்சையாக வாழ்நாளைக் கழித்திட போதுமான வருமானத்தைத் தேடிக்கொள்வர். உங்களுக்கு வேண்டிய அளவுக்கு பொருள் வசதியோ பணவசதியோ அளிக்காவிட்டாலும், உங்களுக்கு பாரமாக இருக்கமாட்டார்கள். உங்களுடைய தகப்பனார், தன் சொந்த சுகத்திற்காகவும் உறவினர்களை ஆதரிக்கவும் ஜாதகர்களின் கல்வி வளர்ச்சிக்கும் செலவு செய்துவிட்டு, உங்களுக்கு ஒன்றும் மிச்சம் வைக்காமல் இருப்பதும் உண்டு.
இந்த லக்ன ஜாதகர்களுக்கு அரசாங்க அல்லது அரசியல் தொடர்பு எந்த வகையிலும் இருந்தே தீரும் அரசாங்க உத்தியோகம் அமையும் அல்லது அரசாங்கத்துடன் காண்ட்ராக்ட் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வர். ஒரு சிலருக்கு போலீஸ் அல்லது இராணுவத்துறையில் வேலை கிடைக்கும். அல்லது இத்துறையில் உள்ளவர்களுடன் நட்பாவது, பழகும் சூழ்நிலையாவது ஏற்படும். ஒரு சிலர் பதிப்பாசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் அச்சுத் தொழில் போன்றவற்றில் ஈடுபடுவர். ஒரு சிலர் இரும்பு யந்திரம், சுழலும் கரணைகள், மின் சக்தியால் இயங்கும் தொழிற்சாலைகள், கலைகள் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் இவற்றில் ஈடுபட்டு நல்ல வருமானத்தைப் பெற்றிடுவர். உணவுப் பண்டங்கள், பால் வியாபாரம், காபி, டீ, ஓட்டல், உயர்ந்த ஜவுளி, வெண்ணிற வஸ்துகள் ஆகியவையும் சிலருக்குத் தொழிலாக அமையும்.
இவர்கள் உயர்ந்த அந்தஸ்தை வெகு சீக்கிரத்தில் அடைந்து, தன் உறவினர்களிடையே நல்ல செல்வாக்குடனும் கௌரவத்துடனும் விளங்குவர். தொழில்துறையில் மிக உயர்ந்த பதவிகளை பிறர் வியக்கத்தக்க அளவில் அடைந்து பேரும் புகழுடன் விளங்குவர். ஆயினும் தொழில் துறையிலும் இவருக்கு தாழ்வுகள் இருந்துகொண்டே இருக்கும்.
இன இந்த லக்னத்தில் பிறந்த மாதர்களின் பலன்களைப் பார்க்கலாம்.
இந்த லக்னத்தில் தோன்றிய நீங்கள் உருவத்தில் சிறியவராயினும் யாவரையும் எளிதில் கவர்ந்திடும் வசீகரத்தோற்றம் பெற்றவர்கள். எந்தக் காரியத்தையும் தங்களது பிடிவாத குணத்தினால் சாதித்துக் காட்டுவர். சுறுசுறுப்பான உங்களிடத்தில் சோம்பல் என்பதேயே காண்பதரிதாகும். எதையும் எளிதில் கிரகிக்கும் நுண்ணறிவு உடையவர்கள். கள்ளம் கபடமின்றி எல்லாருடனும் சரிசமமாகப் பழகும் திறந்த உள்ளம் படைத்தவர்களாயினும், படபடப்பாகப் பேசிடுவர். நியாயமானதைத் தயங்காமல் எடுத்துரைக்கும் நீங்கள் நியாயம் தவறுபவர்களைக் கண்டித்துப் பேசுவர். படாடோபமில்லாதவர்களும் ஆடம்பரத்தை வெறுப்பவர்களுமான நீங்கள் எளிய பொருள்களையே தேர்ந்தெடுப்பீர். உண்பதிலும் சிக்கன முறையையே கையாள்பவர்களாதலால் சிறிதளவே உண்பீர்கள். ஆனாலும் நேரம் தவறாது உண்பீர்கள். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடற்ற நீங்கள் நல்லவர்களிடத்தில்தான் சரளமாகப் பழகுவர். ஒழுக்கம், பண்பும் பூஷணமாகக் கொண்ட நீங்கள் சற்றும் ஏறுமாறாக நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கி விடுவீர்.
உங்களுடைய விருப்பத்திறிகேற்றவாறு உங்கள் வாழ்க்கை அமையும். தாம்பத்திய வாழ்க்கையில் சிறு விவகாரங்கள் தோன்றி வாக்குவாதம் ஏற்படுமேயல்லாது மனவேற்றுமை அல்லது ஒற்றுமை குறைவோ ஏற்படாது.. மக்களை நல்ல முறையில் வளர்ப்பதிலும், அறிவு புகட்டுவதிலும் நீங்கள் மிக்க சாமர்த்திய சாலிகள்.
நீங்கள் நித்திரைப் பிரியர்கள். தூங்குவதற்கு உங்களுக்கு பாய்-படுக்கை ஒன்றும் தேவைப்படாது. உட்கார்ந்தபடியே எவ்வளவு நேரம் வேண்டுமானலும் தூங்குவீர்கள். நேரம் கழித்து தூங்கச் சென்றாலும், அதிகாலையில் எழுந்து விடுவீர். உட்கார்ந்து கொண்டே தூங்குவதில் சமர்த்தர்கள் ஆனதால் இரயில், பஸ்களிலும் பிரயாணம் செய்தாலும் உங்களுக்குத் தூக்கம் கெடுவதில்லை.
நன்றி:-
ஜோதிடர்-அரிச்சந்திரன்
"பிரம்மகுரு ஜோதிட ஆராய்ச்சிமையம்"
http://hari1970.blogspot.com/



