அன்பும் மதிப்பும் கொண்ட தமிழ் நண்பர்களே! தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழால்... தமிழிற்காக... நாம் இணைந்து உள்ளோம். ஆயினும், நமக்குள்ளே சிலருக்கு தமிழ் நண்பர்கள் தளம் வழங்கும் வசதிகள் பற்றி அறியாமலிருக்கலாம்.
எடுத்துக் காட்டாக:
1.தகவற் பெட்டி(Message)/மின்னஞ்சல்-நண்பர்களுக்குள் தகவல் பரிமாற உதவுகிறது.
2.அரட்டை(Chat)-நண்பர்களுடன் உடனடித் தகவல் பரிமாற்றம்(IM-Instant Message) செய்ய உதவுகிறது.
இதே போல இன்னும் பல வசதிகள் உண்டு.
முகநூல்(Facebook), கீச்சுகள்(Twitter) போன்ற சமூக வலைத்தளங்களை விட தமிழில் அதிக வசதிகள் தமிழ் நண்பர்கள் தளத்தில் இருப்பதாக நான் உணருகிறேன். முடிந்தால் தமிழ் நண்பர்கள் தளப் (Menu) பட்டியில் உள்ள தெரிவி(Option)களைச் சொடுக்கி(Click செய்து)ப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
தமிழால்... தமிழிற்காக... தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைந்த பின் சிலர் ஆங்கிலத்தில் பதிவு செய்வதைப் பார்த்த பின்; தமிழ் நண்பர்கள் தள வசதிகளைத் தெரிவித்து ஆங்கிலத்தில் பதிவு செய்வதைத் தமிழில் பதிவு செய்யுமாறு பணிவாகக் கேட்டுக் கொள்ளும் முயற்சி இது.
'ஏன் தமிழில் பதிவு செய்ய முடியாது? அல்லது தமிழில் தான் பதிவு செய்ய வேண்டும்' என்று அலசும் பகுதி இதுவல்ல. தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழில் பதிவு செய்ய இருக்கின்ற வசதிகளை அறிமுகம் செய்வதே இப்பதிவின் நோக்கம்.
கீழ் வரும் இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்.
Unable to Read Tamil Font? or Tamil Typing? http://tamilnanbargal.com/node/21270
இல்லையேல்
தமிழ் நண்பர்கள் தளப் (Menu) பட்டியில் 'தமிழ்' ஐத் தெரிவு செய்து; பின் தோன்றும் (Menu) பட்டியில் 'தமிழில் எழுத - Tamil Typing' ஐத் தெரிவு செய்து பயனீட்டுக.
இப்பகுதிக்குச் சென்றால் இயங்குநிலை(Dynamic/Uniccode) தமிழ் எழுத்துக்கள் அட்டவணை, தமிழ் தட்டச்சு மென்பொருட்கள், தமிழ் நண்பர்கள் தளத்தின் தட்டச்சு (http://tamilnanbargal.com/tamil-typing), கூகிளின் தட்டச்சு, நண்பர் virtualvinodh இன் அக்ஷரமுஹா மொழி மாற்றி (Font Converter) என்பவற்றை பார்க்க, பயனீட்ட, பதிவிறக்க முடியுமே!
இவற்றைப் பயன்படுத்தி தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழில் பதிவு செய்ய முன்வருமாறு ஆங்கிலத்தில் பதிவு செய்வோரிடம் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். இவற்றைப் பயன்படுத்துவதில் ஐயம் இருப்பின், தமிழ் நண்பர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். நண்பர்கள் எல்லோரும் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்.
தமிழால்... தமிழிற்காக... நாம் எல்லோரும் தமிழ் நண்பர்கள் தளத்தில் மட்டுமன்றி, எல்லா இணையத் தளங்களிலும் தமிழில் பதிவு செய்தால் தான், இணைய வழியிலும் தமிழால் உலகை நாம் ஆளமுடியும். தமிழ் இணையத் தளங்கள், தமிழ் பதிவுகள் பெருகினால் தமிழர் பக்கம் உலகம் திரும்புமே!
என் இனிய நண்பர்களே, தமிழ் நண்பர்கள் தளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் எல்லா இணையத் தளங்களிலும் தமிழில் பதிவு செய்ய உதவுங்கள். தமிழால்... தமிழிற்காக... தூய தமிழைப் பேண நாம் எல்லோரும் தமிழில் பதிவுகளை மேற்கொண்டு தமிழிற்காக எமது பங்களிப்பைச் செய்வோம்.
நான் எந்த வழியில் இணையத் தளங்களில் தமிழைப் பாவிக்கிறேன் என்பதை நீங்கள் கேட்கலாம். எனக்கு நானே செய்நிரல்(Program) தயாரித்துப் பாவிக்கிறேன். அதன் இணையப் பதிப்பை நீங்களும் பாவிக்க http://devkjeevan.webs.com/tamilfont.html என்ற இணைப்பைச் சொடுக்குக.
தமிழால்... தமிழிற்காக...
தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைவோம்!
உலகைத் தமிழால் ஆள
தமிழில் பதிவுகளை மேற்கொள்வோம்!
கருத்துகள்
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








