இன்றைய உலகில் கைத்தொலைபேசி பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது. தொலைபேசி, பாடல், புகைப்படம், ஒளிப்படம், இணையம், மின்னஞ்சல் இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், குறுஞ்செய்திகள், தொடர்புகள், ஊடகம், தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில் ஒரு கைத்தொலைபேசியில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், அது தொலைந்து போனால், என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா? சிலவற்றில் பி. சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு அதன் மூலம் நம் தகவல்களைக் கணனிக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் கிடைப்பதில்லை.
இதேபோல ஒன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது இந்த சேவையின் பெயர் rஷிலீvலீnஇதனைத் தரவிறக்கி கைத்தொலைபேசியில் பதிய வேண்டும். இந்த மென்பொருள் வசதியும் சில கைத்தொலைபேசிகளில் மட்டுமே செயல்படுகிறது.
விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ் 60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது பதிப்பு ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது. இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, கைத்தொலைபேசியில் உள்ள அனைத்து தரவுகளையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
நன்றி :- தினகரன், இலங்கை.






